பயனர்:Janalk

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவசமயம்

வண்ணை வைத்தீஸ்வரன் சிவன் ஆலயம்  யாழ்ப்பாணம்

-              க.சி.குலரத்தினம் -

சிவபூமி

வண்ணை வைத்தீஸ்வரன் ஆலய வரலாற்றினை நோக்கினால் இற்றைக்கு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிறப்பினை பெரும் வண்ணை வைத்தீஸ்வர சிவன் ஆலயம். சிவபூமி என்று திருமூலநாயனாரால் போற்றப்பெற்ற இலங்கையின் ஈஸ்வரங்கள்  சிவன் கோயில்கள் எண்ணுக் கடங்காதவாறு எங்கணும் நிறைந்து இருக்கிறது . வரலாற்றினை நோக்கினால் இராவணன் காலத்து இலங்கை இன்றைய நாட்டிலும் பார்க்கப் பெரிதாக இருந்தது. இராவணனும் அவரது   தேவி மண்டோதரியும் பெரிய சிவபக்தர்கள். அவர்களது  சிவபக்தியை திருமுறைகள் பல விடயங்களிற் போற்றுகின்றன. இராவணனின் தாயார் கைகேயி . இவர் மிகவும் சிவா பக்தர். இவர்களது காலத்தில்  ஆற்றலுக்கு அப்பாற்பட்ட கட்டட அமைப்புக்கள் பல இயக்கர் நாகர் முதலானவர்களாற் கட்டப்பெற்றிருந்தன என்பது அவற்றின் அழிபாடுகளிலிருந்தும் அத்திபாரங்களிலிருந்தும் அறிய முடிகிறது.  தம்பி விபீடணன் மிகவும் சிவா பக்தன்  இலங்காபுரியின் காவல் தெய்வம்.

தேவாரம் பாடப்பெற்ற ஈஸ்வரங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் முதலிய சிவாலயங்களை விட நகுலேஸ்வரம், முன்னீஸ்வரம் முதலிய ஈஸ்வரங்களும் முற் காலத்தில் அருள்  நிறைந்த ஆலயமாக காணப்படடன. சிவனெனும் நாமம் சிந்தையில் எப்பபோதும் நிறைவாக இருந்தது .

ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து அறிவாளிகள் இருவர் ஒருவர் பின் மற்றவராய் வந்தார்கள். ஒருவர் கொச்சிக்கணேச பண்டிதர் என்னும் ஜயராவர். மற்றவர் காஞ்சிபுரத்திறேன்றி திருக்கைலாய பரம்பரைத் திருப்பனந்தாள் மடத்தத் தமபிரான் சுவாமிகளாயிருந்த கணகசபாதி யோகியாவர். இவரைக் கூழாங்கைத்தம்பிரான் எனவும் வழங்கினர்.

கணேசபண்டிதர் யாழ்ப்பாணத்து வண்ணை நகரில் வாழ்ந்து செந்தமிழ் பரிபாலனஞ் செய்த காலத்தில் கோபால் செட்டியார் என்னும் வணிகர் ஒருவர் அவர் பணியில் ஈடு பட்டிருந்தார். ஒரு சமயம் இவர் கணேசையருடன்கருத்து வேறுபாடு கொண்டு, அவரை விட்டு விலகிச் சம்பா அரிசி வியாபாரஞ்செய்து பொருளீட்டி வந்தார். இவரின் நேர்மையைக் கண்ட ஒல்லாந்த உத்தியோகத்தர்கள் இவரிடம் தமக்கு வேண்டிய பண்டங்களை வாங்கி வியாபாரத்தை ஊக்கி வந்தார்கள்.

பெருஙஞ்செல்வனான கோபால்செட்டியார் யாழ்ப்பாணத்தில் இருந்த ஒல்லாந்த ஒல்லாந்த அரசாங்க அதிபருக்கு பண்டங்கள் விநியோகித்து மதிப்புப் பெற்றிருந்தார். மதிப்புப் பெற்ற கோபால்செட்டியாரின் மனையில் கூழாங்கைத்தம்பிரான் தங்கியிருந்து தமிழ், சைவம் வளர்த்து வந்தார். கோபால்செட்டியாரின் மைந்தனாகிய இளவல் வைத்திலிங்கம் என்பாரின் அழகையும் குறும்புத்தனத்தையும் கண்டு வியந்த அரசாங்க அதிபர், அவரைத்தாமே வளர்க்க விரும்பித் தம் மாளிகையில் வளர்த்து வந்தார். செல்லப்பிள்ளையாக வளர்ந்த வைத்திலிங்கம் வர்த்தகத்துறையிலும் அரசாங்க அலுவல்களிலும் நேரனுபவம் பெற்று வந்தார். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தார் முத்துக்குளிப்பதில் பெருமுயற்சியுள்ளவராய், அரசாங்கத்திடம் உத்தரவு பெற்று மேற்குக்கடலில் பெருந்தொகையான முத்துக்களைப் பெற்று வந்தார்கள். இத் துறையில் தானும் ஈடுபட விரும்பிய வைத்திலிங்கம் தன் வளர்ப்புத்தாயான ஒல்லாந்தச் சீமாட்டியின் கண்ணியத்தால் அத்துறையில் புகுந்து பெருஞ் செல்வனாயினார்.

