உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Kirubai/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2006-ல் வெளிவந்த ‘ப்ளிக்கா’ எனும் ஆங்கில திரைப்படத்தை இயக்கியவர் ‘மைக்கேல் மேயர்’. ‘கேட்டி’ ஒரு பதின்வயதுப் பெண்.அவளுக்கு படிப்பில் நாட்டமில்லை. தனது தகப்பனாரின் குதிரைப்பண்ணையை நிர்வகிக்க வேண்டும் என்பதே அவள் கனவு. அவள் விருப்பத்திற்கு மாறாக அவளது தந்தை ராப்,கேட்டியை ‘உண்டு உறைவிடப்பள்ளியில்’ சேர்க்கிறார். பள்ளித் தேர்வில் ஒன்றும் எழுதாமல் வெற்று தாளை கொடுத்து விட்டு கோடை விடுமுறைக்கு வீட்டுக்கு வருகிறாள். பெற்றோரும், சகோதரன் ஹாவர்டும் கேட்டியை வரவேற்று கொண்டாடுகிறார்கள்.

கேட்டி தந்தைக்கு தெரியாமல் பண்ணையில் இருக்கும் குதிரைகளுடன் நேரத்தை செலவிடுகிறாள். பண்ணைக்கு புதிதாக வந்த ஒரு முரட்டுக்குதிரையை யாராலும் அடக்க முடியவில்லை. அந்த முரட்டுக்குதிரையை இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் அடக்கி பழக்கி தன்வயப்படுத்துகிறாள். அதற்கு ‘ப்ளிக்கா’ என பெயரிட்டு பாசத்துடன் பழகுகிறாள்.. ஆரம்பத்தில் முரட்டுதனமாக எதிர்த்தாலும், கேட்டியின் அன்பை புரிந்துக்கொண்டு “ப்ளிக்கா’ நெருக்கமாகிறது.

கேட்டி தேர்வில் ஒன்றும் எழுதாமல் வெளியேறியதை பள்ளி நிர்வாகம் ராப்பிற்கு தெரிவிக்கிறது. ராப் ‘கேட்டியை’ கண்டிக்கிறார். கேட்டியின் தாயாரும் சகோதரனும் கேட்டிக்கு ஆதரவு அளிக்கிறார்கள். ஹாவர்ட் கேட்டியிடம் தான் கல்வி கற்க ஆசைப்படுவதாக தெரிவிக்கிறான்.

அச்சமயத்தில் ப்ளிக்காவை விற்க திட்டமிடுகிறார் ராப். கேட்டியும், ஹாவர்டும் ப்ளிக்காவை விற்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.ஆனால் ராப் பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றினாரா?

பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்தும் தனது ஆணாதிக்க போக்கினால் தந்தை ராப் எடுக்கும் நடவடிக்கைகளின் பின் விளைவுகளை விரிவாக பேசுகிறது. ‘ப்ளிக்கா’ திரைப்படம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kirubai/மணல்தொட்டி&oldid=2244678" இலிருந்து மீள்விக்கப்பட்டது