பயனர்:Ootykrishna

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோமாரிக்கல் இந்தக்கல்லை சன்னாசிக்கல் என்றும் ஏற்காடு மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த வகை கற்கள் சேலம்,தருமபுரி மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறது. இந்தக்கல்லைப்பற்றி அறிவதற்கு முன் கோமாரி நோய்பற்றி அறிந்துக் கொள்வது மிக அவசியமானது.

கோமாரி நோய் :

 இந்நோய் ஆடு,மாடு,பன்றி ஆகியவைக்கு ஏற்படும்  தொற்று நோய் ஆகும். இது வோகமாக பரவக்கூடியது. ஆனால் மனிதர்களும், கோழிகளும் இந்நோய் தொற்றில் பாதிக்கப்படுவது இல்லை.
 கோமாரி நோய்க்கு மூலக்காரணமாக இருப்பது 'A'வகை, 'O' வகை,  'C'வகை ஆகிய நுண்ணுயிரிகளே நோயினை உண்டாக்குகிறது, இதில் 'O' வகை நுண்ணுயிரியே  மிகுதியான அளவு கோமாரி நோயினை உண்டாக்குகிறது.
      மேலும் இது தவிர SAT1, SAT2, SAT3 என்ற வகை உயிரிகளும் ASIA1 என்ற நுண்ணுயிரியும் நோயை உண்டாக்குகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நோயின் அறிகுறியாக விலங்குகளின் உள்வாயிலும், நாக்கின் இரு பறமும்,கால் குளம்புகளைச் சுற்றியும் பாசிபயிறு அளவு கொப்பளங்களாகத் தோன்றி உடைந்து சிவப்பு நிறமாக மாறிவிடும் இதில் இருந்து 24 மணி நேரத்தில் நீர் வடிய ஆரம்பிக்கும். மேலும் நேய்க் கிருமிகள் இரத்தத்திலும் , உமிழ் நீரிலும் ,பாலிலும் வெளிப்படும்.
இவ்வாறு ஏற்படும்  நோயின் தன்மை கொடியதாக இருந்தால் கால்நடைகளின் இறப்பு எண்ணிக்கை 50% எட்டிவிடும்.
1951 - 1952 ஆம் ஆண்டில் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்நோயினால் பேரிழப்பு எற்பட்டது என்பது சான்றுகள் மூலமாக நாம் அறியும் உண்மையே.

ஏற்காடும் கோமாரிக்கல்லும்:

   கோமாரி என்ற கொடிய நோய் கால்நடைகளை தாக்கும்போது அதிகளவில் கால்நடைகள் இறந்து விடும், அவ்வாறு இறந்த கால்நடைகளை புதைத்தால்  நோய்கிருமிகள் மீண்டும் பரவும் என்பதால், நோய்கிருமிகள் முற்றிலும்  அழிக்கும் விதமாக கால்நடைகளை  எரித்தார்கள். இக்காலகட்டத்தில் இக்கொடிய நோயிக்கு மருந்தோ, மருத்துவமோ  இல்லை. அந்த சூழலில் கோமாரி நோயில் இருந்து பாதுகாக்க கற்பலகையின் மீது மேலும் கீழுமாக கோடுகளிட்டு அதன் இடையில் மந்திரக்குறியீகளை  செதுக்கி கோவில் மந்தை அல்லது பொதுவான இடத்தில் பூசைகள் செய்து நட்டுவைப்பார்கள். கால்நடைகள் நோயுறும்போது இந்தக்கல்லுக்கு மஞ்சள்,  வேப்பிலை கலந்த நீரை அதிக அளவில் ஊற்றி அந்த நீரை   கால்நடைகளை தாண்டச் செய்வார்கள் இதனால் நோய்நீங்கும் கால்நடைகளும் காப்பாற்றப்படும் என நம்பினார்கள்.
அதனால் கால்நடைகளுக்கு நோய் ஏற்படும் போது எல்லாம் பூசைகள் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி வருடத்திற்கு  ஒரு முறை பொங்கல் விழா நடைபெறும் நாட்களில் இந்த சடங்குகளை செய்து வந்தனர். 

தற்போது தடுப்பூசிகள் கால்நடைகளுக்கு அவ்வப்போது போடப்படுவதால் கால்நடைகளுக்கு நோய்கள் வருவது குறைந்து விட்டதாலும் தம் முன்னோர்கள் செய்த வழிமுறைகளை பின்பற்றி வருடம் ஒரு முறை பூசைகள் செய்யப்படுகிறது.

இந்த கோமாரி நோய் தீர்க்கும் என நம்பிய மந்திரக் குறியீடுகளை காலத்தால் அழியாத வகையில் பாறையின் மீதும் ஒரு சில ஊர்களில் வெட்டி வைத்துள்ளனர்.
   ஏற்காடு பகுதியில் மங்களம் பகுதியில் மனிதனின் உருவத்துடன் மிக நேத்தியாக வெட்டப்பட்ட கோமாரி கல் உள்ளது

மேலும் ஏற்காட்டில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் கோமாரிக்கல் இருந்தாலும் இவை ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டே காணப்படுகிறது.

இதன் காலம் சரியாக கணக்கிட வரலாற்று அறிஞர்களின் உதவி இருந்தால் தான் முடியும் என்பதே உண்மை..
                 நன்றி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ootykrishna&oldid=2457498" இலிருந்து மீள்விக்கப்பட்டது