பயனர்:Karthikeyan kaliyaperumal/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமூலர் சுமார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த தெய்வீக அருள் கொண்ட பதினெட்டு சித்தர்களில் திருமூலரும் ஒருவர் ஆவார். இவர் கூடு விட்டு கூடு மாறும் சித்து விளையாட்டை அறிந்தவர் என்று சொல்லப்படுகின்றது. ஒரு சமயம் இவர் ஆகாய மார்க்கமாக அலைந்து திரிந்த போது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் கிராமத்தில் ஒரு மாடு மேய்ப்பவன் இறந்து கிடந்த்தையும் அவரை ச்சுற்றிலும் அவனது மாடுகள் அழுதுகொண்டிருப்பதை கண்டு மனம் வெதும்பி அவனது கூட்டில் தனது ஆன்மாவை செலுத்தி இறந்த மூலனது உடலில் புகுந்து உயிர்த்தெழுகின்றார். மூலனை கண்டதும் அவனது மாடுகள் ஆனந்தம் கொள்கின்றன. இரவு வேளையாகிறது மூலன் மாடுகளை வீட்டுக்கு கொண்டு வருகின்றார். அங்கே மூலனின் மணைவி வரவேற்கின்றாள்.மூலனின் மணைவி ஆசையோடு வீட்டுக்கு அழைக்கின்றாள். வந்திருப்பது கணவன் இல்லை தான் ஒரு சித்தர் என்று கூறுகின்றார். கணவருக்கு ஏதோ ஆகி விட்டது என்று அவரை தன்னுடன் குடும்பம் நடத்த வேண்டும் என ஊர் பெரியோர்களிடம் முறையிடுகின்றாள். தான் ஒரு தவயோகி என்று மாடுகளின் அழுகுரலில் மனம் கலங்கி தான் கூடு விட்டு கூடு மாறி வந்த்தாக ஊர் பெரியவர்களிடம் நடந்தவற்றை கூறுகின்றார். திருமூலர் பின்னர் திருவாவடுதுறையில் உள்ள கோமுக்திஸ்வரர் ஆலயத்தில் இருந்து பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து திருமந்திரம் என்ற நூலை இயற்றியுள்ளார்.