சிவனுக்கு ஓர் ஆலயம்

பெருஙஞ்செல்வனாகிய வைத்திலிங்கச் செட்டியார் தமக்கென ஒரு பெரிய வீடு கட்டுவதற்கு விரும்ய போது குல குருவாகிய கூழாங்கைத்தம்பிரான் ' குழந்தாய்! உன்னை இந் நிலைக்குக் கொண்டு வந்த பெருங்கருணைத்தடங்கடலாய சிவ பெருமானுக்கு அதியற்புதமான ஊராலயத்தை முதலில் அமைத்துவிட்டு உனக்கு விருப்பமான முறையில் மாளிகையைக கட்டுவாயாக' என் வாழ்த்தினார். தம்பிரான் சுவாமிகளுக்கு வேண்டிய நாளாந்த பணிவிடைகளைப் பொறுமையோடு கடமையுணர்ச்சியோடு செய்து வந்தவர் வைத்திலிங்கம் செட்டியாரின் தாயாரான தையலாச்சி என்னும் பெண்கள் திலகமாவள் தாய்த்தெய்வத்தின் திரு நாமத்தை முன்னிறுத்தி தையல் நாயகி சமேத வைத்தீசுவரன் கோயில் அமைப்பதில் வைத்திலிங்கம் செட்டியார் முழுக்கவனஞ் செலுத்தினார். தமிழ்நாட்டில் உள்ள சிவாலங்களினமைப்பில் ஈழத்திரு நாட்டில் புதிதாக ஆலயம் அமைக்க முற்பட்ட செட்டியார், ஆகமம் வல்லாரை அழைத்துப் பூர்வாங்க ஏற்பாடுகள் யாவற்றையும் நிறைவேற்றினார்.

வண்ணார்பண்ணையில் வைத்திலிங்கம் செட்டியார் சவாலயம் அமைக்கிறாராம் என்று கேள்விப்பட்ட ஊரவர் நாட்டவர் அனைவரும் நான்கு பக்கங்களிலிருந்தும் தத்தம் காணிக்கைப் பொருள்களோடு வந்து குவிந்து ஆவன செய்து நின்றனர். திருக்கோயில் வேலைகள் முடிவுற்றதும் 1791 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் கும்பாபிடேகம் சிறப்பாக நடைபெறுவதற்குக் கூழாங்கைத்தம்பிரான் முன்னின்று பணிபுரிந்தார். தையல் நாயகி சமேத லைத்தீஸ்வரப் பெருமான், செட்டியார் அன்புடமைதடத திருக்கோயிலில் எழுந்தருளினார்.

திருக்கோயில் ஒரு கண்ணோட்டம்

கூழங்கைத்தம்பிரான் சுவாமிகள் மேற்பார்வையில் ஆகமம் வல்லார் அமைத்த திருக்கோயிலின் ஆதிமூலம் என்னும் கர்ப்பக்கிருகமும் அதனையடுத்த ஏயைய மண்டப வரிசைகளும் விமானமும் மூன்று பிரகாரங்காரங்களும் மிக அமைவாக ஏற்பட்டுள்ளன. மூலமூர்த்தியும் பரிவாரதெய்வங்களும் எழுந்தருளிகளும் தென்னகத்துத் தெய்வாம்சம் நிறையச் சமைந்துள்ளன.

ஆனந்த நடனஞ் செய்யும் அதியற்புத நடராசமூர்த்தம், பிச்சாடணடூர்த்தம், சோமஸ்கந்தமூர்த்தம், சந்திரசேகரடூர்த்தம் முதலாய தெய்வங்கோலங்கள் சிறப்பிடம் வகிக்கும் திருக்கோயில் வாகனங்களும் கலைப்பொழிவு நிறைந்தனவாகும்.

தையல் நாயகிக்குத் தெற்கு நோக்கிய தனிவாசலும், ஆடியுற்சவமும் அழகும் அலங்காரச்சிறப்பும் அமைந்தவை. அப்பன் வைத்தீஸ்வரனுக்குப் பங்குனிப் பெருவிழா பல வகைச் சிறப்புக்களும் ஒருங்கமைய நடைபெறுவன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Janalk&oldid=2163372" இலிருந்து மீள்விக்கப்பட்டது