உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Jaya Priscilla/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்ரதுர்கா கோட்டை இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் பழம் பெரும் மலைக்கோட்டையாகும். ஆங்கிலேயரால் சித்தல்தூர் என்று அழைக்கப் பட்ட இந்த கோட்டை கன்னடத்தில் "அழகிய கோட்டை" என்று பொருள்படும். இக்கோட்டை பல மலைகள் மற்றும் ஒரு தட்டையான பள்ளத்தாக்கை கொண்டு அமையப்பெற்றுயுள்ளது. 11ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் இராஷ்டிரகூடர், சாளுக்கியர்கள், போசளப் பேரரசு மற்றும் சித்ரதுர்காவின் நாயக்கர்களால் அன்றய சித்ரதுர்கா பிராந்தியத்தில் கட்டப்பட்டது.


பிற பெயர்கள்

இக்கோட்டை ”கல்லினா கோட்” அல்லது ”கற் கோட்டை” என்றும் உள்ளூரில் அழைக்கப்படுகிறது. இதற்கு உக்கினா கோட் (பொருள் - எஃகு கோட்டை), யுவசுதுணா கோட் (பொருள் - ஏழு வட்ட கோட்டை) என்றும் பெயர்கள் உண்டு.

வரலாறு

கோட்டையின் கல்வெட்டுகளின் மூலம் இது கி.மு 3 வது மில்லினியம் வரையில் உள்ள் வரலாற்று நிகழ்வுகள் குறிக்கப்பட்டுள்ள்து. இது இக்கோட்டையின் பழமையை குறிக்கிறது . 1500 கி.மு. மற்றும் கி.மு. 1800 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சித்ரதுர்கா கோட்டை கொந்தளிப்பான வரலாற்றைக் கண்டது. விஜயநகர சாம்ராஜ்யத்துடன் தொடங்கி ஒரு கொந்தளிப்பான வரலாற்றைக் கண்டது. ஹொய்சாலாவிலிருந்து இந்த பிராந்தியத்தை விஜயநகர பேரரசு கட்டுப்பாட்டில் கொண்டது. விஜயநகர் ஆட்சியாளர்கள் நயாகர்களை அவர்களின் வம்சாவளி ஆட்சி வரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இராணுவத் தளபதிகளாக கொண்டுவந்தனர். பிறகு சித்ரதுர்காவின் நாயக்கர்கள் இப்பகுதியின் சுதந்திரமான கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டனர். அவர்கள் 200 ஆண்டுகளாக தங்களின் கடைசி ஆட்சியாளர் மடகாரி நாயகா, மைசூர் சாம்ராஜ்யத்தை சேர்ந்த ஹைதர் அலியால் தோற்கடிக்கப்படும் வரை ஆண்டனர். அது வரையிலும் அவர்களின் கோட்டை மற்றும் அவர்களின் மாகாணத்தின் இதயமாய் திகழ்ந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jaya_Priscilla/மணல்தொட்டி&oldid=2674581" இலிருந்து மீள்விக்கப்பட்டது