பயனர்:Murugankpm/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கழுப்பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் அமைந்துள்ளது கழுப்பெரும்பாக்கம் கிராமம்.கழுகு மிகுந்து காணப்பட்டதால் இவ்வூருக்கு கழுப்பெரும்பாக்கம் என பெயர் பெற்றது என்று பெரியோர் கூறுவர்.புதுச்சேரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.இவ்வூரில் அமைந்துள்ள மிகப்பெரிய கழுவெளி வரலாற்று முக்கியத்துவம் வாய்ததாகக் கருதப்படுகிறது.மேலும் இங்கே அமைந்துள்ள ஒரு பெரிய ஆலமரம் முழுவதும் வௌவ்வால்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன.பல சுற்றுலாப்பயணிகள் இதனைப் பார்க்க இங்கே வந்து செல்கின்றனர்.ஊருக்கு அழகு சேர்ப்பதால் இவ் வௌவ்வால்களை இவ்வூர் மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.தீபாவளி சமயங்களில்கூட இவ்வூர் மக்கள் அதிக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Murugankpm/மணல்தொட்டி&oldid=1947539" இலிருந்து மீள்விக்கப்பட்டது