பயனர்:Kailasanpooja04/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவா சூ காங் (Choa Chu Kang)

சுவா சூ காங் சிங்கப்பூரின் வடமேற்கிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும். இப்பகுதியின் அருகாமையில் யூ டி, தெக் வை, புக்கிட் பஞ்சாங் போன்ற குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. கிராஞ்சி இராணுவப் பயிற்சி மையமும் சுங்கைத் தெங்கா இராணுவ மையமும் தேசிய பாதுகாப்பு படைகள் முகாமும் அமைந்துள்ளன. சுவா சூ காங் பற்றி இங்கு விரிவாகக் காண்போம்.

பெயர்க்காரணம்

‘சுவா சூ காங்’ என்ற பெயர் தியோச்சு வார்த்தையான ‘காங் சு’ லிருந்து வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சீனர்கள் கேம்பியர், மிளகு போன்ற தாவரங்களைச் சுவா சூ காங் நதிக் கரைகளில் பயிரிடுவதற்காக இப்பகுதயில் குடியேறினார்கள். தோட்டங்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பான தலைவரை ‘ஆற்றங்கரை உரிமையாளர்’ அல்லது ‘மாஸ்டர்’ என்று கூறுவர். ‘காங் சூ’ என்ற வார்த்தையிலுள்ள காங் என்ற சொல்லுக்குத் ‘ஆற்றங்கரை உரிமையாளர்’ அல்லது ‘மாஸ்டர்’ என்பது பொருளாகும். ‘சுவா’ என்பது முதல் குடும்பத் தலைவரின் குலப்பெயராகும்.

வரலாறு

ஆரம்பக் காலத்தில் சுவா சூ காங், ரப்பர் மரங்கள் நிறைந்த பரந்த கிராமப் பகுதியாக இருந்தது. முதலில் இங்கு குடியேறியவர்கள் தி யோ சூ இனத்தைச் சேர்ந்த விவசாயிகளாவர். இவர்கள் தோல் பதனிடுதலில் பயன்படும் காரமும் உவர்ப்புமுள்ள மூலிகைச் செடியையும், மிளகையும் வளர்த்தனர். தோல் பதனிடுதலில் பயன்படும் காரமும் உவர்ப்புமுள்ள மூலிகைச் செடி வெற்றிலை இனத்தைச் சேரந்தது; மருத்துவ குணமும் கொண்டது. இது வணிகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் ஓர் ஊக்க சக்தியாக இருந்தது. மேலும் இச்செடி துணி வகைகளுக்குச் சாயமிடுவதற்குப் பயன்பட்டது.

தி யோ சூ இனத்தவர்களுக்குப் பின் குடியேறிய ஹொக்கியன் இனத்தவர்கள் ரப்பர், அன்னாசி, தென்னை போன்றவற்றை வளர்த்தனர். மேலும் காய்கறிகள், கோழிப்பண்ணைகள் போன்றவற்றையும் வளர்த்தார்கள். இங்கு வாழ்ந்தவர்கள் போக்குவரத்திற்குப் படகையும் மாட்டு வண்டியையும் பயன்படுத்தினர். மேலும் அக்காலத்தில் இப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அப்புலிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்தனர். கடைசிப் புலியை 1930ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனர். கம்போங் பெலிபிங், சுவா சூ காங் கிராமம், கம்போங் பெரிக் போன்ற கிராமப்புறங்கள் 1993-1998 ஆம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டன. இந்த இடம் தற்போது ஆயுதப் படை துப்பாக்கிச் சுடும் இடமாகவும் இராணுவ இடமாகவும் மாற்றியுள்ளனர்.    

சுவா சூ காங் குழுத் தொகுதி

இது ஐவர் கொண்ட குழுத் தொகுதி. 1998-2011 வரை ஹொங்கா குழுத் தொகுதி என்று அழைக்கப்பட்டது. இக்குழுத்தொகுதி ஏழு துணைத் தொகுதிகள் கொண்ட ஒரு பகுதியாகும்.

கல்வி

 சுவா சூ காங் பகுதியில் எட்டு தொடக்கப்பள்ளிகளும் ஆறு உயர்நிலைப் பள்ளிகளும் இருக்கின்றன. மேலும், இப்பகுதியில் ஒரு தொடக்கக் கல்லூரியும் இருக்கிறது. இப்பகுதிக்கு மேற்குத் திசையில் கூடுதலாக புதிய தொழிற்கல்லூரி 2010ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

இப்பகுதிகள் அமைந்துள்ள பள்ளிகள்

தொடக்கப்பள்ளி

  • சுவா சூ கால் தொடக்கப்பள்ளி
  • கான்கார்ட் தொடக்கப்பள்ளி
  • டி லா சா தொடக்கப்பள்ளி
  • கிராஞ்சி தொடக்கப்பள்ளி
  • சவுத் வியூ தொடக்கப்பள்ளி
  • தெக் வாய் தொடக்கப்பள்ளி
  • யூனிட்டி தொடக்கப்பள்ளி
  • இயூ டீ தொடக்கப்பள்ளி

