பயனர்:Elroyamalathaselroy

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Elroy Amalathas
தாய்மொழியில் பெயர்எல்றோய் அமலதாஸ்
இருப்பிடம்
தேசியம்
  • இலங்கையர்
பணி
  • நிறைவேற்று தயாரிப்பாளர்
  • திரைப்பட நடிகர், இயக்குனர்
  • இசையமைப்பாளர், பாடகர், கவிஞர்
  • சாகசபயணர், புகைப்படப்பிடிப்பாளர்
  • ஊடகவியலாளர், எழுத்தாளர்
  • படத்தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர்
  • மாடல்
செயற்பாட்டுக்
காலம்
  • சிறு வயது முதல்
அறியப்படுவது
  • ஊடகவியலாளர்
சொந்த ஊர்
  • யாழ்ப்பாணம், இலங்கை
பெற்றோர்
  • S.S.P. அமலதாஸ்
  • பற்றிமா அலோசியஸ்
வலைத்தளம்

அமலதாஸ் எல்றோய்

(ஆங்கிலம்: Elroy Amalathas) (இயற்பெயர்: எல்றோய்) இலங்கைத்தீவைச் சேர்ந்த ஈழத்தமிழரான இவர் இலங்கையின் முன்னணி கலைஞரும் ஊடகவியலாளரும் இசைக்கலைஞரும் இயற்கை ஆர்வலருமாவார்.பள்ளிப்பருவம் முதல் பலதேசிய விருதுகள் சர்வதேச விருதுகளையும் சுவீகரீத்துக்கொண்ட இவர் இலங்கையின் முன்னணி தமிழ்த்தனியார் தொலைக்காட்சியில் தனது முதற்பணியை நிறைவேற்றுத்தயாரிப்பாளராக ஆரம்பித்தார் (2005). இக்காலப்பகுதியில் பல்வேறுப்பட்ட பண்பட்ட நிகழ்ச்சிகளை நெறியாள்கை செய்து இலங்கை தொலைக்காட்சியின் பரிணாம படைப்புக்களுக்கும் ஆவணபடங்களுக்கும் தனக்கென்று ஒரு முத்திரைபதித்தார்.அத்தோடு நிகழ்ச்சி தொகுப்பாளனாகவும் ஊடகவியலாளனாகவும் பல பரிமாணங்களில் ஊடகவாழ்கையில் சாதனை படைத்து இருக்கிறார். பதின்மூன்றிக்கு மேற்ப்பட்ட இசைதேசிய விருதுகள் ஜனாதிபதி விருதுகளை 14,16 வயது காலப்பகுதியில் பெற்றுக்கொண்டது குறிப்பிட்டதக்க சாதனைகளாகும். மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.அடிப்படை கணணிப்பொறியிலாளர்.வனவிலங்கு புகைப்படபிடிப்பிலும் திறமையானவர்

வாழ்க்கைச் சுருக்கம் இவரின் இயற்பெயர் எல்றோய். கத்தோலிக்க மதத்தை சேர்ந்த தமிழர். வடமாகாண யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர். தந்தையார் S.S.P அமலதாஸ் கல்வித்திணைக்கள அதிகாரி.பலதுறை கலைரான மேலைத்தேய வாத்திய விற்பன்னரும் ஆவர். (திருகோணமலை பிறப்பிடமாக கொண்டவர்). தாயார் பற்றிமா யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர்.

சாதனைகள் சிறுவயதிலேயே ஆர்மோனியம், ஓர்கன் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1997 இல் இருந்து 2004 வரை அவருடைய நண்பர்கள் சகோதரர்களுடன் இணைந்து இலங்கையில் உள்ள பல இடங்களுக்கு இசைகுழு கச்சேரிகள் நாடகமேடைகளில் சென்று சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.

1998,1999,2000 ஆண்டுகளுக்கான சிறந்த இளைஞருக்கான விருதை சிறுவனான காலப்பகுதியல் தேசிய இளைஞர் மன்றத்தின் சார்பாக பெற்றுக்கொண்டார். 2002 இசைக்கு தேசியவிருதுகள் பல வாங்கி குவித்தார். பல வாத்தியங்களை இசைக்கும் திறமைக்காக ஜனாதிபதி விருதையும் பாடசாலை காலங்களில் பெற்றுக்கொண்டார். அத்துடன் நாட்டியநாடகங்கள், மேலைத்தேய வாத்திய இசைக்குழு பாண்டு இசைக்கருவிகளின் விற்பன்னராக படிக்கும் காலத்தில் திகழ்ந்தது மட்டுமல்லாமல் படிக்கும் காலத்தில் பல பாடசாலைகளுக்கும் உருவாக்குவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் பல வழிகளில் துணைபுரிந்திருக்கிறார்.

பலவாத்தியங்களை இசைப்பது போன்று கணணிதொழிநுட்பம்,இணையவடிவமைப்பு,படத்தொகுப்பு,காட்சிவரைபுக்கலை என்று தொழில்முறையிலும் சிறப்புபெற்றவர். மற்றும் இலங்கை தமிழ்தொலைக்காட்சி நாடகங்களின் முன்ணணி நடிகனாகவும் நிலைநிறுத்தியிருக்கின்றார். சக்திதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை மூலமாக பலநாடகதொடர்களில் நடித்திருக்கிறார். (2014: புன்னகை, சிலநேரங்களில்சிலமனிதர்கள், தூண்டில் மீன்)

நூற்றிற்கும் மேற்பட்ட ஆவணப்படங்கள்,நாடகங்கள்,பயணநிகழ்ச்சிகள் உள்நாடு வெளிநாடுகளில் தயாரித்து இயக்கிஇருக்கிறார். வர்ணணையாளன்,தொகுப்பாளன்,அறிவிப்பாளனாகவும் பணியாற்றியிருக்கிறார். இவரின் பல்துறை திறமைக்காக 2008 பல்கலைதென்றல்,சாதனைஇளைஞன்,உசலத போன்ற விருதுகளும் சர்வதேசபயணங்களும் கருத்தரங்களும் இவரை எல்லைகடந்து அழைத்துச்சென்றன. எல்றோய் இயல்பாக தமிழ்மொழி,இலக்கியம்,கவிதை,அரசியல்ஆய்வுகள்,மாற்றுஉலகசிந்தனைகள்,ஆன்மீகத்திலும் நாட்டம் கொண்டவர். இவரின் பல நூறுகட்டுரைகளை இணையத்தில் பார்வையிடலாம். (www.amalathaselroy.blogspot.com) இவர் எழுதிய புத்தகங்கள் : நரம்புகளின் ஓசை, போர்முரசும் தனிமையும், என் தந்தை, சிறகே வரமாய் வேண்டுகிறேன்(கவிதை தொகுப்பு)

இறைவன்,இயற்கை,இசை மூன்றையும் அடிப்படை தாரகமந்திரமாக பயணவாழ்க்கையில் வைத்து அதீத திறமைகளை தன்னுள் வைத்திருக்கும் ஒரு அமைதியான ஈழக்கலைஞன்... "எல்றோய்"

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Elroyamalathaselroy&oldid=3766569" இலிருந்து மீள்விக்கப்பட்டது