பயனர்:Nathanbharathiyar31/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டுக்கும் சினிமாவுக்கும் ரொம்பகாலமாக ஓர் இடைவிடாத இணைப்பு உள்ளது.முன்பெல்லாம் கூத்தாட்டம் எண்ணும் கலை இருந்தது.அதில் மக்கள் கூறும்படி ஆடுபவர் தான் கூத்தாடி.பிறகு நாடகம் வந்தது.அதைத் தொடர்ந்து சினிமாவும் வந்தது.சினிமாவில் மட்டும் தான் நடிகர்கள் என்ன சொல்கிறார்களோ அதை மக்கள் கேட்கிறார்கள்.நடிகர்களைக் கடவுளாகப் பார்க்கும் நாடு தமிழ்நாடு தான்.முதலில் எம்.ஜி.ஆர்,சிவாஜி,பிறகு ரஜினி,கமல்.சில மாதங்களுக்க முன் ரஜினிக்கு உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டுக்குக் கொண்டுபோய் சிகிச்சை அளித்தனர்.அதற்கு இங்கு தமிழ்நாட்டில் நிறைய புஜைகள் செய்தனர்,சிலர் தற்கொலை முயற்சியில் கூட ஈடுபட்டனர்.நான் ஒன்று கேட்க ஆசைப்படுகிறேன்,ரஜினி என்ற ஒரு தனி நபருக்கு இந்த தமிழ்நாடு எவ்வளவோ செய்திருக்கிறது,ஆனால் அவர் இத்தமிழ்நாட்டுக்குச் செய்த்து என்ன?அதேபோல் கமலின் விஷ்வருபம் திரைப்படம் சிக்கலில் மாட்டிக்கொண்டிருந்த நிலையில் தமிழ் மக்கள் தங்கள் வீட்டுப்பத்திரத்தைக் கமலுக்குத் தந்தனர்.பேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமுக வலைதளங்களில் எந்த நடிகர் பெரியவர் என்று இளைஞர்கள் மோதிக்கொள்கிறார்கள்.சினிமாவில் சில அபாசகாட்சிகளைக் கண்டு சிறுவர்கள் கெட்டுப்போகிறார்கள்.இவை அனைத்துமே அறியாமையைக் குறிக்கிறது.பாமரமக்கள் இதில் முழ்கியிருந்தால் கூட பரவாயில்லை,ஆனால் இளைஞர்கள் இதில் முழ்கிகிடப்பதுதான் மிகவும் கவலைதரக் கூடிய விஷயம்.நாட்டில் கற்பதற்கு எவ்வளவோ இருந்தும் ஏன் இளைஞர்கள் இதிலேயே முழ்கி இருக்கிறார்கள்?சிறு நாட்களுக்கு முன்பு எங்கள் ஊரில் போலியோ சொட்டு மருந்து மையம் நடந்துகொண்டிருந்தது அந்த மையத்தில் ‘ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்’ என்ற பாடல் பாடி கொண்டிருந்தது,போலியோ சொட்டு மருந்து மையத்தில் இந்த பாடல் தேவையா? பிறகு குடியரசு நாளில் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்துமே சினிமா சார்ந்தவைகளே,ஒர் குடியரசு நாளில் போடவேண்டிய நிகழ்ச்சிகளா அவைகள்.சினிமா என்பது ஒரு துறையோ தவிர,அதுவே ஒரு உலகம்கிடையாது.தமிழ்நாட்டுமக்கள் அதில் இருந்து மீழ வேண்டும்.தங்கள் வாழ்வைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் சிந்திக்க வேண்டும்.அதற்குரிய முயற்சியில் ஈடுபடவேண்டும்.ஜெய்ஹிந்த்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nathanbharathiyar31/மணல்தொட்டி&oldid=3908829" இலிருந்து மீள்விக்கப்பட்டது