உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Gobikha04/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பூர்க் குடியரசின் வரலாறு (History of the Republic Singapore) சிங்கப்பூர்க் குடியரசு சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி மலேசியாவிடமிருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்தது. தனிநாடாக உருவெடுத்தபோது பல சிக்கல்களைச் சிங்கப்பூர் நாடு எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதாவது, வேலையின்மை, வீடுகள் பற்றாக்குறை, இயற்கை வளங்கள் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் தலையெடுத்தன. 1958 முதல் 1990 வரை திரு லீ குவான் யூ சிங்கப்பூரின் பிரதம மந்திரியாக இருந்தார். அவர் தம் நிர்வாகக் குழுவிடம் கலந்தாலோசித்து வேலையின்மை, வீடுகள் பற்றாக்குறை போன்ற சிக்கல்களைத் தீர்க்க முடுவெடுத்தார். அதன்படி, பொதுவீடமைப்புத் திட்டம் உருவானது. மக்களுக்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் கிடைக்குமாறு திரு லீ வழிவகை செய்தார். மக்களும் எந்தவித சிக்கல்களும் இல்லாமல் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தனர். அதனால், உலக நாடுகளில் சிங்கப்பூர் தனித்து இடம்பெற்றது. 1990ஆம் ஆண்டில் கோ சோக் டாங் பிரதமராகப் பொறுப்பேற்றார். 1997ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் சீர் செய்யப்பட்டன. 2003ஆம் ஆண்டு சார்ஸ் நோய் சிங்கப்பூர் முழுவதும் பரவியது. மேலும், பயங்கரவாத அச்சுறுத்தல்களும் எழுந்தன. அச்சிக்கல்களையெல்லாம் களைந்தெறிந்து சிங்கப்பூர் நாடு முன்னேறியது. 2004ஆம் ஆண்டு திரு லீ குவான் யூவின் மூத்த மகன் திரு லீ சியான் லூங் சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராகப் பொறுப்பேற்றார்.

சுதந்திர சிங்கப்பூர் மலேசியாவின் ஒரு பகுதியாகச் சிங்கப்பூர் விளங்கியது. 1963ஆம் ஆண்டு மலேயா, வடபோர்னியா, சரவாக் ஆகிய மூன்று மாநிலங்களும் மலேசியாவின் பகுதிகளாக மாறின. அதனால், சிங்கப்பூருக்கு உள்நாட்டுப் பாதுகாப்பு மேம்படுத்த வேண்டும் எனக் கருதப்பட்டது. சிங்கப்பூர் மாநில அரசாங்கத்திற்கும் மலேசிய நாட்டு அரசாங்கத்திற்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. குறிப்பாக, மத்தியக் கொள்கைகள்மீது பிரச்சினைகள் ஏற்பட்டன. உடனடி நடவடிக்கையின்கீழ் மலாய்க்காரர்களுக்குச் சிறப்பு முன்னுரிமைகள் வழங்கப்பட்டன. மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஆகும். சிங்கப்பூரின் முதலமைச்சர் திரு லீ குவான் யூ, மலேசியாவிலுள்ள அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதனால், சீன, மலாய்க்காரர்களின் மத்தியில் மிகவும் மோசமான இனக் கலவரங்கள் வெடித்தன. 1964ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி ஏற்பட்ட இனக் கலவரத்தில் 23 பேர் உயிரிழந்தார்கள். மேலும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். போக்குவரத்து அதிகமாகப் பாதிக்கப்பட்டது. உணவு கிடைக்காமல் மக்கள் திண்டாடினர். மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பொருளாதார மோதல்கள் ஏற்பட்டன. கோலாலம்பூரில் உள்ள அம்னோ (UMNO) தலைவர்கள் சிங்கப்பூர்ப் பொருளாதாரம் அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவரும் என அஞ்சினர். அதனால், சிங்கப்பூர், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களுக்குரிய பொருளாதார வளர்ச்சிக் கடன்களை வழங்குவதற்குத் தவிர்த்துவிட்டார்கள். மலேசியப் பிரதமர் திரு துங்கு அப்துல் ரகுமான் சிங்கப்பூர் நாடு மலேசிய நாட்டிலிருந்து பிரிந்து வெளியேற வேண்டும் என்று முடிவு செய்து கூறியபோது திரு லீ குவான் யூ கண்ணீர் கலங்கினார். மேலும் ‘‘நான் திரும்பிப் பார்க்கையில் சிங்கப்பூர் சுதந்திர நாடாகவும் ஒற்றுமை மிகுந்த நாடாகவும் இருக்கும்; புவியியல், பொருளாதாரம் போன்றவை முன்னேற்றமடைந்திருக்கும்; ஆனால், என் வயது, வாழ்க்கை அனைத்தையும் என் தாயகத்திற்காக நான் அர்ப்பணித்திருப்பேன்; சிங்கப்பூரை முன்னேற்றுவதற்கு என்னுடன் சேர்ந்து உழைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்’’ என்று மாநாட்டில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.


