பயனர்:Hamaascom

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏக இறைவனின் திருப்பெயரால்...

அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...

ஹமாஸ்.காம் கடந்த 19-06-2012 முதல் இணையத்தில் இயங்கி வருகின்றது. மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2015 ஜூன் 20ம் தேதி முதல் நமது ஹமாஸ்.காம் தளம் புதிய பொழிவுடனும், இஸ்லாமிய தமிழ் இணைய தளங்கள் பற்றிய விமர்சனங்கள் போன்ற புதிய செயல்பாடுகளுடனும், இயங்க தொடங்கியுள்ளது.

இத்தளம் இஸ்லாமிய சமூகத்தின் அவலங்களையும், சமூகத்தின் கவனமின்மையையும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு துவங்கப்பட்டது.

ஹமாஸ்.காம் தளத்தில் சமுதாய விழிப்புணர்வு கட்டுரைகள், கவிதைகள், தொடர்கள் மற்றும் தொழில் சார்ந்த பதிவுகள் என பல்சுவைப் பகுதிகளும் பதிவிடப் படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து நமது இஸ்லாமிய சமூகம் பொய் வழக்கு, கலவரம் என பல வகைகளிலும் பாதிப்புக்குள்ளாகி வருவது அதிகரித்துள்ளது. காவி சிந்தனை கொண்ட தேச விரோதிகளின் கொட்டம் அதிகமாகியுள்ள இந்த சூழலில் நமது சமூகம் எவ்வித விழிப்புணர்வும் இன்றி இருப்பது மிகப்பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.

இந்நிலை தொடர்ந்தால் நமது வருங்கால சந்ததிகளின் நிலை படு மோசமாக ஆகி விடலாம். ஆகவே இதற்க்கு உடனடி தீர்வை தேடுவதின் அவசியம் குறித்தும் தொலைநோக்கு திட்டங்களை தீட்டுவது குறித்தும் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவதே நமது தளத்தின் குறிக்கோளாகும்.

ஹமாஸ்.காம் தளத்தில் பதிவிடப்படுகின்ற அனைத்து பதிவுகளுமே இஸ்லாமிய சட்ட விதிகளுக்குள்ளும், இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும், கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலுமே இயங்கிவருகின்றது.

அன்புடன் அ.முஹம்மது அலீம் நிர்வாகி www.hamaas.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Hamaascom&oldid=1871411" இலிருந்து மீள்விக்கப்பட்டது