பயனர்:Nihantha/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

                                 சிறு சேமிப்பு

சிறு சேமிப்பு என்பது நமது பணத்தை சேமிப்பது மட்டுமல்ல, நம் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணத்தை சேமிப்பதும் ஆகும்.

 
செல்வம் செல்லும் தன்மை கொண்டது எனின் அதைச் செல்ல விடாமல் தடுப்பது எப்படி? அதுவே சிக்கனம் ஆகும். ஒருவன் தான் வாழ்வதற்கு ஏற்ற முறையில் பொருளைச் செலவிட்டு வீண்செலவு செய்யாமல் வாழ்வதே சிக்கனமாகும். நம்மவரில் பலர் ஆடம்பரத்துக்காகச் செலவு செய்கின்றனர். பிறர் தம்மைப் பார்த்து மெச்ச வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாகச் சிலர்க்கு அமைகின்றது. இன்றைக்கு வந்த பொருளை இன்றே செலவு செய்துவிட்டால் நாளைய செலவுக்கு வழி யாது? இன்று வந்த வருவாயைப் போல் நாளையும் நமக்கு வருவாய் வரும் என்று எண்ண முடியுமா? முடியாதே! அப்படியிருக்க, கிடைத்த பொருளைச் செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ஏன் எண்ணக்கூடாது?
 
 பொருளை இயற்றலும் ஈட்டலும், காத்தலும். காத்த வகுத்தலும் வேண்டும்
 
 என வள்ளுவர் கூறுகின்றார்.
 
 ‘குந்தித் தின்றால் குன்றும் குறையும்’ 
 
என்பது பழமொழி. ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழும்' என்பது ஔவையின் வாக்கு. ஆகையால் பொருள் செலவைக் கட்டுப்படுத்துவதே சிக்கனம். நன்கு சிந்தித்துப் பார்த்தால் என்னென்ன வகையில் செலவுகளைச் செய்தோம் என்பது புலப்படும். நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதற்கு ஒருமுறை உண்டு. அதாவது ஒருமாதம் நாம் என்னென்ன செலவு செய்தோம் என்று ஒரு தாளில் எழுதுங்கள். பின்பு அவற்றுள் உணவுக்கு எவ்வளவு செய்தோம். உடைக்கு எவ்வளவு செய்தோம். பயண வகையில் எப்படிச் செலவு செய்தோம், மற்றவற்றிற்கு எவ்வளவு செலவு செய்தோம் என்று புலப்படும். அவற்றுள் தவிர்க்கக் கூடியவை எவை எனத் தேர்ந்து அவற்றை விலக்கிவிட வேண்டும்.
 
              "பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை"
 
 என்பது வள்ளுவர் வாக்கு. அறம், பொருன், இன்பம் என்னும் மூன்றனுள் ஒருவன் நடுவிலுள்ள பொருளை அடைந்துவிட்டால் ஏனைய அறமும், இன்பமும் தாமே வந்தடையும். அத்தகு பொருளைப் பெறாதவன் கொல்லன் பட்டரையில் இரும்பு படுவது போன்ற துன்பம்பட நேரும் என நாலடியார் நவில்கிறது
  
                   “சிறுகக் கட்டிப் பெருக வாழ்'
 
என்பது பழமொழி. மலையிலிருந்து புறப்படும் கண்டவாறு ஆறு சென்று கலந்துவிடுவதால் என்ன பயன் ? அந்நீரே அணைகளில் தேங்கிக் குளங்களில் நிறைந்து. வாய்க்கால் விழியோடி வயல்களில் பாய்ந்தால் அஃது ஆற்றுக்கு எத்தனை பெருமை ! நாட்டிற்கு எத்துணை நன்மை அதுபோல மனிதன் தன் உழைப்பினால் ஈட்டிய ஊதியத்தைத் தனக்கும் தன்னாட்டுக்கும் பயன்படுமாறு சேமித்தல் வேண்டும். தேனீக்கள் மலர் தோறும் சென்று துளித்துளியாகச் சேமித்த தேன் தான் மக்களுக்கு மிகப் பெரிய அளவில் பயன்படுகிறது. எறும்புகள் கூட மழைக் காலம் வருவதற்கு முன்பே உணவுப் பொருள்களைச் சிறிது சிறிதாகச் சேமித்து வைத்துக் கொள்கின்றன.
 
 பள்ளி மாணவர்களின் நலனுக்காகப் பள்ளி மாணவர்களாலேயே நடத்தப்படும் திட்டம் 'சஞ்சாயிகா' என்னும் திட்டமாகும். பள்ளித் தலைமை ஆசிரியரின் தலைமையில் இத்திட்டம் செயல்படுகிறது. கிடைக்கும் சிறு பள்ளியில் செலுத்தி சிறு பள்ளிச் மாணவர்கள் தொகையை அதை சேமிப்புத் தங்களுக்குக் அவ்வப்போது வங்கி மூலம் சேர்க்கும் திட்டமே. 'சஞ்சாயிகா' திட்டம் ஆகும்.
 
பத்து ரூபாய் முதல் சேமிப்புப் பத்திரங்களை அஞ்சலகங்கள் விற்பனை செய்கின்றன. மாணவர்கள் அவற்றை வாங்கி குறிப்பிட்ட காலத்திற்குப் பின் வட்டியுடன் தொகையைத் தொடர் சேமிப்பு முறையில் சேர்க்கலாம். அதற்கென வங்கிகளில் சென்று தொடர் சேமிப்பு முறையில் அதற்கென வங்கிகளில் சென்று தொடர் சேமிப்பில் கணக்கை நிறுவ அதற்கான சேர்க்கலாம் கணக்குப் புத்தகத்தையும் பெற்றுக் கொள்ளலாம். தங்களுக்குக் கிடைக்கும் 25காசு, 50 காசுகளைக் கொண்டு அஞ்சலகங்களில் சேமிக்கலாம். அதற்கென அஞ்சல அட்டையை இலவசமாகப் பெற்று அவ்வட்டையில் 25 காசுக்கான தபால் தலையை வாங்கி ஒட்டி ரூபாய் ஐந்துக்கு அவ்விதம் ஒட்டிய பின் அதை அஞ்சலகத்தில்கொடுத்துச் சேமிக்கலாம்.
 
