பயனர்:Manisathi/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலாம் உலகப் போர் நினைவுச் சின்னம்(திருச்சிராப்பள்ளி)

இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில், திருச்சிராப்பள்ளி மாவாட்டத்தில் உள்ள  காந்தி சந்தைக்கு  எதிரில்  முதலாம் உலக போருக்கான நினைவுச் சின்னம் அமைந்துள்ளது. இந்த நினைவுச் சின்னம்  திருச்சிராப்பள்ளி போர் வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறது.

வரலாறு[தொகு]

திருச்சிராப்பள்ளி இருந்து சுமார் 302 வீரர்கள் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் சார்பாக முதலாம் உலக போரில் பங்கேற்றனர். இதில் 41 வீரர்கள் போரின் பொழுது வீரமரணமடைந்தனர். அந்தப் படை வீரர்களின் நினைவாக, பின்னர் அரசாங்கம் ஒரு பெரிய கடிகாரத்தை [1] திருச்சிராப்பள்ளியில் நினைவு சின்னமாக அமைத்தது.

பராமரிப்பு[தொகு]

 CLOCK TOWER என அனைவராலும் அறியப்பட்ட இந்த நினைவு சின்னம் சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தது. அந்த நேரத்தில், பர்மிய அகதிகள் உட்பட சுமார் 25 வர்த்தகர்கள் அங்கு  தங்கள் கடைகளை போட நினைவு சின்னத்தை சுற்றியுள்ள இடங்களை ஆக்கிரமித்து கொள்ள தொடங்கினார்கள, இவை நினைவு சின்னத்தை தடைஇன்றி பார்க்க இடையூறாக அமைந்தது[2]. பல ஆண்டுகளுக்கு பிறகு, 27 பிப்ரவரி 2013 அன்று திருச்சி மாநகராட்சி முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பிற சேவை அமைப்புகளின் தொடர் கோரிக்கைகளை ஏற்று நினைவு சின்னத்தை  சீரமைக்க முடிவு செய்தது. அங்கு ஆக்கிரமிப்பு செய்து இருந்த கடைகளின் (பர்மிய அகதிகள் நடத்தப்படும் ஒன்றை தவிர்த்து) உரிமம் ரத்து செய்யப்பட்டு நினைவு சின்னத்தை சுற்றி இருந்த கடைகள் இடிக்கப்பட்டது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Finally, Tiruchy war memorial draws attention". தி நியூ இந்தியன் எக்சுபிரசு (Tiruchy). 16 August 2013. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Finally-Tiruchy-war-memorial-draws-attention/2013/08/16/article1736756.ece. பார்த்த நாள்: 13 March 2014. 
  2. "Facelift for war memorial in Tiruchi". தி இந்து (Tiruchi). 1 March 2013. http://www.thehindu.com/todays-paper/tp-in-school/facelift-for-war-memorial-in-tiruchi/article4464056.ece. பார்த்த நாள்: 13 March 2014. 
  3. "Tiruchi Corporation allows Burmese traders to relocate". தி இந்து (Tiruchi). 18 July 2013. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/tiruchi-corporation-allows-burmese-traders-to-relocate/article4924467.ece. பார்த்த நாள்: 13 March 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Manisathi/மணல்தொட்டி&oldid=2937975" இலிருந்து மீள்விக்கப்பட்டது