உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Mudichur v hariharan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

16/10/1995 ஆம் ஆண்டு திரு.விஜய் அருண் மற்றும் திருமதி.சித்ரா ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.இவர் பிறந்த இடம் சென்னையில் அமைந்துள்ள அமைந்தகரை என்னும் இடத்தில் பிறந்தார்.இவரின் சொந்த ஊர் மதுரை ஆகும்.இவரின் இயற்பெயர் வி ஹரிஹரன் ஆகும். இவர் பிறந்து வளர்ந்து பள்ளிக்கல்வியை தாம்பரத்தில் முடித்தார்.இவர் இளங்கலை படிப்பை சென்னையில் அமைந்துள்ள D.G.வைணவ கல்லூரியில் வணிக பொருளாதாரம் 2016ஆம் ஆண்டு படித்து முடித்தார்.இவருக்கு சிறு வயதிலிருந்தே விளையாட்டு மற்றும் அரசியலில் ஈடுபாடு இருந்தது.இவருக்கு பிடித்த பாடங்கள் வரலாறு மற்றும் வணிக பொருளாதாரம்.இவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் பல இயற்கை நல ஆர்வலர்களின் அறக்கட்டளை இணைந்து பணியாற்றியிருந்தார்.இவர் தனது பதினாறாவது வயதில் மக்கள் நல பணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.இவரின் தந்தை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் கட்சியில் இருந்ததால் தனது பதினாறாவது வயதில் மக்கள் நலப்பணியில் ஆர்வம் இருந்ததால் இவரும் இணைந்து கொண்டார்.இவர் 2012 ஆம் ஆண்டில் இருந்து 2016ஆம் ஆண்டு வரை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து மக்கள் நல பணியை செய்து கொண்டு இருந்தார்.தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு தனது தாய் கழகத்தின் செயல்கள் பிடிக்காமல் கழகத்திலிருந்து வெளியேறினார்.பிறகு சீமானின் நாம் தமிழர் என்னும் கட்சியில் இணைந்தார்.இவரின் களப்பணியை கண்டு தாம்பரம் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் முடிச்சூர் ஊராட்சியில் துணை செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார்.அதற்கு பிறகு தான் இவரின் பெயர் முடிச்சூர் வி ஹரிஹரன்ஆக மாறியது.இவர் சரியாக ஒரு ஆண்டு காலம் நாம் தமிழர் கட்சியில் இருந்தார் பிறகு சில கருத்து வேறுபாடுகளால் கட்சியிலிருந்து விலகினார்.பிறகு இவர் திரு ராகுல் காந்தி அவர்களின் செயலால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.இவரின் தாய் கழகம் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகும்.இவர் மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலில் இறங்கினார். அதன்பிறகு முடிச்சூர் ஊராட்சியின் இளைஞர் காங்கிரசின் துணை செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார்.இவருக்கு திருச்சி திண்டுக்கல் மதுரை கோயம்பத்தூர் விருதுநகர் தேனி ஆகிய 6 மாவட்டங்களிலும் வாக்கு வங்கி உள்ளது.

இவரின் வாழ்நாள் லட்சியம் குறைந்தது 10 ஏரியை

தூர் வாருவது மற்றும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவது ஆகும்.அதற்காக இவரால் துவங்கப்பட்டது உயிர் நாடி என்னும் அறக்கட்டளை ஆகும்.அந்த அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் இவரே ஆவார்.இவர் முக்கியம் கவனம் செலுத்துவது பெண்களின் உரிமை மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகும்.அதற்காக பல கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு கற்பழிப்பு விழிப்புணர்வு குறித்த ஆலோசனையை வழங்கிவருகிறார்.இவர் அனைத்து இடங்களிலும் முன் வைக்கும் ஒரே ஒரு தத்துவம் உடலுறவு என்பது வாழ்க்கை அல்ல அது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே என அனைவரிடமும் கூறிக்கொண்டு வருகிறார்.இவரை தேடி வரும் பொது மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கியும் வருகிறார்.இவர் தன் தந்தையின் கொள்கையான அரசியல் என்பது தொழில் அல்ல அது ஒரு சேவை என்னும் தத்துவத்தை கொண்டு செயல்படுகிறார்.இவர் தொழில் செய்யும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இலவச தொழில் ஆலோசனையும் வழங்கி வருகிறார் அதுமட்டுமல்லாமல் விவசாயத்தின் உப தொழிலான கால்நடை வளர்ப்பில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு இலவச ஆலோசனையும் வழங்கி வருகிறார்.MVH² GROUP OF COMPANY என்னும் நிறுவனத்தை நடத்திக் கொண்டு வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mudichur_v_hariharan&oldid=4096740" இலிருந்து மீள்விக்கப்பட்டது