பயனர்:DSE ANBUSELVI VPM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவரங்களுக்கு அறிவியல் பெயரிடல்(Botanical Nomenclature)[தொகு]

இது தாவரங்களுக்கு அறிவியல் முறைப்படி பெயரிடுதல் ஆகும். இது வகைப்பாட்டியலின் முக்கிய அங்கம் ஆகும். தாவர வகைப்பாடு என்பது தாவரங்களை வகைப்படுத்துதல் ஆகும். தாவரங்களுக்கு அறிவியல் முறைப்படி பெயரிடுதல் 1753 ல் கார்ல் லின்னேயஸ் அவர்களால் வெளியிடப்பட்ட ஸ்பீசிஸ் பிளாண்டாரம் என்ற நுாலுக்குப் பிறகு தோன்றியது. தாவரங்களுக்கு பெயரிடும் பணியை பாசிகள், பூஞ்சைகள், தாவரங்களுக்கான பன்னாட்டுப் பெயரிடல் குழு(ICN) கவனித்து வந்தது. இந்த ICN என்ற நிறுவனம் பின்பு ICBN(International Code of Botanical Nomenclature- பன்னாட்டுத் தாவரவியல் பெயரிடல் குழு) ஆக மாறியது.

வரலாறு[தொகு]

    தாவரப் பெயரிடல் முறையில் கற்படிஉருவத் தாவரங்களுக்கும்(fossils) பெயரிடப்பட்டது.  மனிதன் வளர்க்கக்கூடிய அல்லது தேர்வு செய்யக்கூடிய சில தாவரங்களுக்குப் பெயரிட மேலும் பல விதிகளை ICNCP(International Code of Nomenclature for Cultivated Plants) உருவாக்கியது.  தியோபிராஸ்டஸ், டையோஸ்கோரைட்ஸ் ஆகிய கிரேக்க எழுத்தாளர்கள் வாழ்ந்த காலத்திலிருந்து ஐரோப்பா முழுவதும் இலத்தீன் மொழி அறிவியல் மொழியாக இருந்தது.  இக்காலத்தில் (கி.மு.370 முதல் கி.பி.90 வரை) பெரும்பாலான எழுத்தாளர்களின் கருத்துகள் இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.  எனவே ஐரோப்பாவின் இலத்தீன் மொழியில் தாவரங்களுக்கு அறிவியல் முறைப்படி பெயரிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DSE_ANBUSELVI_VPM/மணல்தொட்டி&oldid=2313338" இலிருந்து மீள்விக்கப்பட்டது