உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Mounan Yathrika/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மௌனன் யாத்ரிகா


தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, திரைப்பாடல் என இயங்கி வருகிறார். அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சித்திடையார் என்னும் கிராமத்தில் நாட்டார் கதை மரபின் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் வீரமுத்து- பாப்பாத்தியம்மாள். மனைவி - கீதா; மகள் - யாத்ரிகா.


தமிழ்ச் செவ்வியல் கூறுகள், தொன்மங்கள், வேட்டை வாழ்வு, சமகால அரசியல் கூறுகள் கொண்டவையாக இவரது கவிதைகள் இருக்கின்றன. இயற்கையும், புதிய மொழியும் இவரது படைப்பின் வேராக இருந்து செயல்படுகின்றன.


அரியலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், தமிழாய்வுத் துறை மாணவர்களுக்கு இலக்கியம் கற்பிக்கிறார்.


பேய்த்திணை, நொதுமலர்க் கன்னி, புத்தர் வைத்திருந்த தானியம், பாணர் வகையறா, நெடுநல் இரவு, வேட்டுவம் நூறு முதலான கவிதை நூல்களும்; கிழவனின் காதலி என்னும் சிறுகதை நூல் ஒன்றும் இதுவரை வெளியிடப்பட்டிருக்கின்றன.


#லாடம் என்ற பதிப்பகத்தைத் தொடஙகி, அடுத்தத் தலைமுறை எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mounan_Yathrika/மணல்தொட்டி&oldid=3301787" இலிருந்து மீள்விக்கப்பட்டது