பயனர்:Jafira Nassar/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பூரின் பொது வீடமைப்பு

சிங்கப்பூரின் பொது வீடமைப்பு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிங்கப்பூரில் நிறைய அடுக்குமாடிக் கட்டடங்களைக் கொண்ட வீடமைப்புப் பேட்டைகள் உள்ளன. இவ்வீடமைப்புப் பேட்டைகளில் பள்ளிகள், மருந்தகங்கள், உணவகங்கள், சந்தைகள், விளையாடுவதற்கான இடங்கள் மற்றும் பல வசதிகள் இருக்கின்றன. ஏழைகளுக்கு உதவுவதே அடுக்குமாடி வீட்டைக் கட்டுவதற்கான முக்கியக் காரணமாகும். ஆனால், இப்போது பெரும்பாலான சிங்கப்பூரர்கள் அடுக்குமாடி வீடுகளில் குடியிருக்கிறார்கள்.


• வரலாறு சிங்கப்பூரர்கள் தங்களுடைய கடைகளுக்கு மேல் இருக்கும் வீடுகளிலும், கிராமங்களிலும் (கம்போங்) வாழ்ந்து வந்தார்கள். பணக்காரர்கள் மட்டுமே தங்களுடைய சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்கள்.


• பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் SIT (சிங்கப்பூர் முன்னேற்ற வாரியம் – Singapore Improvement Trust) 1920- வாக்கில் சிங்கப்பூரின் வீடமைப்பைக் கண்ட பிரிட்டிஷ் அரசாங்கத்தார் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கினார்கள். ஆனால், 32 வருடங்களில் 24,000 அடுக்குமாடி வீடுகளை மட்டுமே கட்ட முடிந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சிங்கப்பூர் இன்னும் பாதிக்கப்பட்டதால் பிரிட்டிஷ் நிர்வாகம் சிங்கப்பூரின் வீடமைப்பு உலகிலேயே மிகவும் மோசமான ஒன்று என்று கூறிவிட்டது.


• வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (HDB) சிங்கப்பூரில் வசிக்கும் அனைவருக்கும் வீடு என்பதை தனது லட்சியமாக கொண்டிருந்தார் முன்னாள் பிரதமர் திரு லீ குவான் யூ. அந்தக் காலத்தில், சிங்கப்பூர் எதிர்நோக்கியிருந்த முக்கிய, சிக்கலான பிரச்னைகளில் ஒன்று குடியிருப்புக்கள். திரு லீ, பிரதமர் ஆனவுடன், கடந்த 1960ம் ஆண்டில், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தைத் துவக்கினார். திரு லிம் கான் சானின் தலைமையில் புதிய ஐந்து வருடத் திட்டம் ஒன்று உருவானது. மக்கள் வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடுகளை வாங்கிக் குடியேறினார்கள். வெறும் 10 வருடங்களில் 1,47,000 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன. திரு லிம் கிம் சான்,அரசாங்கம், மற்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் உறுப்பினர்களின் மூலம் கிடைத்த ஆதரவால், ஐந்து வருடங்களில் அதிக வீடுகளைக் கட்டி முடித்தார்கள்


• வேறு குடியிருப்புகள் HDB-ஐ தவிர ஜூரோங் நகர மேம்பாட்டு வாரியமும் (JTC – Jurong Town Corporation) மற்றும் பொருளாதார மேம்பாட்டு ஆணையமும் பல வீடுகளை 1968-இலிருந்து 1970-வரை கட்டினார்கள்.


• நடுத்தர வருமானமுடைய குடும்பம் 1974 இல் இருந்து 1982 வரை, HDB வீடுகளை வாங்க முடியாத நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்குச் சொந்த வீட்டைக் கட்டுவதற்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனம் (HUDC) உதவியது. HDB, 1982 இல் JTC மற்றும் HUDC-ஐ தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.


• கூடுதல் வருமானமுடைய குடும்பம் 1999 ஆம் ஆண்டில், HDB நிர்வாக வீடுகளைக் கட்டியது. இவை HDB வீடுகள் வேண்டாம் என்று சொல்லித் தனியார் வீடுகளை வாங்க விரும்பிய, ஆனால் அந்த வீடுகளை வாங்கும் அளவு வருமானம் இல்லாத மக்களின் தேவைகளை நிறைவேற்றவே உருவானவை.


