உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:JanakiK

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிறப்பியல்

       ஒவ்வொரு உயிருகளுக்கும் பிறப்பு என்பதும், இறப்பு என்பதும் இயற்கை. அதுப்போல் எழுத்துக் களுக்கும் பிறப்பு உண்டு என்பதையும், அவை பிறக்கும் முறை பற்றியும் தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் பிறப்பியல் என்ற இயலில் தெளிவாக விளங்கியுள்ளார். ஒலி எழுத்துக்களின் பிறப்பிடங்களைக் கூறும் பகுதி பிறப்பியல். 

• எழுத்துகளது பொதுப்பிறப்பு • உயிரெழுத்துக்களின் பிறப்பு • உயிர், மெய் பிறப்பிற்குப் பொது விதி • மெய்யெழுத்துக்களின் பிறப்பு • மெல்லெழுத்துகள் பிறப்புக்கு ஒரு சிறப்பு விதி • சார்பெழுத்துகளின் பிறப்பு • எழுத்துகளின் பிறப்புக்குப் புறனடை • புறனடை எழுத்துகளது பொதுப்பிறப்பு “உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற் றமைய நெறிப்பட நாடி எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப் பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல திறப்படத் தெரியுங் காட்சி யான.” விளக்கம் உந்தியிலிருந்து காற்றுத் தோன்றி, மேலே வந்து தலை, கழுத்து, நெஞ்சு இவற்றில் நின்று, பல், உதடு(இதழ்), நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகிய (3+5) எட்டு உறுப்புக்களிலும் தொடர்புற்று, எல்லா ஒலி எழுத்துக்களும் தோன்றும். ஒவ்வொரு வகை எழுத்துக்களும் வெவ்வேறு தன்மையில் தோன்றும்; அவை தெளிவாக அறிவியல் அடிப்படையில் அமைந்துள்ளன. உயிரெழுத்துக்களின் பிறப்பு “அவ்வழிப் பன்னீ ருயிரும் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.” விளக்கம் அவ்வாறு பிறக்குமிடத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும், கழுத்திலிருந்து பிறந்த ஒசைக் காற்றால் ஒலிக்கும் உயிரெழுத்துகட்குச் சிறப்புப் பிறப்பு உணர்த்துதல் “அவற்றுள் அஆ ஆயிரண் டங்காந் தியலும்.” விளக்கம் அகர ஆகாரம் இரண்டு ஒலிகளும், வாயை ஆ வெனத் திறத்தலால் பிறக்கும் இகரம் முதலியன பிறக்குமாறு “இஈ எஏ ஐயென இசைக்கும் அப்பால் ஐந்தும் அவற்றோ ரன்ன அவைதாம் அண்பல் முதல்நா விளிம்புறல் உடைய.” விளக்கம் இஈஎஏஐ என்னும் ஐந்து உயிரெழுத்துக்களும் முற்கூறியது போல வாயை அங்காத்தலால் தோன்றும், மேலும் அவை மேற்பல்லின் அடியை நாவினது அடிவிளிம்பு சென்று பொருந்தப் பிறக்கும் உகரம் முதலியன பிறக்குமாறு “உஊ ஒஓ ஒள என இசைக்கும் அப்பால் ஐந்தும் இதழ்குவிந் தியலும்.” விளக்கம் உஊஒஓஔ என ஒலிக்கும் ஐந்து உயிர் எழுத்துக்களும் இதழ் குவித்துச் சொல்லப் பிறக்கும் உயிர், மெய் பிறப்பிற்குப் பொது விதி “தத்தந் திரிபே சிறிய வென்ப.” விளக்கம் எழுத்துக்கள் பிறக்கும் போது சொல்லிய முறையில் பிறக்கும். மேலும் தத்தம் சிறிய அளவில் வேறுபாடுகளுடன் ஒலிக்கும்

