பயனர்:John Murugaselvam

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜான் முருகசெல்வம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் குற்றவியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கல்வியியல், பள்ளி மேலாண்மை, மொழியியல், கற்பித்தல் முறை போன்ற துறைகளிலும் தேர்ச்சிபெற்றவர்.

செகந்திராபாத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர்க்கான தேசிய நிறுவனத்தில் மனவளர்ச்சிக் குன்றியோர்க்கான சிறப்புக் கல்வியிலும், தமிழ்நாடு அரசு நடத்தும் காது கேளாதோர்க்கான சிறப்புக் கல்வியிலும், கொச்சியில் உள்ள ரக்க்ஷா நிறுவனம் நடத்தும் மூளைவாதம் உள்ளோர்க்கான சிறப்புக் கல்வியிலும் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

குவாலியரில் உள்ள ராணி லக்குமிபாய் தேசிய உடற்கல்வியியல் நிறுவனத்தில் ஊனமுற்றோர்க்கான விளையாட்டு, சிங்கப்பூரில் உள்ள ஜெனிஸிஸ் நிறுவனத்தில் கற்றல் குறைபாடுள்ளோர்க்கான சிறப்புக்கல்வி, சிங்கப்பூர் தேசிய தொழில்சார் சிகிச்சைக் கழகத்தில் புலன் ஒறுங்கிணைப்புப் பயிற்சி, சென்னையில் உள்ள ஆல்பா டு ஒமேகா நிறுவனத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கான கருத்துச் செறிவியல் பயிற்சி, ரஸா நிறுவனத்தில் படைப்பியக்கச் சிகிச்சை போன்ற பல்வேறுபட்ட பயிற்சிகளிலும் தேர்ச்சிபெற்றுள்ளார்.

இலங்கை, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா போன்ற இடங்களில் மனவளர்ச்சி குன்றியோர்க்கான, காது கேளாதோர்ர்க்கான, தற்புனைவுள்ளோர்க்கான, மூளைவாதமுள்ளோர்க்கான, க்ற்றல் குறைபாடுள்ளோர்க்கான சிறப்புப் பள்ளிகளை நிறுவ மூளையாகச் செயல்பட்டுள்ளார்.

ஜான் முருகசெல்வம் எழுதிய நூல்கள்:

01. மனவளர்ச்சிக் குறை 02. மனவளர்ச்சி குன்றியோரின் பாலியல் மற்றும் திருமணப் பிரச்சினைகள் 03. கற்றல் குறைபாடு ஏன்? 04. காது கேளாமை ஏன்? 05. பேச முடியாமை ஏன்? 06. ஆட்டிச ஊனம் 07. டெளன் சிண்ட்ரோம் 08. துறு துறுக் குழந்தைகள் 09. காது கேளாதோர்க்கான பேச்சுப் பயிற்சி 10. மனவளர்ச்சி குன்றியோர்க்கான பேச்சுப் பயிற்சி 11. மாற்றுத் திறனாளிகள் 12. உங்கள் குழந்தைகளின் பிரச்சினைகளை உளரீதியாக தீர்ப்பது எப்படி? 13. சிறுவர் சீர்திருத்தமும் சிறார் நீதிச் சட்டமும்

தொடர்புக்கு:

மின்னஞ்சல்: murugaselvam@yahoo.com தொலைபேசி: 04554 292238 அலைபேசி: +919444280044 முகவரி: "Joyce Villa", Post Box No: 20, Cumbum-625516

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:John_Murugaselvam&oldid=517571" இலிருந்து மீள்விக்கப்பட்டது