பயனர்:Mutur Mohammed Rafi

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூதூர் மொகமட் ராபி மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் இளம் எழுத்தாளர் ஆவார். 1989 ஆண்டு முதல் தேசியப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் புதுக்கவிதைகள் மற்றும் சிறுகதைகளை எழுதி வருவதோடு கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

இவர் மூதூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்களான முகம்மது புஹாரி மற்றும் அம்ரா புஹாரி தம்பதிகளின் புதல்வராவார். இவரது முதலாவது புதுக்கவிதையாகிய உன்னைக்காணும் நேரம் வீரகேசரி வாரமலரில் 1989.06.18 ல் வெளியானது. அதனையடுத்து சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட புதுக்கவிதைகள் வீரகேசரி, மித்திரன், தினகரன், தினக்குரல் போன்ற பத்திரிகைகளிலே வெளியாகியுள்ளன.

இவரது முதலாவது சிறுகதையான நிழலாக சில நிஜங்கள் 1991 ம் ஆண்டில் இலங்கை வங்கி ஊழியர் பக்கீர்த்தம்பி என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளியான "முத்தொளி" எனும் உள்ளுர் தட்டச்சு இதழில் பிரசுரமானது. அதனையடுத்து பல உள்ளூர் சஞ்சிகைகளிலும் பாடசாலை ஆண்டு மலர்களிலும் இவரது ஆக்கங்கள் வெளியாயின.

தினக்குரல் பத்திரிகையிலே 2010.12.26 அன்று பிரசுரமான பலிக்கடா என்ற சிறுகதையுடன் சிறுகதையுலகுக்கு இவர் அறிமுகமானார். அதனையடுத்து இவரது சிறுகதைகள் பல வீரகேசரி, மீள்பார்வை போன்ற பத்திரிகைகளிலும் மல்லிகை, ஜீவநதி, போன்ற சஞ்சிகைகளிலும் அவ்வப்போது பிரசுரமாகி வந்துள்ளன.

கிழக்குப் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞான மாணவராக இருந்தவேளையில் எழுதிய இவரது ஆரம்பகாலக் கவிதைகள் பெரும்பாலும் காதல் கவிதைகளாகவே இருந்தன. ஆயினும் அவ்வப்போது அவரது வாழிடமான திருக்கோணமலை நகர்ப்பகுதியிலே பெற்ற அனுபவங்களின் தாக்கத்தால் சில அரசியற் கவிதைகளை வீரகேசரியில்,தினக்குரல் போன்ற பத்திரிகையிலே எழுதியுள்ளார்.

தற்போது ஆசிரியராகத் தொழிலாற்றிக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது சில கவிதைகளை எழுதிவந்தாலும் சிறுகதைகளிலேயே கூடிய நாட்டத்தைக் காண்பித்து வருகின்றார். ஏறத்தாழ இருபதுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ள இவர் வெகுஅண்மையில் தனது முதலாவது சிறுகதைத்தொகுப்பான இலுப்பம் பூக்கள் நூலை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mutur_Mohammed_Rafi&oldid=1927221" இலிருந்து மீள்விக்கப்பட்டது