பயனர்:Nivethika582000/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்மிசுதா முகர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 அக்டோபர் 1965 (1965-10-30) (அகவை 58)
மேற்கு வங்கம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்s
  • பிரணாப் முகர்ஜி (father)
  • சுவ்ரா முகர்ஜி (mother)
வாழிடம்புது தில்லி

சர்மிஸ்தா முகர்ஜி (Sharmistha Mukherjee) (அக்டோபர் 30, 1965) என்பவர் ஓர் அரசியல்வாதி, இயக்குனா் மற்றும் கதகளி நடனக் கலைஞா் ஆவார். இவா் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

மேற்கு வங்கத்தில் பிறந்த சர்மிஸ்தா முகர்ஜி டெல்லியில் வளர்ந்தார். இவரது தந்தை பிரணாப் முகர்ஜி ஆவார். பிரணாப் முகர்ஜி 13ஆவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார்.[1]

நடன வாழ்க்கை[தொகு]

முகர்ஜி 12 வயதில் முறையான நடனப் பயிற்சியைத் தொடங்கினார்.[2] அவரது இவரது நடன ஆசிரியர்களில் பண்டிட் துர்கலால், விதுஷி உமா சர்மா மற்றும் ராஜேந்திர கங்கனி ஆகியோர் அடங்குவர்.[3] தி இந்து இவரது நடனத்தினைப் "சாதித்தது" என்று பாராட்டி அவரது துல்லியமான அடிச்சுவட்டைப் பாராட்டியது.[3]

அரசியல்[தொகு]

சர்மிசுதா சூலை 2014இல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். அதன் பின்னர் இவர் கட்சி ஏற்பாடு செய்த பேரணிகளில் தீவிரமாக பங்கேற்று வருகிறார். மேலும் தனது பகுதியில் உள்ள கட்சி ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.[4] இவர் டெல்லி சட்டமன்றத்திற்கு பிப்ரவரி 2015இல் நடைபெற்றத் தேர்தலில் கிரேட்டர் கைலாஷ் தொகுதியிலில் போட்டியிட்டு தோல்வியுற்றாா்.[5] இவர் 6,102 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் மட்டுமே பிடித்தார். ஆம் ஆத்மி கட்சியினைச் சார்ந்த சாரூபா பரத்வாஜ் 57,589 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். குல்லையா பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த ராகேசு குமார் 43,006 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெற்றாா்.[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nivethika582000/மணல்தொட்டி&oldid=3198342" இலிருந்து மீள்விக்கப்பட்டது