பயனர்:Graphiyen Black

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் மிஷ்கினின் உதவி இயக்குநர் கிராபியென் ப்ளாக். பத்திரிகையாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். தமிழ் சினிமாவில் திரைக்கதையாசிரியராகப் பணியாற்றி வருபவர். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் அசோஸியேட் உறுப்பினர்.

இயற்பெயர் தி. ராஜசேகர். தந்தை தில்லை சிதம்பரம் (லேட்), தாய் அமிர்தம். சகோதரர் ராஜ்குமார், சகோதரி ராஜலட்சுமி. மனைவி சத்யா, மகள்கள் சாரா, நிகிதா. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரத்தைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவரது தந்தை நாடகக்கலைஞர்.

ஆரம்பக் கல்வியை கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையும், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பையும் பயின்றார். உளுந்தூர்ப்பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொறிப்பகுதி பொருத்துநர் பிரிவில் பயின்றும், அதற்கான தொழிற்பழகுநர் பயிற்சியை சென்னையில் உள்ள பிரபல எவரெடி இன்டஸ்ட்ரீஸ் இன்டியா லிமிடெட்டில் முடித்தார். சென்னை தரமணியில் உள்ள மத்திய தொழில்நுட்பக் கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்கில் பட்டயம் பெற்றுள்ளார். கோவை பாரதியார் பல்கைக்கழகத்தில் பி.எஸ்சி (விஷ¨வல் கம்யூனிகேஷன்) பட்டம் பெற்றுள்ளார்.

கல்கி வாரப் பத்திரிகையில் ப்ரிலேன்ஸ் ரிப்போர்ட்டராக பணியாற்றிய ப்ளாக், பின்னர் பிரபல வார பத்திரிகையான ஆனந்த விகடனில் ப்ரிலேன்ஸ் புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றினார். பின்னர் தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வெளிவரும் சினிமா எக்ஸ்பிரஸில்உதவி ஆசிரியர் / நிருபராகப் பணியாற்றினார். பின்னர் சன் டிவி குழுமத்திலிருந்து வெளிவரும் சன் நியூஸில் உதவி ஆசரியராகப் பணியாற்றினார். பின்னர் அஜாக்ஸ் மீடியா டெக்னாலஜி நிறுவனத்தில் வெளியான மனம் இதழில் (2018) தலைமை நிருபராகப் பணிபுரிந்தார். அதன்பின் ஆனந்த விகடன் குழுமத்தில் 'லைப்ஸ்டைல்' பிரிவில் (2019) உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

திரைப்பட ஒளிப்பதிவாளர் தீபக்குமார் பாதியிடம் உதவி ஒளிப்பதிவை பயின்ற ப்ளாக், பின்னர் இயக்குநர் மிஷ்கினிடம் `நந்தலாலா', `முகமூடி' உள்ளிட்ட திரைப்படங்களில் திரைக்கதையில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இயக்குநர் வெங்கட் ராம் இயக்கியுள்ள `கதிர்வேல்' திரைப்படத்திலும், இயக்குநர் எஸ்.பரீத் இயக்கிய `வீரைய்யன்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ள ப்ளாக்.


கிராபியென் ப்ளாக் எழுதிய நூல்கள்[தொகு]


  1. மாற்று சினிமா - (கட்டுரை - பாரதி புத்தகாலயம்)
  2. திரைப்படக் கல்லூரி ஆளுமைகள் - (கட்டுரை -பாரதி புத்தகாலயம்)
  3. யதார்த்த சினிமாவின் முகம் - (கட்டுரை - உயிர்மை பதிப்பகம்)
  4. தமிழ் சினிமா கலையாத கனவுகள் - (கட்டுரை - தேடல் பதிப்பகம்)
  5. பூமியின் மரணம் இன்னும் சில நிமிடங்களில் - (சிறுகதை - தேடல் பதிப்பகம்)
  6. மாயப் பெருங்கூதன் (நாவல் - தேடல் பதிப்பகம்)
  7. உலக சினிமா கதை பழகும் கலை (கட்டுரை - தேடல் பதிப்பகம்)

மாற்று சினிமா குறும்படம் குறித்த விரிவான பதிவு. சென்னைப் பல்கலை மற்றும் கோவை பல்கலை மாணவர்களால் பி.எச்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை தரமணியில் உள்ள 50 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த திரைப்படக் கல்லூரியின் வரலாறு மற்றும் அதில் பயின்ற ஆளுமைகளைப் பற்றியது "திரைப்படக் கல்லூரி ஆளுமைகள். திரைப்படக் கல்லூரியில் இயக்கம் பிரிவு மாணவர்களுக்கு சிறப்பு பகுதி நேர ஆசிரியராகவும் மாணவர்களோடு உரையாடியவர் ப்ளாக்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Graphiyen_Black&oldid=3097992" இருந்து மீள்விக்கப்பட்டது