உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Mangaleshan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                        பெருவயல்                                

இராமநாதபுரம் மாவட்டம்,இராமநாதபுரம் வட்டம்,பெருவயல் ஊராட்சி,தேவிபட்டினம் வருவாய் கிராமத்தில் அமைந்த ஊர் பெருவயல்இவ்வூர் இராமநாதபுரத்திலிருந்து திருச்சி செல்லும் வழியில் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.இவ்வூரின் பெயர்க்காரணம் இவ்வூரில் வாழூம் மக்கள் வயல் வேலை செய்வதாலேயே ஆகும்.மற்றொரு முக்கிய தொழில் மேய்ச்சல்.இவ்வூரின் மக்கள் தொகை சுமார் 500..வீடுகள் தோராயமாக 180.இவ்வூரின் விளை பொருள்கள் நெல் மற்றும் மிளகாய்.இவ்வூரில் பிரசித்திபெற்ற முருகன் ஆலயம் உள்ளது.தமிழ்நாட்டில் உள்ள முருகன் ஆலயங்களிலே மிகவும் தொன்மையானது.இத்திருத்தலம் இராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டது.இவ்வாலயத்தின் பெயர் இரணபலி முருகன் ஆலயம்.அதாவது மக்களுக்கு ஏற்படும் ரணங்களைக் குணப்படுதுவதாலே இப்பெயர் வழங்கப்பட்டு வருகிறது.இதனாலேயே ஒவ்வொரு வருடமும் நடை பெறும் மாசிமகம் திருவிழாவில் நடைபெறும் தேரோட்டத்தில் பலி கொடுக்கப்படுகிறது.இத்தலத்தில் முருகக்கடவுள் வேலில் அமைந்தாற்போல் காட்சியளிக்கிறார்.இத்தலத்தைப்பற்றி சுவாமி கிருபானந்த வாரியார் அவர்களால் போற்றப் பட்டுள்ளது.

மேற்கோள்கள்:

                       கோவில் கல்வெட்டுகள்
                         தல வரலாறு

Silhuette

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mangaleshan/மணல்தொட்டி&oldid=1968398" இலிருந்து மீள்விக்கப்பட்டது