பயனர்:Nasar Ijas

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலக்கிய உலகில் கவனிக்கபடுகின்ற ஆளுமையாக தன்னை அடையாளப்படுத்தி, தொடர்ந்தேர்ச்சையாக கலை, இலக்கியம், சமூகவியல் மற்றும் அரசியல் என பல துறைகளில் எழுதி வருபவர் நஸார் இஜாஸ்.

சிறிய வயது முதலே எழுத்தில் ஆர்வம் கொண்டு எழுதி வருகின்ற இவருடைய குறித்த ஆற்றலானது பாராட்டத்தக்கதாகும். 1993 மார்ச் 20ஆம் திகதி நஸார், அன்ஸா ஆகியோரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் இஜாஸ். தற்போது 'நஸார் இஜாஸ்' என்ற பெயரில் தனது எழுத்துப் பணியை மேற்கொண்டு வருகின்றார்.

கிழக்கிழங்கையின் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா குட்டிக்கராச்சி பிரதேசத்தில் பிறந்தவர். தனது பள்ளிப் பருவத்தின் ஆரம்பத்திலிருந்தே பல்வேறு பட்ட தளங்களினூடாக வாசிப்பை மேம்படுத்தி அவற்றை இன்று தனது எழுத்துக்களில் தீய்த்துக் கொண்டிருக்கிறார். கிண்ணியா மத்திய கல்லூரியில் பயின்ற இவர் பாடசாலையில் கற்கின்ற போதே பாடசாலை சார்பாக சிறுகதை, கவிதை, கட்டுரை, விவாதம் எனப் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கோட்டம், வலயம், மாகாணம், மாவட்டம் மற்றும் தேசிய ரீதியாக வெற்றியீட்டி பாடசாலைக்குப் பெருமையீட்டிக் கொடுத்த நபர்களில் இவரும் ஒருவராவார். பாடசாலை சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தனது எழுத்துக்களால் வெற்றி கொண்ட இவர், பல்வேறு பத்திரிகை வாயிலாக தனது எழுத்துலகப் பயணத்தை 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தனது 'அடைக்கப்பட்ட சுதந்திரம்' என்ற தலைப்பிலான கவிதையினூடாக ஆரம்பித்தார். பத்திரிகையில் இவரது ஆக்கம் வெளிவரத் தொடங்கியதையடுத்து வெளிக்கள எழுத்துலகில் படிப்படியாக முளைத்தெழத் தொடங்கியவர் இன்று அற்புதமான எழுத்துக்களை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்.

இவருடைய பெரும்பாலான கவிதைகளும் கட்டுரைகளும் ஆவணத் தொகுப்புகளாகும். ஒடுக்கப்பட்டுள்ள சமுகத்தின் ஒட்டு மொத்த குரலாக, சர்வதேச சமுகத்தின் காதுகளில் எமது சமுக வாழ்வின் இழிநிலை அவலங்களையும் இயல்பாகவே மனக் கண்ணில் காட்சிப்படுத்துகிறது நஸார் இஜாஸின் எழுத்துக்கள்.

இரசாயனப் போராட்டத்தில் இழந்த உயிர்களையும், உணர்வுகளையும் எதைக் கொண்டும் மீட்க முடியாது என்பதையே அவரது எழுத்துக்கள் வலியுறுத்திக் கூறியது.

பாடசாலையில் உயர்தரம் கற்கின்ற காலப்பகுதியில் பாடசாலையில் இருந்து வெளிவந்த பேனாவின் குரல் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக செயற்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நஸார் இஜாஸின் எழுத்துக்கள் பலரால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவைதான் இவரது எழுத்துக்களின் தாற்பரியத்தை சமுகத்திற்கு மேலும் உரத்துக் கூறுகின்றது. இஜாஸின் அண்மைய கவிதைகளில் ஒன்றான 'நள்ளிரவில் துயிலெழும் தற்கொலைப்பாடல் என்ற கவிதை எழுதப்பட்ட சில தினங்களிலேயே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆளுமைகள் குறித்து பல குறிப்புகளை இவர் எழுதியுள்ளார். எது குறித்து நாம் எழுதினாலும் கூட ஒரு எழுத்தாளனுக்கு எமது சமுகத்தின் மீதும், எமது சகோதர மொழிச் சமுகத்தின் மீதும் அதீத அக்கறை இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி நிற்கிறது அவரது எழுத்துக்கள் என்பதை அவரது ஆக்கங்களைப் படிக்கின்ற போது புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.

எழுத்தாளர் இஜாஸ் சமுகம் சார்ந்த விடயங்களை தொகுத்து எழுதி சுட்டிக்காட்டுவதனுடாக அப்பணியைச் செவ்வனே நிறைவேற்றுகிறார் என்பதோடு, குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சில தேசிய பத்திரிகைகளில் மொழிபெயர்ப்பாளராகவும், சுயாதீன எழுத்தாளராகவும், செய்தியாளராகவும் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தேசிய நாழிதழ்களில் இவர் எழுதி வந்த சர்வதேச ஆளுமைகள் குறித்த தொகுப்பின் முதலாம் மிக விரைவில் வெளிவரவுள்ளது. பத்திரிகைகளில் பிரசுரமான காலகட்டத்திலேயே பலரின் உணர்வலைகளை உசுப்பிக் கொண்டிருக்கும் இவரது கட்டுரைகள் ஒட்டு மொத்த தொகுப்பாக வெளிவரும் போது நிச்சயமாக ஒரு எழுத்தாளனுக்கான அங்கீகாரத்தின் உச்ச கட்டத்தினை இஜாஸ் அடைந்து கொள்வார் என்பதில் துளியேனும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nasar_Ijas&oldid=2395302" இலிருந்து மீள்விக்கப்பட்டது