உயர்நிலைப்பள்ளி

  • புக்கிட் பாஞ்சாங் அரசு உயர்நிலைப்பள்ளி
  • சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி
  • கிராஞ்சி உயர்நிலைப்பள்ளி
  • ரீஜண்ட் உயர்நிலைப்பள்ளி
  • தெக் வாய் உயர்நிலைப்பள்ளி
  • யூனிட்டி உயர்நிலைப்பள்ளி

கல்வி நிறுவனங்கள்

  • பயனியர் தொடக்கக்கல்லூரி
  • தொழிற்கல்லூரி (ITE)

போக்குவரத்து வசதிகள்

இரயில் நிலையங்கள்

சுவா சூ காங் பகுதியில் பெருவிரைவு இரயில் நிலையம் ஒன்று உள்ளது. இது பொதுமக்களின் வசதிக்காக உள்ளது. மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் சென்றவர பெரு விரைவு இரயிலைப் பயன்படுத்துகிறார்கள்.

இப்பகுதியில் இலகு இரயில் நிலையமும்(LRT) உள்ளது. 1996ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி இந்த இரயில் நிலையம் திறக்கப்பட்டது. பொதுமக்கள் மற்ற இடங்களுக்கு வெகு சீக்கிரமாகச் சென்றுவர இந்த இரயில் பயன்படுகிறது. ஓட்டுநரே இல்லாமல் இந்த இரயில் ஓடுகிறது. இந்த இரயில் இயூ டீ, சுவாசூ காங் புதிய நகரம் ஆகியவற்றிற்குச் சென்று வருகிறது. 

பேருந்துச் சேவைகள்

பேருந்துச் சேவைகளும் பொதுமக்களின் வசதிக்காக உள்ளன. மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் சென்றவர பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள். பொதுமக்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்லத் தேவையான பேருந்தில் ஏறிச் சொல்வதற்காக 1990 ஆம் ஆண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. மேலும், 12 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டன. பேருந்து நிலையத்தில் தற்போது 15 பேருந்துச் சேவைகள் உள்ளன. இந்தப் பேருந்து நிலையம் மூன்று முதல் 5 வருடங்களுக்குள் புதுப்பிக்கப்படும் திட்டமும் உள்ளது.

இணைப்புச் சாலைகள்

கிராஞ்சி விரைவுச்சாலை (KJE) சிங்கப்பூரின் அதிவேக இணைப்புடன் சுவா சூ காங் புதிய நகரம் வரை இணைகிறது. மேலும், புக்கிட் தீமா விரைவுச் சாலை பேன்தீவு விரைவுச்சாலையுடன் இணைந்து அமைந்துள்ளதால் சிங்கப்பூரின் மத்தியப் பகுதிக்கும் சிங்கப்பூர் கிழக்குப் பகுதிகளுக்கும் எளிதில் சென்று வரலாம்.

பொழுதுபோக்கு வசதிகளும் பேரங்காடிகளும்

சுவா சூ காங் பகுதியில் லாட் ஒன், கேப்பிட்டல் லேண்ட் ஆகிய இரண்டு பெரிய பேரங்காடிகள் உள்ளன. லாட் ஒன் என்ற பேரங்காடி 1996ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. இது ஆறு மாடிகளைக் கொண்ட கட்டடமாகும். இதனுள் 148 கடைகள் இயங்குகின்றன. இதன் பரப்பளவு 28,011.7 மீ2 ஆகும். கேப்பிட்டல் லேண்ட் 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதனுள்ளும் பல கடைகள் உள்ளன. அனைத்துக் கடைகளுமே மக்களின் வசதிக்கேற்ப அமைந்துள்ளன.

சுவா சூ காங்கின் வடக்குப் பகுதியில் சுவா சூ காங் பூங்கா அமைந்துள்ளது. இது 11 ஹெக்டேர் பரப்பளவில் அனைத்து வயதினரும் பொழுதுபோக்கும் விதமாகப் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. சிறுவர்கள், பெரியவர்கள் உடற்பயிற்சி செய்யவும் குடும்பத்தினர் பொழுதுபோக்கும் விதமாகவும் உள்ளது. மேலும், இப்பகுதியில் தெம்புசு பூங்கா, லிம்பாங் பூங்கா, ஸ்டாக்மோண்ட் பூங்கா, இயூ டீ பூங்கா போன்ற பல பூங்காக்கள் உள்ளன. இந்தப் பூங்காக்கள் பொதுமக்கள் தங்களுடைய மனவுளைச்சலைப் போக்கி மகிழ்ச்சியாக வாழ உதவுகின்றன.

ஒரு விளையாட்டு மைதானமும் சுவா சூ காங் பகுதியில் அமைந்துள்ளது. அவ்விளையாட்டு அரங்கத்தினுள் நீச்சல் குளமும் உள்ளது. அந்நீச்சல் குளத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீச்சல் பயற்சி மேற்கொள்கிறார்கள்.     

மருத்துவ வசதிகள்

சுவா சூ காங் பகுதியில் பொதுமக்களின் நோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனை இயங்குகிறது. இம்மருத்துவமனை 2010ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு இயங்குகிறது. இம்மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், தாதியர்கள் போன்றோர் சிறந்த சேவைகளை வழங்குகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kailasanpooja04/மணல்தொட்டி&oldid=2251135" இலிருந்து மீள்விக்கப்பட்டது