1965 – 1979ல் சிங்கப்பூர் இந்தோனேஷிய இராணுவப் படையினர் சிங்கப்பூரைத் தாக்கும் அபாயமிருந்தது. மலேசியா, சீனா, இந்தியா அரசாங்கம் சிங்கப்பூர் நாட்டிற்கு உதவி செய்தன. மேலும், சிங்கப்பூர் நாடு 1965ஆம் ஆண்டு செம்டம்பர் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சபைகளில் ஒன்றாக ஆனது. சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகச் சின்னத்தம்பி இராஜரத்னம் பொறுப்பேற்றார். இவர் சிங்கப்பூரின் சுதந்திரத்தை வலியுறுத்தினார். மேலும், இவர் மற்ற நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தினார். சர்வதேச நிறுவனங்களில் பங்குபெற்று தனது நாட்டின் வர்த்தகத்தை அதிகரிக்கச் செய்தார். சிறிய தீவாக இருக்கும் சிங்கப்பூர், எதிர்காலத்தில் கல்வி, இயற்கை வளங்கள், வீட்டு வசதிகள் முதலியவையெல்லாம் நிறைந்த நாடாக உருவெடுக்கும் என்று கூறினார். 10-12% மக்கள் வேலையில்லாமல் இருந்தனர். அவர்களின் வேலைத் தரத்தை முன்னேற்றுவதற்குச் சிங்கப்பூர் கடும் முயற்சியெடுத்தது. சிங்கப்பூர்த் துறைமுகத்தின்மூலம் பொருளாதாரம் முன்னேற்றமடைந்தது.

பொருளாதாரத்தில் கவனம் (Economic Focus) சிங்கப்பூர் அரசாங்கம், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக அதிகம் முதலீடு செய்தது. 1961ஆம் ஆண்டில் தேசியப் பொருளாதார வாரியம் அமைக்கப்பட்டது. பொருளாதார ஆலோசகர் ஆல்பர்ட் வின்செமியஸ் (Albert Winsemius) உதவியுடன் சிங்கப்பூர்ப் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றமடைந்தது. சரக்குகளை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அங்கிருந்து சரக்குகளை இறக்குமதி செய்யவும் சிங்கப்பூர்த் துறைமுகம் தூணாக விளங்கியது. சிங்கப்பூரில் வளர்ந்து வரும் தொழில்மயமாக்குதலால் அதிகப் பொருள்களை உற்பத்தி செய்து வருமானத்தை உயர்த்தியது. ஷெல், ஈஷோ போன்ற பெரிய எண்ணெய் நிறுவனங்கள் வின்செமியஸின் உதவியுடன் சிங்கப்பூரில் நிறுவப்பட்டது. இது உலகிலேயே மூன்றாவது பெரிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு மையமாகச் சிங்கப்பூரில் இயங்குகியது. இதனால், வேலையின்மை பிரிச்சினை நீங்கியது. கல்வித் துறையிலும் உடனடி மாற்றத்தைச் சிங்கப்பூர் அரசாங்கம் கொண்டு வந்தது. மேலும், பட்டப்படிப்பை முடித்தவுடன் தகுதி வாய்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பையும் அளித்தது.

புதிய வீடுகள் (New Housing) தரமான வீடுகளின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் சமூகப் பிரிச்சினைகள் ஏற்பட்டன. குடிசைப் பகுதிகளாக இருந்ததால் எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. அவ்வாறு தீப்பிடிக்கும்போது பல தொற்று நோய்களும் ஏற்பட்டன. அதனால், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின்கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் லிம் கிம் சான் தலைமையில் முதல் இரண்டு ஆண்டுகளில் 25000 குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதன் விளைவாக, அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாயின. மேலும் வீடுகள் வாங்க மத்திய சேமநிதித் திட்டத்தைப் பயன்படுத்தலாம் என்ற அனுமதியையும் வழங்கியது. சிங்கப்பூரில் தலைவிரித்தாடும் மற்றொரு பிரச்சினை மக்களிடையே தேசிய ஒற்றுமை இல்லாமல் இருந்ததாகும். பள்ளிகளில் தேசியக் கல்வியைப் போதிப்பதன்மூலமும் கொடி தினம் கொண்டாடுவதன்மூலமும் மாணவர்களிடையே தேசிய ஒற்றுமையை வலியுறுத்தலாம் என்ற வகையில் அவற்றைப் பள்ளிகள் போதித்தன. மேலும், 1966ஆம் ஆண்டு திரு சின்னத்தம்பி இராஜரத்னம் எழுதிய சிங்கப்பூர்த் தேசிய உறுதிமொழி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், பொதுமக்களிடையே தேசிய ஒற்றுமை வளர ஆரம்பித்தது.

