பயனர்:Mandakolathooraan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யுகாந்தரமாக ரட்சித்து வருகிறது!

அருள்வாக்கு [Published in 'Kalki MagaZine' dated 13/3/2016/Thanks to Kalki.]

written by (மறைந்த) "ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்"

வயஸு வந்தவர்களுக்கெல்லாம் வோட்டு என்று பண்ணினாலும் பண்ணினார்கள், அதிலிருந்து ஸமுதாயத்தின் பல ஸெக்க்ஷன்களில் ஒவ்வொன்றிலும் ஒரு மெஜாரிட்டியைத் தாங்களே புதுசாக ஸ்ருஷ்டித்தாவது உண்டாக்கி, ‘உங்கள் உரிமைக்காகப் போராடுகிறோம்’ என்று சொல்லிக் கொண்டு அவர்களையும் அந்தந்த ஸெக்க்ஷன் மைனாரிட்டிகளையும் பரஸ்பர விரோதிகளாக்குவதுதான் வோட்டுப்பிடிக்க ப்ரம்மாஸ்திரம் என்று ஆக்கிக் கொண்டே இன்றைக்குப் பெரும்பாலும் ‘பாலிடிக்ஸ்’ நடக்கிறது.

மொத்தத்தில் இந்தத் தேசத்தின் உசந்த ஸமுதாயம், மேலெழ வெளியிலே பார்க்கிறதற்கு மட்டும் ஒருமைப்பாட்டு கோஷம் என்ற ஒரு ‘ஷோ’வோடு, உள்ளுக்குள்ளே பிரிந்து, பிரிந்து, பிரிந்து வீணாய்ப்போக்கொண்டிருக்கிறது. ரொம்பவும் துக்கமும் வெட்கமும் படும்படியான ஸ்திதி, பொது எதிரி ஒருத்தன்கிட்டே விரோதத்தில்தான் நமக்கு ஒன்றுசேரத் தெரிந்ததே தவிர நமக்குள்ளே பரஸ்பர ப்ரேமையில் ஒன்றுசேரத் தெரியவில்லை!

அப்போது வெளிப்பார்வைக்காவது ஸாத்விகமாகச் சண்டை நடந்த மாதிரி இல்லாமல், இப்போது வெளியிலேயும் அஸுர யுத்தமாகவே நடந்து, யதுகுலம் மாதிரி நம்மை நாமே நிர்மூலம் பண்ணிக் கொள்வதில்தான் இதுபோய் முடியுமோ என்று பயப்படுகிற ஸ்திதி ஏற்பட்டிருக்கிறது.

இந்த அபாயத்தை இப்போதுள்ள அநேகக் கட்சிகளுடைய, வர்க்கங்களுடைய தலைமை ஸ்தானத்திலிருப்பவர்கள் தெரிந்துகொண்ட ப்ரக்ஞையே இல்லாமல் போய்க்கொண்டிருப்பதுதான் ரொம்பவும் விசாரம் தருவதாக இருக்கிறது. தர்மம் என்று ஒன்று இருக்கிறது... ஜனங்களுக்கு இருக்க வேண்டிய அநேக நல்லொழுக்கங்கள் சொன்னேனே, அவை எல்லாமும் அதோடு இன்னும் பலவும் சேர்ந்துதான் தர்மம், தர்மம் என்கிறது. இந்த பாரத தேச கலாசாரத்திற்கு லோகத்திலேயே வேறே எந்தப் பெரிய ‘ஸிவிலிஸேஷ’ னுக்கும் (civilization) இல்லாத தீர்க்காயுஸைக் கொடுத்து யுகாந்தரங்களாக ரட்சித்துக் கொண்டு வந்திருக்கிறது அந்த தர்ம சக்திதான்.


It is utmost important to know what is 'Dharma'. Dr. S. Radhakrishna, describes it as follows:

Dr. S. Radhakrishnan, the great philosopher, statesman and former President of India has described what is Dharma in these words: "Dharma is that which binds society together. That which divides society, breaks it up into parts and makes people fight one another is Adharma (non-religion). Dharma is nothing more than the realization of the Supreme and acting in every small act of your life with that Supreme present in your mind. If you are able to do so, you are performing Dharma. If other interests pervade you, and you try to translate your mind into other regions, even though you may think you are a believer, you will not become a true believer.

The real believer in God has his heart always lifted to Dharma".

"Mandakolathooraan"

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mandakolathooraan/மணல்தொட்டி&oldid=2036164" இலிருந்து மீள்விக்கப்பட்டது