பயனர்:Nimban
பிறப்பு:
இவ்விதழின் பொறுப்பாசிரியர் ஆகிய நான் திரு. ஜனார்த்தனன் மற்றும் திருமதி. மாலதிக்கும் முதல் மகனாய் 1979 ம் ஆண்டு ஜூன் மாதம் 22 ம் தேதி புதுச்சேரில் பிறந்தேன்.
ஆரம்ப காலம்:
முதலில் தந்தையின் பூர்விக கிராமமான கிருமாம்பாக்கத்திலும் பிறகு புதுச்சேரிலும் பிறகு மீண்டும் கிருமாம்பாக்கத்திலும் என் பள்ளி கல்வியை நிறைவு செய்தேன். பிறகு மேல்நிலை கல்வியை கலவை கல்லூரி பள்ளில் நிறைவு செய்தேன். 1996 ம் ஆண்டு முதல் என் தாய் வழி பாட்டியாகிய திருமதி. ராஜலக்ஷ்மியுடன் இலக்கம் 56, தேபாசின் தே ரிச்மொன்ட் வீதி, புதுச்சேரில் நிரந்தரமாக வசித்துவருகிறேன்.
என் பாட்டி ராஜலக்ஷ்மி தந்த ஆதரவு மற்றும் ஊக்கத்தினால் இளநிலை பட்டபடிப்பை போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் கல்லூரில் நிறைவு செய்த நான், முதுகலை பட்டத்தை புதுவை பல்கலைக்கழகத்திலும், இளமுனைவர் பட்டத்தை சென்னை தொழில்நுட்ப கழகத்திலும் பெற்றேன்.
பட்டபடிப்பின் போது கணிதத்தை பிரத்யேக துறையாக கொண்ட நான், முதலில் தூய கணிதத்தையும், பிறகு பிரயோக கணிதத்தையும் தேர்ந்தெடுத்தேன்.
வரைப்பட கோட்பாடு அறிவியலில் இளமுனைவர் பட்டத்தை பெற்ற நான், தற்போது குறியீட்டு வடிவு விஞ்ஞான துறையில் கவனம் செலுத்தி வருகிறேன்.
என் குடும்ப உறுப்பினர்களில் என் தந்தை உட்பட பெரும்பாலானோர் ஆசிரியர் தொழிலில் ஈடுபட, ஆசிரியர்கள் மீது இருந்த வெறுப்பால், ஆசிரியர் துறையில் கல்வித்தகுதி இருந்தும் ஆசிரியர் பணி செய்ய விரும்பவில்லை.
ஆனால் நான் ஆசிரியர்களுக்கு எதிரியோ விரோதியோ அல்ல, சில பல செயலற்ற ஆசிரியர் சமூகத்தில் என்னை இணைத்துகொல்ல விரும்பாததே காரணம்.
ஆனால் சமூக அக்கறையோடு என் கல்வி பணியை வேறு வடிவில் செயற்படுத்தி வருகிறேன். மேலும் ‘என் அறிவுபுலன் விற்பனைக்கு இல்லை’ என்ற கொள்கையில் உறுதியாக உள்ளேன். (“Knowledge is not for sale”)
கேலிச்சித்திரம் வரைவதிலும் புகைப்படம் எடுப்பதிலும் என்னை ஈடுபடுத்தி கொள்வதுண்டு. விலங்குகளிடம் மிகுந்த அன்பு கொண்ட நான் அவற்றின் வாழ்வுரிமைக்காக போராடிவருகிறேன்.
என் நேரத்தின் பெரும் பகுதியை பயணம் செய்வதில் செலவிடுகிறேன், பயணம் நமது அறிவை மேலும் விரிவடைய உதவி செய்கிறது. (“Travel Wides Our Knowledge”)
“உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவு மோது பற்பல நூல்வகை கற்கவு மிலகு நீருடை நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே திலக வாணுத லார்தங்கள் பாரத தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்!”
– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
என் பார்வையில் வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணத்தைப் போன்றது, இந்த பயணத்தை கடக்கும் ஒரு பயணி என்ற முறையில், நான் பெற்ற அனுபவங்கள், கவனிப்புகள், உடன் பயணித்த சக மனிதர்களிடம் கற்ற பாடங்கள், சந்தித்த இன்னல்கள், இவற்றை உள்ளடங்கலாக கொண்ட அறிவு புலத்தை கொண்டு கட்டமைக்க பட்டதே இத்தளம். என் பயணம் தொடரும் வரை இத்தளம் விரியும்.
மேடு பள்ளங்களை உள்ளடிக்கிய என் பயண பாதையின் நீள அகலங்கள் திர்மானிக்க முடியாத படி நீண்டு கிடக்கிறது. என் பயணம் பண்படுத்தப்பட்ட பாதையிலா அல்லது, பயன்படுத்தப்படாத பாதையிலா என்று தெரியவில்லை. இருப்பினும் பயண இலக்கை நோக்கி நேர்த்தியாக பயணப்பட்டு கொண்டிருக்கிறேன், பயணங்கள் மட்டும் முடிவதில்லை.
நீண்ட பயணங்கள் ஒரு அடியில் தான் துவங்குகின்றன என்ற சீன தேசத்து பழமொழிகேற்ப, பல நூறு அடிகள் கடந்த பயணி என்ற முறையில், அவற்றால் கற்ற அறிவு புலத்தை மூலதளமாக கொண்டு, இத்தளதிற்கான முதல் அடியை எடுத்துவைத்துள்ளேன், என் பயணம் இனிதாக தொடங்க உங்கள் வாழ்த்துகளை எதிர்நோக்கி காத்திருக்கும்…
உங்கள் அன்பு கார்த்திக்கேயன். பயணங்கள் தொடரும்…
இணைப்பு பெயர் நிம்பன்:
என் இயர்பெயரான ‘கார்த்திக்கேயன்’ தமிழகத்தை பொறுத்தமட்டில் ஒரு பரவலான மற்றும் பிரபலமான பெயர் என்பது யாவரும் அறிந்ததே. இதனால் என் அடையாளம் தொலைந்துவிடாமல் இருக்க ‘நிம்பன் கார்த்திக்’ என்ற இணைப்பு பெயரை கொண்டு செயல்பட்டு வருகிறேன்.
என்னுடைய இணைப்பு பெயராகிய நிம்பன் ஓர் அசுரனின் பெயராகும், நிம்பனை பாண்டிய நாட்டின் அரசன் என்று கூட கூறுவர், மகாபாரதத்தின் பிரத்தேக பாத்திரம் துரியோதனனின் சகோதரர்களில் ஒருவர் நிம்பன்.