பயனர்:Kashya06

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெயர் இரம்யா
பிறந்த ஊர் காஞ்சீபுரம், தமிழ் நாடு
தாய்மொழி தமிழ்
ஆர்வங்கள் பற்பல, தமிழ், ஆங்கில புதினங்கள் படித்தல், வலை உலா, வலைப்பக்கங்கள் உருவாக்குதல் (கற்றுக்குட்டி), புகைப்படம் எடுத்தல், ஓவியம் வரைதல், இசை, தோட்டம், சமையல்........

கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது மிக மிக உண்மை. விரைவில் கற்க எண்ணியிருப்பவை: போன்சாய் செடி வளர்த்தல், நிழற்படம் எடுத்தல், ஓவியம், குறைந்த பட்சம் ஒரு இசைக்கருவியாவது வாசிக்க கற்றல், கர்நாடக சங்கீதம், தஞ்சாவூர் ஓவியக்கலை, பானை செய்யும் கலை, சிற்பம் செய்யக் கற்றல், பானை ஓவியம், மெழுகு ஓவியம், கண்ணாடி ஓவியம், துணிகளில் ஓவியம், தையல், ஒரு நல்ல புத்தகம் எழுத வேண்டும், வலை தளம் உருவாக்குதலை திறம்பட கற்றல், மொழிகளில் இந்தி, பிரெஞ்சு, மாண்ட்ரின், ஸ்பானிஷ் என கற்க இன்னும் பற்பல உள்ளது.. அனைத்தையும் கற்க ஒரு ஆயுள் போதுமா? தெரியவில்லை.

விக்கிப்பீடியா பற்றி: நான் எனது திருமணத்திற்குப் பின் அமெரிக்கா செல்லும்படி ஆனதால், என்னால் அங்கு பணிபுரிய இயலவில்லை. அந்த சமயத்தில் நான் பணிபுரிந்த நிறுவனத்தில் எனது குழுவின் தலைவருடன் ஒரு நாள் பேசும் போது அவர் விக்கிப்பீடியா பற்றிக் கூறினார். அதில் கட்டுரைகள் எழுதுமாறு என்னை ஊக்கப்படுத்தினார். அதற்கு முன்பு வரை ஏதேனும் பற்றி அறிய விக்கிப்பீடியாவை பயன்படுத்தி இருந்தாலும் அதில் கட்டுரை எழுத முடியும் என்பது பற்றி அப்போது தான் அறிந்தேன். அது முதல் எனது சொந்த ஊரில் இருந்த கோயில்கள், அதற்கு அருகாமையில் இருந்த இடங்கள் பற்றி கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்தேன். இவ்வாறே எனக்கு விக்கிப்பீடியாவின் அறிமுகம் கிடைத்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kashya06&oldid=547391" இருந்து மீள்விக்கப்பட்டது