பயனர்:Niththi Vathani

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆடி அமாவாசையின் முதல்நாள் சுமங்கலிப் பெண்களுக்கு சிறப்பான நாளாகும்.ஏன் தெரியுமா?

அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன்.அவனுக்குப் பிள்ளைகள் இல்லை. தீர்த்த யாத்திரைகள்,புண்ணியத் தலங்களின் யாத்திரையின் பின் அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்.ஆனால் அம் மகன் இளமைப் பருவத்தை எட்டும் போது இறந்து போவான் என ஒரு தெய்வ வாக்குக் கூறியது.மன விரக்தியோடு இருந்த அவன் பல கோயில்களை நாடிச் சென்றான்.உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்து வை அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்று காளி கோயில் வழிபாட்டின் போது அவனுக்குக் கூறப்பட்டது.

இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒரு நாள் இறந்து போனான்.பெற்றோரை இழந்து அநாதையாக உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்து வந்த ஒரு பெண்ணை ஏமாற்றி இறந்த இளவரசனின் உடலுக்கு திருமணம் முடித்து இரவோடு இரவாகக் காட்டில் விட்டு விட்டனர்.ஏதும் அறியாத பேதைப் பெண் விடிந்ததும் நிலமையை அறிந்து தனக்குத் தெரிந்த எல்லாத் தெய்வங்களயும் அழைத்துக் கதறினாள்.மனமிரங்கிய உமாதேவியார் ஈசனின் துணையோடு இளவரசனை உயிர்ப்பித்தாள்.தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் தன் வாழ்வை ஒளி பெறச் செய்தது போலவே இந் நன் நாளில் அம்மனை வழிபடுவோர்க்கு அருள் புரிய வேண்டுமென வேண்டினாள்.மனமிரங்கிய தேவி ஆடி அமாவாசைக்கு முன் தினம் அவளது கதையைப் படித்து விட்டு மறுநாள் விரதம் இருந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமலிங்கத்துவம் நிலைக்கும் என்றும் அவர்கள் இல்லத்தில் அஸ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் என்றும் கூறி மறைந்தாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Niththi_Vathani&oldid=2384728" இலிருந்து மீள்விக்கப்பட்டது