சுதந்திர பாதுகாப்புப் படை (Independent defence force) ஜப்பானியர்கள் சிங்கப்பூரை ஆக்கிரமித்து இரண்டாம் உலகப்போர் நடந்தது. சிங்கப்பூரின் பாதுகாப்பு முக்கியப் பிரச்சினையாக இருந்தது. அதனால், 1965ஆம் ஆண்டு கோ கெங் ஸ்வீ (Goh Keng Swee) உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சரானார். பதினெட்டு வயது நிரம்பிய ஆண்கள் தேசியச் சேவையில் பங்கேற்க வேண்டும் என்றும் இரண்டரை ஆண்டுகள் முழுநேரப் பயிற்சி செய்ய வேண்டியிருக்கும் என்றும் 1967ஆம் ஆண்டு சிங்கப்பூர்ச் சொந்தத் தேசிய சேவை திட்டத்தைச் சிங்கப்பூர்த் தேசியப் பாதுகாப்புப் படை நடைமுறைப்படுத்தியது. அதன்பொருட்டு, சிங்கப்பூருக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருக்குமாயின், ஒவ்வொரு ஆண்மகனும் சிங்கப்பூரைப் பாதுகாக்க முன் வரவேண்டும் என்றும் கூறியது.

1980 – 1990இல் சிங்கப்பூர் 1981ஆம் ஆண்டு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தைச் சிங்கப்பூர் கட்டியது. இதன்மூலம் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது சேவையைத் தொடங்கியது. அங் மோ கியோ நகரங்களில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. 80-90% மக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர். இனநல்லிணகத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்துவதற்காக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பல இன மக்களைக் குடியிருக்குமாறு செய்தது. 1984ஆம் சிங்கப்பூர் தேசி இராணுவம் ஐந்து கொள்கைகளை உருவாக்கித் தன் தேசத்தையும் மக்களையும் பாதுகாக்கத் தயாராக இருந்தது. வலுவான சர்வதேச வர்த்தக இணைப்புகளுமின்றி, சிங்கப்பூர் நாடு வலுவான பொருளாதார வளர்ச்சியுடன் உலகின் வளமான நாடுகளில் ஒன்றாக விளங்கியது. இருப்பினும், சிங்கப்பூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது. அதனால், 1981ஆம் ஆண்டில் பெரிய போக்குவரத்து விரைவு விரிவுபடுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் தீவின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்குச் சுலபமாகச் சென்று வந்தார்கள்.

2000 முதல் தற்போது வரை 2003ஆம் ஆண்டு சார்ஸ் நோய் சிங்கப்பூரை உலுக்கியது. மேலும், பயங்கரவாதமும் அச்சுறுத்தத் தொடங்கியது. அதனால், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் முயற்சி எடுக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியால் சிங்கப்பூர் சற்றுப் பாதிக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டில் ஒரு குடும்பத்தின் வருமனம் $4870ஆக இருந்தது. 2004ஆம் ஆண்டு திரு லீ குவான் யூவின் மூத்த மகன் லீ சியான் லூங் சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமாகப் பொறுப்பேற்றார். கல்வி அமைப்புமுறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதாவது, ஸ்ட்ரீமிங் முறை கொண்டு வரப்பட்டது. அப்போது பல எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும், சிங்கப்பூர்க் கல்வி சிறந்த நிலையை அடைந்தது. இன்று மக்கள் ஆரோக்கியமாகவும் சுதந்திரமாகவும் சிங்கப்பூரில் வாழ்கிறார்கள். உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு வானுயர்ந்த வளர்ச்சியைச் சிங்கப்பூர் எட்டியுள்ளது. மேலும், இங்கு வாழும் பல்லின மக்கள் ஒற்றுமையாகவும் பாதுகாப்பாகவும் வாழ்கிறார்கள். அதற்கு, சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் யூ என்றால் அது மிகையாகாது.


சசிக்குமார் கோபிகா (1E1) யூனிட்டி உயர்நிலைப்பள்ளி

SASIKUMAR GOBIKHA (1E1) UNITY SECONDARY SCHOOL

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Gobikha04/மணல்தொட்டி&oldid=2251091" இலிருந்து மீள்விக்கப்பட்டது