பயனர்:Meera Laxman/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமைதியின் அழகில் லயிக்கும் மனதிற்கு ஆர்ப்பாட்டங்கள் அர்த்தமற்றே தெரிகிறது

ஓடும் நதி தனக்கு மட்டுமே சொந்தமென அதன் கரையோர மரம் நினைத்தல் அர்த்தமற்றது.

‪#‎சில_மனங்களும்_சில_மனிதர்களும்‬

நிதர்சனங்களை ஏற்றுக்கொள்ளமுடியாமல் கண்டும் காணாதுபோல கடந்துவிடுகிறோம் சுவடில்லாமல்

சில நிகழ்வுகளை மறக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே நம்மையறியாமல் நினைவு அடுக்குளின் மேலெழுப்பி விடுகிறோம்.

உருவம் தேடா உணர்வின் தொகுப்பாய் - மனதுள் உருண்டோடும் சந்தோஷ சிலிர்ப்புக்கள் தான் பெயர் கொண்டதா அன்பென்று !!

வெளிச்சம் பயத்தை ஏற்படுத்த தொடங்கும் வரை பாதைகள் எளிமையாகவே இருந்தன இருளின் மீதான அனுமானங்களும்

ஈடுபாடில்லாமல் செய்ய முற்படும் செயல்களுக்கு காலத்தை காரணம் காட்டி தப்பித்துக்கொள்ளவே விழைகிறது மனம்

புறக்கணித்தலைப் போலொரு கொடிய வன்முறை வேறொன்றும் இல்லை... ‪#‎அன்பு_செய்வோம்‬

வலியில் துடிக்கும் உயிரின் மதிப்பு பொருள் தேடலில்… பொசுங்கிப் போகிறது

எதிர்பார்ப்புகளும், இயலாமையும் ஒரே கோட்டில் நிற்கும்பொழுது வாழ்க்கை கசந்து விடுகின்றது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Meera_Laxman/மணல்தொட்டி&oldid=1769574" இலிருந்து மீள்விக்கப்பட்டது