பயனர்:Mohamed Mansoor/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • சிங்கைத் தமிழ்ச்சங்கம்

சிங்கப்பூரில் வாழும் தமிழர்களிடையே தமிழ் மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழர் பண்பாட்டுக் கூறுகளை அந்நாட்டில் வாழும் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தவும் சமூகநலப்பணிகளை ஒன்றிணைந்து மேற்கொள்ளவும் நிறுவப்பட்ட அமைப்பு சிங்கை தமிழ்ச் சங்கம் (சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம்). இது 1932இல் தொடங்கப்பட்டது. தமிழ் சீர்திருத்தச் சங்கம் என்று முன்பு அழைக்கப்பட்டது. நீண்ட வரலாறு கொண்ட இவ்வமைப்பு அ.வை.கிருஷ்ணசாமியின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வருகிறது. அவர் இதன் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.

கிருஷ்ணசாமி

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த ஓர் இணையரின் மகன் அ.வை. கிருஷ்ணசாமி. மலேசியவிலுள்ள பேராக் பகுதியில் உள்ள தஞ்ஜொங் த்வலாங் என்னும் ஊரில் பிறந்தார். கிருஷ்ணசாமி பேராக், தைப்பிங் பகுதியில் உள்ள மாக்ஸ்வெல் குன்றுகளில் தன் பள்ளிப் பருவத்தைக் கழித்தார். இறுதியில் ஈப்போ பகுதிக்குக் குடியேறினார். இளமை காலத்திலிருந்து கிருஷ்ணசாமிக்கு இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களில் முக்கியமானவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்மீது பெரும் ஈடுபாடு இருந்தது. நேதாஜியைப் போலவே இந்திய மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடவும் அவருடைய கனவுகளை நனவாக்கும்வகையிலான பணிகளில் ஈடுபடவும் கிருஷ்ணசாமி விரும்பினார்.

பணிகள்

கிருஷ்ணசாமியின் சமூகப் பங்களிப்புகளில் முதன்மையானது, மலேசியாவில் வசித்த இந்தியர்கள் அந்நாட்டின் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு அவர்  பரப்புரைகளில் ஈடுபட்டதாகும். மலேசிய இந்தியர்களுக்கான அரசியல் அதிகார வட்டத்தில் தலைமைப் பொறுப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவாகக் கிருஷ்ணசாமி வழிவகுத்தார். இளம் வயதிலேயே சமூகத்தை  உயர்த்துவதற்காகப் பணிபுரிய வேண்டும் என்ற அவருடைய ஆர்வமும் விருப்பமும் தெள்ளத் தெளிவாகப் புலப்பட்டன.

கிருஷ்ணசாமியின் சமூக அக்கறை அவருடைய மனைவி இந்திரா தேவியால் ஊக்குவிக்கப்பட்டது. தமிழர் சீர்திருத்தச் சங்கத்தைக் கிருஷ்ணசாமிக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தேவி மணியம் நடத்திவந்த ஒரு கழகத்தின் பெண்களுக்கான பிரிவில் செயல்படும் உறுப்பினராக இந்திரா தேவி விளங்கினார். அக்காலக்கட்டத்தில் நடனம், நாடகங்கள் உள்ளிட்ட பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதிலும் மேடை நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் அப்பெண்கள் ஈடுபட்டு வந்தார்கள். கிருஷ்ணசாமி இந்நிகழ்வுகளுக்காகப் பணிபுரிந்ததன்மூலம் தமிழர் சீர்திருத்தச் சங்கத்துக்கு மிகவும் அறிமுகமானவராக ஆனார். ஃபாரெர் பார்க் பகுதியில் செயல்பட்டுவந்த இந்திய மக்கள் செயல் கட்சி(PAP)யில் அவர் இணைந்தார். இதன் மூலம் கிருஷ்ணசாமிக்கு அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உருவானது. தமிழர் சீர்த்திருத்தச் சங்கத்தின் செயல்பாடுகளுக்காகவும் தமிழர் நலன்களுக்காகவும் கிருஷ்ணசாமி தனக்குக் கிடைத்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தினார். இவரின் வழிகாட்டுதலின் சங்கம் தேசிய நிகழ்வுகளிலும் பங்கெடுக்கத் தொடங்கியது. பொங்கல் திருநாள், தமிழர் திருநாள், தீபாவளி போன்ற விழா நிகழ்வுகளைத் தத்தம் வீடுகளைத் தாண்டி, ஒரு சமூகமாகச் சேர்ந்து கொண்டாடுவதற்கான வெளியைச் சங்கம் ஏற்படுத்தியது.