• ஒருங்கமைப்பு SIT-உடைய ஆரம்பத் திட்டங்களில்,புதிய நகர வரைபடம் ஒன்று இருந்தது. ஆனால், HDB வந்ததற்குப் பிறகு புதிய நகர வரைபடத்தை அவர்களே கட்டுப்படுத்தினார்கள்.ஆகையால், அவர்களே புதுப் புதுக் கட்டடங்களைக் கட்டினார்கள். சிங்கப்பூரிலேயே குட்டி நகரங்களை உருவாக்கினார்கள். அடுத்த சில வருடங்களில் பெரிய கட்டடங்களை ஒவ்வோர் இடத்திற்கும் தகுந்த மாதிரி அமைத்தார்கள். இப்போது சிங்கப்பூரில் 23 HDB நகரங்களும் மற்ற மூன்று அடுக்குமாடி வீட்டுக் கட்டடங்களும் உள்ளன. சில குட்டி நகரங்களில் நிறைய கட்டடங்கள் இருக்கும். HDB கட்டடங்களில் பள்ளிகள், மருந்தகங்கள், விளையாட்டு இடங்கள், சந்தைகள் இருப்பது மட்டுமல்லாமல் பேருந்து நிறுத்தத்திற்கும் இடம் உள்ளது. HDB நகரம் என்பது ஒவ்வொரு சுற்றுவட்டாரத்தைக் குறிக்கிறது. ஒவ்வொரு அடுக்குமாடி கட்டடத்தின் எண்ணுடைய முதல் எண் வட்டாரம் என்னவென்று காட்டும். ஒவ்வோர் வட்டாரத்திலும் உள்ள அடுக்குமாடி வீடுகளில் பல இன மக்களின் விகிதாச்சாரம் கட்டிக் காக்கப்படுகிறது.


• சுற்றாடல் சிங்கப்பூரின் அடுக்குமாடி வீடு கட்டடங்கள் ஒரு கொத்தாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கொத்திலும் 10 கட்டடங்கள் உள்ளன. இவை குழுவாக ஒன்றாகச் சேர்ந்து ஒவ்வொரு நகரத்திற்கும் 9 சுற்றுப்புறங்கள் என்று அமைக்கப்பட்டுள்ளது.


• வரலாறு தெம்பினீஸ் தான் முதலில் மாவட்டம் போல அமைக்கப்பட்டது. ஆனால், மற்ற இடங்களோ இவ்வகையில் அமைக்கப்படவில்லை. தொடர்ந்து பழைய இடங்கள் முழுதாகச் சீரமைத்து மாற்றப்படுகின்றன.


• கட்டட அமைப்பு இப்போதெல்லாம் அடுக்குமாடி வீடுகளுக்குக் கீழ்த்தளம் இருப்பதற்கான முக்கியக் காரணமே கல்யாணங்கள், இறுதிச் சடங்குகள், தேர்தலுக்குப் பொருத்தமான ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான இடம் போன்ற பல நடவடிக்கைகளாகும். சில அடுக்குமாடி வீட்டுக் கீழ்த்தளங்களில் பள்ளி, கடைகள் போன்றவையும் உள்ளன. வீட்டிற்கு வெளியே உள்ள நடைபாதை நடப்பதற்காக மட்டும் அல்ல, அண்டை வீட்டாளர்கள் அமர்ந்து பேச, குழந்தைகள் விளையாடவும் பயன்படும். இதன் மூலமாகச் சமூகத்தில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பார்கள். இப்போது ஒரு மாடியில் 6-8 வீடுகள் இருக்கின்றன. புதுமையான கட்டடங்களில் 40 மாடிகள் இருக்கின்றன. இது மட்டுமல்லாமல், 2000-ஆம் ஆண்டிலிருந்து புதுமையான வண்ணங்களை வீடுகளுக்குத் தீட்டுகிறார்கள்.



