பயனர்:Ktkesan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தணிகேசன் கனகசபை
பிறப்புதிருத்தணிகேசன்
பணிநிறுவுனர் SOFT LIFE கம்பனி, எவக்கிறீஸ் பிரதேர்ஸ்,எவர்கிறீன் பஷ்ஷ்ன் துணை நிறுவுனர்
செயற்பாட்டுக்
காலம்
2000-தற்போது
வலைத்தளம்
http://www.evergreenbuzz.in

திருத்தணிகேசன் (பிறப்பு - அக்டோபர் 30, 1989; இயற்பெயர்:திருத்தணிகேசன் கனகசபை ) தகவல் தொழில்நுட்பத் துறை ஆவார்.இவர் 2009 ஆம் ஆண்டு சென்னை இலயோலாக் கல்லூரியில் கணினி விஞ்ஞானத்துறையில் இணைந்து கல்வி பயின்று வந்தார் சம காலத்திலே இலங்கை யாழ்ப்பணத்தில் நண்பர்களுடன் கூட்டாக எவர்கிறீன் பஷ்ஷ் (EVERGREEN BUZZ) நிறுவனத்தை நிறுவினார் இவர் தனது ஆரம்பக்கல்வியை கல்வியங்காடு இந்துத்தமிழ் கலவன் பாடசாலையிலும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் பயின்றார்


தகவல் தொழில்நுட்பத்துறை[தொகு]

யாழ்ப்பாணம் எனும் ஊரிலே கல்வியங்காடு எனும் புழுதி படிந்த கிராமத்தில் ஓர் பிராணமணருக்கு பிறந்த மகன் தான் இன்று தமிழ் நாட்டில் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் வியாபார காந்தம் எவர்கிறீன் திருத்தணிகேசன். இவரது ஆரம்ப கால கல்வியை யாழ் இந்து கல்லூரி என்கின்ற கவர்மென்ட் ஸ்கூலில் தொடர்ந்த இவர் தன் சிறுவயது முதலே வர்த்தகத்திலும் கணனி அறிவிலும் சிறந்து விளங்கினார். தன் பாடசாலை நாட்களில் கணனி இருக்கும் பகுதியிலேயே அதிகம் காலத்தை கழிப்பாராம். ஆசிரியர்கள் வைதால் 'என் மீது திணிக்கப்படுகின்ற பாடத்தை படிப்பதை விட எனக்கு பிடித்த பாடத்தை படிப்பதே என் சமூகத்துக்கு பயன்படக்கூடும்' என்பாராம். ஆசிரியர்களே வியக்கும் வண்ணம் வர்த்தக எண்ணங்களை வெளியிடுவாராம். இவரது கனவுகளுக்கு பெற்றோரும் வழி சமைத்து கொடுக்கவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக திருத்தணிகேசனது ஆற்றல்கள் சுற்றியுள்ளவர்களை வியக்க வைத்தன.

அந்த காலத்தில் கணனி மற்றும் இணைய தொடர்புகளுக்காக பல மைல்தூரம் சென்று வந்திருக்கிறார். இவரது ஆற்றலை சாதகமாக பயன்படுத்தி கொண்ட வர்த்தக நிறுவனங்களிடமிருந்து இவர் கணனி பயன் படுத்தும் நேரத்தையே கூலியாக கேட்டார். தன் நண்பருடன் எவகிறீன்பஷ் நிறுவனத்தை தனது பதினேழாவது வயதில் ஆரம்பித்தார். (இருபத்தியொரு வயதில் இலங்கை கம்பனி சட்டத்தின் கீழ் தகவல் தொழிநுட்ப நிறுவனமாக பதிவு செய்தார்.) பின்நாட்களில் இவரது வர்த்தக ஆற்றல் கண்ட பல கம்பனிகள் இவரை விலைக்கு வாங்க நின்ற போதும் தன் மேற்படிப்புக்காக இந்தியா பயணமானார். அங்கிருந்த படியே தமிழ் நாட்டிலும் Evergreenbuzzஐ புகழ் பூத்த நிறுவனமாக வர்த்தக ரீதியில் உலகறிய செய்தார். இன்று தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிவரும் ITகம்பனியாகவும் நவீன தொழிநுட்பத்துக்கு பெயர் பெற்ற நிறுவனமாகவும் இது முன்னேறி வருகிறது. 2010ம் ஆண்டு தமிழ்நாட்டின் இளம் தொழில் முனைவர் பட்டத்தையும் தமிழ் சமூக வர்த்தக நாழிதழ் கருத்து கணிப்பின் வருங்கால வர்த்தக வீஐபி விருதையும் வென்றார். பேட்டி ஒன்றில் இவர் குறிப்பிடும் போது 'வர்த்தக பாதையில் நான் சென்ற தூரம் சொற்பபே செல்லவேண்டிய தூரமே என் கண்முன்னே விரிகிறது' என்றார். IT துறையிலுள்ளவர்களுக்கு இவர் குருவாயிருந்தாலும் தமிழுலகுக்கு கிடைத்த மறக்கமுடியாதவர்கள் பட்டியலில் எவகிறீன்பஷ் திருத்தணிகேசனும் முக்கியமானவர் என்பது மறுக்க முடியாததாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ktkesan&oldid=931608" இலிருந்து மீள்விக்கப்பட்டது