பயனர்:Emjgopi/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏரியூர்-சுஞ்சல்நத்தம். இந்த கிராமம்,இந்தியாவின் தமிழகத்தில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர் ஏரியூர் என்று சுருக்கமாக இந்த பகுதியில் அழைக்கப்படுகிறது.இருப்பினும் சிவககங்கை மாவட்டத்தில் இதே பெயரில் ஒரு ஊர் இருப்பதாலும், ஏரியூர் என்ற பெயரில் "விக்சனரி"கலைகளஞ்சியத்தில் ஒரு தகவல் பக்கம் உருவாக்கப்பட்டு உள்ளதாலும் இந்த ஊரின் பஞ்சாயத்து கிராம பெயரான "சுஞ்சல்நத்தம்"என்ற பெயரையும் சேர்த்து இங்கே தொகுப்பளித்தால் சரியாக இருக்கும்.

இந்த கிராமத்தின் முக்கிய தொழில் விவசாயம்.இருப்பினும்'1972'ஆம் வருடம் ஏரியூரின் சுற்றுப்புற கிராமங்களான மூங்கில் மடுவு ,வத்தலாபுரம்,சிகரலஹல்லி ஆகிய இடங்களில் ஜப்பானியர்கள் மிகவும் விரும்பும் உலகத்தரம் வாய்ந்த கருப்பு கற்கள் இருப்பதை அறிந்து ஜெம் கிரானைட்ஸ் என்ற நிறுவனம் கால் பதித்தது.அதன் பின் இந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட துவங்கின.

                                             இந்த நிறுவனத்தின் கல் மலைகளில் ஆரம்பகாலங்களில் கல்லுடைக்கும் தொழிலை  

குலத்தொழிலாக கொண்டவர்கள் மட்டுமே கல் உடைத்து வந்தனர்.கல் மலைகளில் இதர வேலைகளான கல் இடம் பெயர்த்தல்,மண்வெட்டுதல் மற்றும் பல வேலைகளை இந்த பகுதியின் அனைத்து ஜாதியினரும் செய்துவந்தனர்.இதர வேலையில் கிடைக்கும் வருமானத்தைவிட கல் உடைக்கும் வேளையில் அதிகவருமானம் கிடைப்பதை இதரமக்கள் புரிந்து கொண்டனர்.

                                                 கல் உடைக்கும் தொழிலார்களிடம் வேலைக்கு சேர்ந்து 

கல்லுடைக்கும் தொழிலை நன்கு கற்று கொண்டு, இந்த பகுதியின் அனைத்து ஜாதி மக்களும்,இந்தியாவில் எங்கெங்கே இயற்கை வண்ண கற்கள் மலைகளில் வெட்டிஎடுக்கப்படுகிறதோ,அங்கே ஏரியூர் பகுதி மக்கள் யாரேனும் ஒருவர் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளனர்.

ஏரியூர் மாற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களின் மக்களுடைய பொருளாதார முன்னேற்றங்களில்,அவர்கள் வேறு ஏதாவது வகையில் வருமானம் அடைந்திருந்தாலும் அந்த வருமானத்தில் வண்ணக்கற்க்களின் மூலம்யாருக்கோ வந்த வருமானத்தின் தாக்கம் நிச்சயம் இருக்க வாய்ப்புள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Emjgopi/மணல்தொட்டி&oldid=1739411" இலிருந்து மீள்விக்கப்பட்டது