பயனர்:Murugan govinthasamy/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜீ.முருகன்[தொகு]

G.Murugan[தொகு]

தமிழ் சிறுகதை எழுத்தாளராக அறியப்படும் ஜீ.முருகன், சிறுகதைகள் மட்டுமல்லாது நாவல், கவிதை, இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், உலகத் திரைப்பட விமர்சனக் கட்டுரைகளும் எழுதி வருகிறார். பத்திரிகையாளரும் கூட. வனம் என்ற சிற்றிதழையும் நடத்தியுள்ளார். தினமணி நாளிதழில் மூத்த உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை பட்டயதாரியான இவர் ‘ஜீவா தமிழ்’ என்ற தமிழ் மென்பொருளையும் உருவாக்கியுள்ளார். கணினி மென் பொருள் வன் பொருள் இரண்டிலும் ஆர்வம் உள்ளவர்.

ஜீ.முருகன், இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் கொட்டாவூர் கிராமத்தில் 1967 ஆண்டு மார்ச் மாதம் 10 தேதி பிறந்தார். இவருடைய தந்தை கோவிந்தசாமி, தாயார் கமலா.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், தனது பட்டயப்படிப்பை முடித்ததும் டைனோரா டிவி நிறுவனத்தின் கோவை அலுவலகத்தில் சர்வீஸ் என்ஜினியராகப் பணியில் சேர்ந்து 4 ஆண்டு காலம் பணியாற்றினார். பின்னர் அப்பணியை ராஜினாமா செய்துவிட்டு இயற்கை விவசாயம் செய்யும் ஆர்வத்தில் கொட்டாவூருக்கே திரும்பி வந்து 5 ஆண்டுகள் விவசாயம் பார்த்தார். பின்னர் அருகில் உள்ள சிறு நகரமான செங்கத்தில் கணினி மையம் ஒன்றைத் தொடங்கி அச்சுத் தொழிலில் ஈடுபட்டார். அத்தொழிலில் ஆர்வம் இல்லாமல் போனதால் தினமணி நாளேட்டில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 6 ஆண்டுகள் கழித்து மூத்த உதவி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். அந்த நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணிபுரிந்து வந்த அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பணியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது 14 வயதில் புத்தகங்களால் ஈர்க்கப்பட்ட அவர் தொடர்ந்து புத்தகம் வாசிப்பதை ஆர்வமுடன் செய்துவந்தார். கோவையில் இருந்த போது இவருக்கு மார்க்சிய அறிஞரான ஞானியின் நட்பு கிடைத்தது. அவருடைய வழி காட்டுதலில் நவீன இலக்கியம், தத்துவம், அரசியல் என பல துறை அறிவைப் பெற்றார். பின்னர் முதல் வெளியீடாக மின்மினிகளின் கனவுக்காலம் நாவலை நிகழ் வெளியீடாக கொண்டு வந்தார். தொடர்ந்து சிறுகதைகளில் கவனம் செலுத்தி வந்த இவர் ‘வனம்’ என்ற சிற்றிதழை கவிஞர் ஸ்ரீநேசனுடன் சேர்ந்து நடத்தியுள்ளார். எழுதிய புத்தகங்கள்:

1. மின்மினிகளின் கனவுக் காலம் – நாவல்
2. மரம் – நாவல்
3. இனியவன் இறந்துவிட்டான் – குறுநாவல்
4. சாயும் காலம் – சிறுகதைத் தொகுப்பு
5. கறுப்பு நாய்க்குட்டி – சிறுகதைத் தொகுப்பு
6. சாம்பல் நிற தேவதை – சிறுகதைத் தொகுப்பு
7. காட்டோவியம் –கவிதைத் தொகுப்பு
8. ஆந்த்ரே தார்க்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் – சினிமா விமர்சனக் கட்டுரை
9. காண்டாமிருகம் – தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு
10. ஜீ.முருகன் சிறுகதைகள் – 50 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு

தொடர்புடைய தளங்கள்:

gmuruganwritings.wordpress.com
vanam.wordpress.com