பயனர்:DkMohanraj

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரா. மோகன் (இன்) காண்

ஒரு அறுவது அறுவத்தஞ்சு வயசான ஒரு புளியமரம் வயசுக்கு வந்த பொட்டபுள்ளைங்க மொத தடவ தாவணி கட்டும்போது வரும் பாருங்க வெட்கம் கலந்த ஒரு சின்ன சிரிப்பு அந்த மாதிரி தன் ஓடம் பெடல்லாம் வெள்ளையும் சிவப்பும் மஞ்சலுமா பூவெடுத்து நிக்குது புளியமரம்.

அஞ்சரை ஆரடி உயரத்துல ஒரு கிளை மட்டும் சாய்வா நீண்டு இருந்தது அதுல ஒத்த கயித்த தொங்கவிட்டு தொங்கும் கயித்து நுணியில ஒரு ரெண்டடி உள்ள கட்டைய கட்டி ஒரு ஆடரே இல்லாம அறையும் குறைவுமான உயரத்துல மூணு சின்னஞ் சிறுசுங்க உஞ்சல் விளையாடுதுங்க.

புளிய மரத்துக்கு மேற்குல கருங்கல் வச்சு கட்டுன கர ஒன்று அத ஒட்டியும் ஒட்டாம ஒரு மாடி வீடு.

வீட்டுக்கும் கரைக்கும் இடையில ஒத்த ஆட்டு ஒரலு ஒன்னு அதுல மாநெரத்துல ஒரு அஞ்சடி உயரம் இருக்கும் குத்துகால் போட்டு மாவு அட்டிகிட்டு அந்த மூணு சிறுசுகளைம் பார்த்து விளையாட சொல்லி பொய் கோவமா அதட்டுரா அம்மாகாரி.

அதுவும் அந்த மாடி வீட்டுக்கு ஒரு விசேஷம் இருக்கு ரெட்ட தலைவாசல் ஒரு பக்கம் மட்டும் மாடி படிகட்டு ஒத்த வாசலா இருக்க வேண்டிய வீட்ட ரெட்ட வாசலா ஆக்குனது இந்த நிக்குது பாருங்க இந்த ஒத்த செவுருதா காரணம்.

            (காரணம் அது மட்டும் தான?)

உச்சிவெயில் ஏறி நிக்குது நடுவானத்துல மூணுஏக்கர் விவசாய நெலம் அந்த மூணு ஏக்கரும் சமமான பூமி இல்லை பாத்திகட்டி மேல கீழ இந்தபக்கம் அந்தபக்கம்னு வச்ச எப்படி இருக்குமோ அப்படி இருக்கு அந்த மூணு ஏக்கரும்.

ஏறுபூட்டி உழுது முடிக்கிறாரு சந்திரன் வயசு ஒரு நப்பது ல இருந்து நாப்பதஞசு மாதிரி தெரியும் ஆனா அவருக்கு நாப்பத்திரெண்டு தா ஆகுது பென்சில்ல வரஞ்ச மாதிரி ஜெமினி கனேசன் மீச கண்ணுமுளி ரெண்டும் கொஞ்சம் உள்வாங்கி கெடக்கு மூக்கு கொஞ்சம் நீட்டமாவும் அகலமாவும் இருக்கும் நல்ல வெம்பி போன ஆரஞ்சுபழ கலரு ஆறடி உயரம் கையி காலு மார்புபட்டை எல்லாம் மழை வரும்போது அடிவானம் கருத்து நிக்கும் பாருங்க அப்படி தெரண்டு நிக்கும் ரோமம்.

ரெண்டு நாட்டு மாடுகளையும் ஏறுலிருந்து கழட்டி விட்டு மேல் நெலத்துல இருந்த ஆறு தெண்ணை மரத்துல ரெண்டு மரத்துல மாட்ட அற கயித்துல கட்டிட்டு அதுகளுக்கு கொஞ்சம் நெல்லம்பில்ல பொட்டுட்டு இடுப்புல வேஷ்ட்டிய முலங்கல் தெரிய மடிச்சு கட்டிட்டு துண்டுல தலைக்கு உறுமா கட்டிகிட்டு கரைய ஏறி வீட்டுக்கு போறாரு சந்திரன்.

உஞ்சல விளையாண்டுட்டு இருந்த மூணு சிறுசுகளும் அவர பார்த்ததும் ஓடி போயி வீட்டுகுள்ள  இருந்த கஞ்சி குடிக்குதுங்க .

ஏன் சிறுசுங்க மூணும் பயபடுதுனா அதுதா அவங்க அப்பன் சந்திரன். வெளிய மாவு ஆட்டிட்டு இருந்த சந்திரன் மனைவி பாரதி.

அவரு பிள்ளைங்கல  பொறுத்தவரை அப்பன் கோவகாறரு எதாவது தப்பு பண்ண இல்ல சொன்ன வேலைய ஒழுங்க செய்யலன பயங்கரமா அடிப்பாரு அதனால பசங்களுக்கு அப்பன கண்ட ஒரு விதமான பயம் ஆனா அவங்க அம்மா கிட்ட அப்படியே நேர் எதிர் அப்பனுக்கு பிள்ளைங்க மேல பாசம் அதிகமாத இருக்கு ஆனா அத வெளிய காட்டதான் தெரியல.