கிருஷ்ணசாமி தமிழர் பிரதிநிதிகள் அவையின் தலைவராகப் பொறுப்பு வகித்தபோது, அவ்வமைப்பு இந்தியர் வாழும் பகுதிகளில் வசிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்குத் தனியார் வகுப்புகளைத் தேடி நடத்தியது. இந்தியச் சமூகம் சிங்கப்பூரில் கல்விநோக்கில் முன்னேற இத்திட்டம் ஒரு வலுவான அடித்தளத்தை வித்திட்டது. இந்தத் தனியார் வகுப்புகள் சிங்கப்பூர்வாழ் இந்தியர்களின் சமூகப், பொருளாதார வளர்ச்சியை, குறிப்பாகக் கல்வியை இலக்காகக் கொண்டு செயல்பட்டுவரும் சிங்கப்பூர் இந்திய முன்னேற்ற சங்கம்(SINDA) என்னும் அமைப்பு உருவாவதற்கான வித்தாகவும் அமைந்தன. தமிழர்கள் கொண்டாடிவந்த ‘தமிழ் மொழி வாரம்’ நிகழ்வுகளுக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கவும் கிருஷ்ணசாமி செயலாற்றினார். அவர் பணிபுரிந்த இடத்தில் அங்குள்ள தொழிலாளர்களை ஒரு சங்கமாக ஒன்றிணையச் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கிருஷ்ணசாமி சிங்கப்பூர் குடிமகன் என்ற உரிமையைப் பெறாத காலகட்டத்தில் கூட, அவருடைய பரந்த மக்கள்நலப்பணிகளைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூர் அரசு அவருக்குச் சில விலக்குகளை அளித்தது. 1973இல் கிருஷ்ணசாமி சிங்கப்பூர் குடிமகன் ஆனார்.

தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளில் அங்கம் வகித்தவராகவும் அதன் வரலாற்றை நன்கு அறிந்தவராகவும் உள்ள கிருஷ்ணசாமி சங்கத்தின் அறம்சார்ந்த வலிமையைப் பேணுவதற்குப் பாடுபட்டார். சிங்கப்பூர் அரசு கையகப்படுத்திக்கொண்ட சங்கக் கட்டிடத்துக்கு நியாயமான இழப்பீட்டைப் பெற அவர் முன்னெடுத்த சட்ட நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை. கட்டிடத்தை எடுத்துக்கொண்டதற்கான தொகையைச் சிங்கப்பூர் அரசு உயர்த்தியது. சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் வருங்கால வளர்ச்சிக்குப் பொருத்தமாகத் தமிழர் சீர்திருத்தச் சங்கம் என்ற பெயரை ‘சிங்கை தமிழ்ச் சங்கம்’(சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம்) என்று மாற்ற வேண்டும் என்ற நெடுநாள் விருப்பத்துடன் தொடர்ந்து போராடிய கிருஷ்ணசாமியின் முயற்சி வெற்றி பெற்றது. சங்கத்தில் புது உறுப்பினர்களை இணைய வைப்பதிலும் அவர் கவனம் செலுத்தினார்.

அங்கீகாரம்

சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் என்ற அடையாளத்தை உலக அளவில் கொண்டுசென்ற கிருஷ்ணசாமிக்கு பல்வேறு அமைப்புகளிடமிருந்து முக்கியமான பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் சிங்கப்பூருக்குப் புதிதாகப் புலம்பெயரும் மக்களை சிங்கப்பூர் சமூகத்துடன் இணைக்கும்விதத்தில்   சிங்கப்பூர் தமிழ்ச்சங்கம் மூலம் எடுத்த நடவடிக்கைகளுக்காக 2013இல் ஹுவா யுவா(Hua Yua) என்ற சீன அமைப்பு ‘புலம்பெயர்வோரின் நண்பன்’ என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தது.

கிருஷ்ணசாமி தலைமையிலான சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம் காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைத் மாற்றிக்கொண்டு, தனக்கான புதுப் புது வழிகளை வகுத்துக்கொண்டு, அனைத்துச் சிங்கப்பூர்வாழ் இந்தியர்களும் பெருமிதம் கொள்ளும்படிச் செயல்பட்டுவருகிறது.

மேற்கோள் இணைப்புகள்

www.50faces.sg, சிங்கப்பூர்வாழ் இந்தியச் சமூகத்துக்குப் பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்த முன்னோடிகளைப் பற்றிய செய்திகளை ஆவணப்படுத்தும் இணைய தளம்.

www.abroadindians.com, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்காகச் செயல்பட்டுவரும் இணைய தளம்

சிராங்கூன் உயர்நிலைப் பள்ளி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mohamed_Mansoor/மணல்தொட்டி&oldid=2250821" இலிருந்து மீள்விக்கப்பட்டது