• உரிமையாளரும் வாடகைதாரரும் சிங்கப்பூரில் இப்போது மக்களில் 80% HDB கட்டடங்களில் வாழ்கிறார்கள். மீதி இருக்கும் வீடுகள் எல்லாம் வாடகை வீடுகளாக இருக்கின்றன. சிங்கப்பூர் எல்லா மக்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று விரும்புகிறது. இதற்காக ஒவ்வொரு அடுக்குமாடி வீட்டுக் கட்டத்திலும் வெவ்வேறு இன மக்களுக்கு வீடுகளைக் கொடுக்கிறார்கள். நிரந்தரவாசிகள் ஓர் அடுக்குமாடி வீட்டின் கட்டடத்தில் இருக்கும் பொழுது, ஒரு நாட்டு மக்கள் மட்டுமே இருப்பார்கள். இதை மாற்றுவதற்குப் புதுத் திட்டத்தை உருவாக்கி வெவ்வேறு நாடுகளிலிருந்து வரும் குடியேறிகள் ஒரு கட்டடத்தில் 5% வீடுகளை வாங்கிக்கொள்ள முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. • புது விற்பனைகள் இக்காலத்தில் புதுமையான திட்டங்களும், விற்பனை நிகழ்ச்சியும் இருக்கின்றது. உதாரணத்திற்கு, HDB கட்டடத்தைக் கட்டுவதற்கான பதிவுத் திட்டம் (Build-to-order, BTO) 2001-ல் ஆரம்பித்தது. இந்த BTO திட்டத்தில் கட்டுவதற்கு முன் அனைவரும் வீடுகளை வாங்க வேண்டும். பின்னரே கட்டடத்தைக் கட்ட ஆரம்பிப்பார்கள். HDB வீடுகள் வாங்குவதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன. வீட்டை வாங்குபவர் ஒரு சிங்கப்பூரராக அல்லது நிரந்தரவாசியாக (21 வயது மற்றும் குடும்பத்தோடு) இருக்க வேண்டும். இதைத் தவிர மற்ற இளைஞர்கள் (35 வயதிற்கு கீழ் ) HDB வீடுகளை வாங்க முடியாது. ஜூலை 2013-இலிருந்து, இரண்டு புதுச் சட்டங்கள் உருவாகின, 35 வயதிற்கும் மேலான சிங்கப்பூரர்கள்,கல்யாணம் செய்துகொள்ளாமல் மற்றும் $5000-க்கும் குறைவான வருமானத்துடன் வாழ்கிறவர்கள், HDB வீடுகளை வாங்கலாம். அதுமட்டுமல்லாமல், சிங்கப்பூரரும் வெளிநாட்டினரும் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் 2 அறைகள் உள்ள வீட்டை வாங்க முடியும்.


• வீட்டை வாங்குவதும் விற்பதும் வீட்டுக்குச் சொந்தக்காரர் தன்னுடைய வீட்டை விற்கலாம். ஆனால், வீடு வாங்குவதற்கான பணம் HDB-யால் முடிவு செய்யப்படாது. அது விற்பனையாளருக்கும், வாங்குவோருக்கும் இடையே முடிவு செய்யப்படும்



• புது வீடுகள் வாங்குவது BTO வழியாக வாங்கும் மக்கள் புது வீட்டிற்குச் செல்வதற்கு முன் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஒருவருக்கு விரைவாக வீடு வாங்க வேண்டும் என்றால், அவர்கள் மறு விற்பனைச் சந்தையில் வாங்க வேண்டும்.


• வீடுகளின் விலை HDB வீடுகளுடைய விலை மற்ற சொந்த வீடுகளைவிடக் குறைவான விலை.


• பராமரிப்பு வட்டார மையங்கள் HDB கட்டடங்களை மேம்படுத்துவதற்கு உதவி செய்கிறார்கள். உதாரணத்திற்கு, அடுக்குமாடி வீட்டின் கீழ்தளம் மற்றும் வீட்டிற்கு வெளியே இருக்கும் விளக்குகள். வாடகை வீடுகளை வீவக பார்த்துக் கொள்கிறது. சிங்கப்பூரின் HDB வீடுகளில் வாழ்வோர் அனைவருக்கும் HDB முடிந்த அளவிற்கு ஒரு நல்ல வசதியை உருவாக்குகிறது.

ஜாஃபிரா தஞ்சோங் காத்தோங் பெண்கள் உயர்நிலைப்பள்ளி


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jafira_Nassar/மணல்தொட்டி&oldid=2251542" இலிருந்து மீள்விக்கப்பட்டது