மெய்யெழுத்துக்களின் பிறப்பு க,ங – மெய்கள் “ககார ஙகாரம் முதல்நா அண்ணம்.” விளக்கம் அடி நா, அடி அண்ணத்தைப் பொருந்த க, ங பிறக்கும் ச,ஞ – மெய்கள் “சகார ஞகாரம் இடைநா அண்ணம்.” விளக்கம் இடை நா, இடை அண்ணத்தைப் பொருந்த ச, ஞ பிறக்கும் ட,ண – மெய்கள் “டகார ணகாரம் நுனிநா அண்ணம்.” விளக்கம் நுனி நா, நுனி அண்ணத்தைப் பொருந்த ட, ண பிறக்கும் மெய்யெழுத்துகட்குச் சிறப்புப் பிறப்பு “அவ்வா றெழுத்தும் மூவகைப் பிறப்பின.” விளக்கம் மேற்கூறிய ஆறு எழுத்துக்களும் மூவகையான பிறப்பையுடையன. த,ந – மெய்கள் “அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின் நாநுனி பரந்து மெய்யுற வொற்றத் தாமினிது பிறக்குந் தகார நகாரம்.” விளக்கம் மேல் அண்ணத்தில் நெருங்கிய மேற்பல்லின் அடிப்பக்கத்தில் நாவின் நுனி பரந்து நன்கு அழுத்த த, ந இரண்டும் பிறக்கும் ற,ன – மெய்கள் “அணரி நுனிநா அண்ணம் ஒற்ற றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்.” விளக்கம் நுனிநா அண்ணாந்து அண்ணத்தைச் சென்று ஒற்ற ற, ன ஆகிய இரண்டும் பிறக்கும் ர,ழ – மெய்கள் “நுனிநா அணரி அண்ணம் வருட ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.” விளக்கம் நுனிநா அண்ணாந்து அண்ணத்தைத் தடவ ர, ழ இரண்டும் பிறக்கும் ல,ள – மெய்கள் “நாவிளிம்பு வீங்கி யண்பல் முதலுற ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும் லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.” விளக்கம் நாவினது விளிம்பு தடித்து மேற்பல்லின் அடியைப் பொருந்துங்கால், அவ்விடத்தே அண்ணத்தை ஒற்ற ‘ல’ வும் வருட ‘ள’ வும் பிறக்கும். ப,ம – மெய்கள் “இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்.” விளக்கம் மேல் உதடும் கீழ் உதடும் சேரப் பிறக்கும் ப, ம. வகார – மெய் “பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும்.” விளக்கம் மேல்பல் கீழ் இதழோடு சேர ‘வ’ பிறக்கும் யகார மெய் “அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும்.” விளக்கம் அண்ணத்தைச்சேர்ந்த மிடற்றிலிருந்து வருகின்ற ஓசைக் காற்று அம் மேல்வாயை நன்கு அணைந்து பொருந்த ‘ய’ பிறக்கும் மெல்லெழுத்துகள் பிறப்புக்கு ஒரு சிறப்பு விதி “மெல்லெழுத் தாறும் பிறப்பின் ஆக்கஞ் சொல்லிய பள்ளி நிலையின வாயினும் மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்.” விளக்கம் முன்பு கூறியபடி மெல்லெழுத்துக்கள் பிறந்தாலும் ஆறும் பிறந்தாலும் மூக்கின் வழிவெளிப்படும் காற்று இசையால் பொருத்திப் பிறக்கும் சார்பெழுத்துகளின் பிறப்பு “சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்துவெளிப் படுத்த ஏனை மூன்றும் தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி ஒத்த காட்சியின் தம்மியல் பியலும்.” விளக்கம் தமக்கெனத் தனித்தன்மை இல்லாத சார்ந்து வருகின்ற சார்பெழுத்துக்களாகிய குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்று எழுத்துக்களும், தாம் சார்ந்துள்ள முதல் எழுத்துக்களின் பிறப்பிடமே தம் பிறப்பிடமாகக் கொண்டு ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் தமக்குரிய இயல்பில் நடக்கும். எழுத்துகளின் பிறப்புக்குப் புறனடை “எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்த சொல்லிய பள்ளி யெழுதரு வளியின் பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்(து) அகத்தெழு வளியிசை யரில்தப நாடி அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே.” விளக்கம் எல்லா எழுத்துக்களும் முன்பு கூறிய பிறப்பிடங்களிலிருந்து பிறக்கும் ஓசைக் காற்றினால், வெளிப்படக் கேட்குமாறு சொல்லும் போது, உள்ளே உறுப்புக்களில் தங்கிச் சுழன்று எழும் ஓசைக் காற்றுக்கு அளபு கூறுதல் அந்தணர் இலக்கணநூல்களில் காணப்படும் அதனை இங்குக் கூறாது, புறனடை “அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே.” விளக்கம் வாயிலிருந்து வெளிவரும் ஓசைக்குரிய மாத்திரையை மட்டும் கூறியுள்ளேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:JanakiK&oldid=1287478" இலிருந்து மீள்விக்கப்பட்டது