பயனர்:MMUTHUMANIC./மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது பெயர் மு.முத்துமாணிக்கம், நான் ஆங்கில ஆசிரியராக பணி புரிகிறேன். எனக்கு கிடைத்த பெருமை எனது ஊருக்கு கிடைத்ததாக நினைக்கிறேன். நான் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், பேரையூர் அஞ்சலுக்கு உட்பட்ட ஊராட்சிதான் புல்வாய்க்குளம் கிராமம். எனது ஊர் முதுகுளத்தூரிலிருந்து 6 கி.மீ தொலைவிலும், கமுதியிலிருந்து 19 கி.மீ தொலைவிலும் உள்ளது. எங்கள் ஊரில் “விவசாயம் இல்லையேல் விலை நிலங்கள் இல்லை,விலை நிலங்கள் இல்லையேல் விவசாயி இல்லை. விவசாயம்தான் எங்களின் உயிர் மூச்சு. இதுதான் எங்களின் பேச்சு. மேலும் எங்களது ஊரில் பிரசித்துபெற்ற ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு விநாயகப் பெருமான், ஸ்ரீஆஞ்சநேயக் கடவுள் மற்றும் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் என 3 கோவில்கள் அமைந்துள்ளது. வெள்ளி, செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் விசேச பூசைகள் நடக்கிறது. முக்கியமாக ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமி அன்று அன்னதானத் திருவிழாவும் மற்றும் கள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல் திருவிழாவும் 3 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறும். இதைக் காண சுற்று வட்டாரத்தில் உள்ள 18 பட்டி கிராம மக்கள் அன்னதானத்தோடு ஸ்ரீசீனிவாசப்பெருமாளின் அருளையும் பெற்றுச் செல்வார்கள். குறிப்பாக மாமிசம் சாப்பிட்டவர்களும் மற்றும் லுங்கி கட்டியவர்களும் கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:MMUTHUMANIC./மணல்தொட்டி&oldid=1968482" இலிருந்து மீள்விக்கப்பட்டது