(நெரை அப்பகாரங்களுக்கு மகன் மேல உள்ள பாசத்தை வெளிய காட்டிக்க தெரியரதே இல்லை)

சந்திரன் புளி மரத்துகிட்ட வந்ததும் தன் மனைவி கிட்ட கேக்குறாரு ஜெபியும், ஜெய்பாலும் சாப்பாட்டுக்கு வந்துட்டாங்களா அம்மாகாரி சொல்றா பிள்ளைங்க ரெண்டும் இப்பதான் வந்துச்சுங்க கஞ்சி குடிக்ரானுங்க வீட்டுக்கு வெளிய முந்தன தலமொரையில வாங்குன ஈய்ய அண்டா போல இன்னும் இங்கதா இருக்கேனு கெடக்கு ஈய்ய அண்டா அதுல இருந்த தண்ணி கைகால் மூஞ்சிய கழுவிட்டு வீட்டு குள்ள போறாரு சந்திரன்.

அண்ண தம்பி மூணுபேரும் அமைதியா கஞ்சி குடிக்குறானுங்க அப்பன் பெரிய பையனையும் நடு பையனையும் பார்த்து ஆடுங்க எங்க மேயுது வள காட்டுல குப்பன் கிட்ட பாத்துக்க சொல்லிட்டு சாப்ட வந்தோம் அப்டினு பெரிய பையன் ஜெபி (ஜெயப்பிரகாஷ்) சொல்றா. சரி சீக்ரம் சாப்புட்டுபோயி  ஆட பாத்துகோங்கனு சொல்லிட்டு சின்ன கண்ணு (மோகன்) நீ அவங்க கூட போயிராத இங்கயே அம்மாகிட்ட இருனு தன் கடைசி பையன பாத்து சொல்றாரு அவனும் சரிப்பானு சொல்லிட்டு மனசுக்குள்ள நினைக்குறா கண்டிப்பா நீ இந்த பக்கம் போனதும் நா அவனுங்க கூட போக தான் போறனு நினைக்குறான்.

அவன் இதுக்கு முன்னாடி பல முறை இப்படி அவன் அண்ணனுங்க கூட ஓடிபோயிருக்கான் ஆன இவன ஒரு நாளும் சந்திரன் இவன அடிச்சது கிடையது அது என்னவோ தெரியல கடைசி பையன் மேல மட்டும் பாசம் அதிகம் அப்பனுக்கு.

கஞ்சி குடிசிட்டு அண்ணனுங்க ரெண்டு பேரும் வளங்காட்டுக்கு போறானுங்க வளங்காடு அமைந்திருக்கும் இடம் பாத்தீங்கன ஒண்டிக்கோட்டை, பெத்தானூர், சின்னம்பள்ளி, பெரும்பாலை இந்த நாலு பஞ்சாயத்துக்கு மத்தியில இருக்கு ஆழங்காடு அமார் 4500 ஏக்கர் பரப்பளவு கொண்ட காடு.

அதுல ஒண்டிகோட்டை ஊரை சேந்தவன் தான் சந்திரன்.சந்திரனோட நெலத்து எல்லை தான்  அந்த ஆழங்காட்டுக்கு எல்லை.

எல்லையில சந்திரனோட ஆடுங்க தண்ணி குடிக்க கட்டிவச்சாறு ஒரு பெரிய தண்ணிதொட்டிய ஆயில் மோட்டாரு வச்சிருக்காரு  மூணு மெட்டு கிணறு வத்தாத தண்ணி வீட்டுக்கு தண்ணி எடுத்துவிடராறோ இல்லையோ ஆடுகளுக்கு எல்லா நாளும் காலையில எந்திரிச்ச உடனே தண்ணி எடுத்து விட ஆரம்பிசுருவாறு சந்திரன்.

சந்திரனுக்கு மொத்தம் நூறு வெள்ளாடுங்க அதுல அய்ம்பத குப்பனுக்கு வாரத்துக்கு மேய்க விட்டுருக்காரு. அதுல வாரத்துக்கு அஞ்சு நாளு இவரு மீதி ரெண்டு நாலு இவரு மூத்த பசங்க ரெண்டுபேரும்..

அதுல கடைசி பையன் ஆடு மேய்க்க போறான அன்னைக்கு ஒரு ஆடு காணம போயிடும் அப்படி பட்ட ராசிகாரன் கடை குட்டி சின்ன கண்ணு.

அண்ணனுங்க ரெண்டுபேரும் முன்னுக்க போக தம்பி அண்ணனுகளுக்கு தெரியாம நூல் புடிச்ச மாதிரி பின்னாடியே போறான்.

வளகாடு சந்திரன் நெலத்துல இருந்து ஒருமயில் தூரம் தான் காட்டுக்குள்ள நூழைஞ்சதும் சின்ன கண்ணு அவன் அண்ணனுங்கள ரெண்டுபேரையும் டேய் ஜெபி, ஜெயபாலுனு கூப்புடுறான்.பையபுள்ள சின்ன கண்ணு அவன் அண்ணனுங்கள அண்ணானு கூப்பிட்டதா சரித்திரமே கிடையாது.

அண்ணனுங்க ரெண்டுபேரும் திரும்பிபாத்து சந்தோசபடுரானுங்க வாடானு கூட கூட்டிட்டு தம்பி மேல ரொம்ப பாசம் ரெண்டுபேருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DkMohanraj&oldid=3646281" இலிருந்து மீள்விக்கப்பட்டது