                        சம்பாதிப்பவனை விட


                       சேமிப்பவனே சிறந்தவன்.
 
அஞ்சலகங்களில் மாதச் சேமிப்புத் திட்டம், ஏழாண்டு தேசிய சேமிப்புத் திட்டம், பாதுகாப்புச் சேமிப்புத் திட்டம், முதுமைக்கால சேமிப்புதவித் திட்டம், பரிசுப் பத்திரத் திட்டம் முதலான பல்வேறு செயல்படுகின்றன. அரசு திட்டங்கள் வங்கிகளிலும் பருவகாலத் திட்டம், நீண்ட காலத் திட்டம் எனப் பல சேமித்தல் முறைகள் செயல்படுகின்றன.
 
நேர்மையான முறையில் கடினமாக உழைத்து பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல் அதை சிக்கனமாகச் செலவு செய்து, மிஞ்சியதை சேமிப்பது மிக முக்கியம் நம் வருவாய்க்கு ஏற்ற வகையில் திட்டமிட்டுச் செலவிடுதல் வேண்டும். எத்தனையோ செலவுகள் செய்கிறோம். அவற்றுள், சேமிப்பை முக்கியச் செலவாகக் கருத வேண்டும். மற்ற செலவுகள் எப்படியோ, சேமிப்பு மட்டும் வட்டியுடன் வளர்ந்து அவரசத் தேவைக்கும், எதிர்காலத் தேவைக்கும் பயன்படுகிறது. வருவாயில் ஒரு பகுதி சேமிப்புக்கு என்று ஒதுக்கிவிட வேண்டும். அப்போது தான் சேமிக்கும் பழக்கம் சரியாக நடைமுறைக்கு வரும். சேமிப்பினால் எத்தனையோ நன்மைகள் உண்டு. வீட்டிற்கும் நாட்டிற்கும் அது பல பயன்களைத் தருகிறது. நாம் சேமித்து வைத்தால் அவரசத் தேவைக்கும், எதிர்காலத் தேவைக்கும் பிறரிடம் கையேந்தி நிற்க வேண்டியதில்லை.
 
                    பேராசை கொண்ட மனிதனுக்கு


                    உலகத்தையே கையில்


                    கொடுத்தாலும் திருப்தி


                     உண்டாவதில்லை.
 
அரசாங்க நிறுவனங்களில் சேமிப்பதால் பணத்திற்கு பாதுகாப்பு கிடைக்கிறது. நியாயமான வட்டி கிடைப்பதுடன், நமது முதலீடு நாட்டு நலப்பணித்திட்டங்களை நிறைவேற்றப் பயன் படுகிறது. அவரவர் சேமிப்புக்கு ஏற்ப வங்கிகள், அஞ்சலகங்கள், எல்.ஐ.சி., கூட்டுறவு நிறுவனங்கள் நி போன்றவற்றில் பல வகையான திட்டங்கள் உள்ளன. இவற்றுள் நமக்கு ஏற்ற திட்டத்தை தேர்ந்தெடுத்து சேமிக்க வேண்டும். போலியான, கவர்ச்சியான வாக்குறுதிகளை நம்பி தனியாரிடம் முதலீடு செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். இளம் வயதிலேயே சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே எதிர்காலத்தில் சிக்கனமான வாழ்வு வாழ வழி வகுக்கும்.
 
சிக்கனம் என்பது


கஞ்சத்தனம் அல்ல..


செலவு செய்யும் விதம்
 
சிறுசேமிப்பினால் பணம் வீண் செலவு ஆகாமல் பெருகுகிறது. வட்டியும் கிடைப்பதோடு பாதுகாப்பாகவும் உள்ளது. சேமிக்கும் பழக்கத்தால் சிக்கனம் வளர்கிறது. பிற்கால நல்வாழ்வுக்கும், திடீர் என விளைவும் நோய், விபத்து போன்ற சமயங்களிலும் கைகொடுத்து உதவுகிறது. அரசின் திட்டங்களுக்கும் உதவுகிறது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் செலவான 100 கோடி ரூபாயில் கிடைத்ததே ஆகும். 11.7 விழுக்காடு சிறுசேமிப்பால்.

மனித வாழ்க்கையில் பிரச்சனைகள் தோன்றும் போது தான் சேமிப்பின் அருமையும் புரியும். அதாவது கோடையில் நீரின் அருமை தெரிவதை போல் வாழும் காலத்தில் சேமிப்பு பழக்கம் உடையவர்களாக இருப்பதனால் சக மனிதர்களிடம் கடமைப்படாது சுயமாக தலைநிமிர்ந்து வாழவும் பிறருக்க உதவி செய்யவும் எம்மால் முடியும்.

அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு வெறுமனே பணத்தை மட்டும் சேமிக்காமல் கொஞ்சம் தண்ணீரையும் காற்றையும் இயற்கையையும் சேர்த்தே பாதுகாத்து வைப்போம்.

 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nihantha/மணல்தொட்டி&oldid=3608045" இலிருந்து மீள்விக்கப்பட்டது