பயனர்:DEE asadha VPM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவரங்களின் சைலம் திசுவில் மரச்சாறேற்றம்  என்பது நீர் மற்றும் தாதுக்கள் வேரிலிருந்து உச்சிக்கு மேல் நோக்கி நகர்வதாகும். சைலம் உயிருள்ள மற்றும் உயிரற்ற செல்களைக் கொண்ட சிக்கலான திசு. பல்வேறு தாவரக் குழுக்களிலும் காணப்படும் சைலத்தின் நடத்து செல்கள் உயிரற்றவை, வெஸல் மெம்பர் மற்றும் ட்ரக்கீடுகளைத் தம்முள் கொண்டவை. இவ்விரு செல் வகைகளும் தடித்த, மரமாக மாறிய இரண்டாம் நிலை செல் சுவர்களைக் கொண்டு முதிர்நிலையில் இறந்துபட்டவை. இந்நிகழ்வினை விளக்க பல்வேறு வழிமுறைகள் முன்வைக்கப்பட்டாலும் ஒட்டுதல்-இழுத்தல் வழிமுறையே[1]சான்றுகள் உடையதாகவும் பலரது ஆதரவைப் பெற்றதாகவும் உள்ளது. ஒட்டுதல்-இழுத்தல் வழிமுறை விமர்சிக்கப்பட்டாலும், சில உயிருள்ள தாவரங்களில் வெளிப்படையாகக் காணப்படும் பேரளவிலான எதிர் அழுத்தம், சோதனையின்பாற்பட்ட மற்றும் உற்றுநோக்கியறிந்த தரவுகள் ஆகியன இம்முறைக்கு ஆதரவாகவே உள்ளன. .[2] [3] மிக அண்மையில் முன்வைக்கப்பட்ட பதிலீட்டு அழுத்தம் கொள்கை ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்களால் முன்வைக்கப்பட்ட இன்றியமையாக் கொள்கையின் ஒரு பதிப்புருவை ஆதரிக்கிறது. இருப்பினும் ஆய்வாசார் ஆதாரங்கள் இதனை ஆதரிக்கவில்லை. [4]

தாவரத் திரவங்கள் துறையில் பேராசிரியரான பிரெஞ்சு நாட்டவர் ஹென்ரி காய்ன் அவர்களது மென் படலங்கள் குறித்த மாற்றுக் கொள்கை. .[5] The theory is intended to explain how water can reach the uppermost parts of the tallest trees, where the applicability of the cohesion-tension theory is debatable.[6] மிக உயரமான மரங்களின் உச்சிப் பகுதிகளில் சைலம் குழாய்கள் மரச்சாறாலான மென் படலங்களால் மூடப்பட்டுள்ளன என இக்கொள்கை கருதுகிறது. குழாய்களின் சுவர்களோடு மரச்சாறு நேரடியாகத் தொடர்பு கொள்கிறது. வான் டர் வால்ஸ் விசைகள் விளைவாக குழாயின் சுவரிலிருந்து அது அமைந்திருக்கும் தொலைவைப் பொறுத்து மென் படலத்தின் அடர்த்தி வேறுபடுகிறது. இந்த அடர்த்தி வேறுபாடு பதிலீடாக ஒரு "பிணைப்பகற்றும் அழுத்தத்தை" உருவாக்குகிறது. குழாயின் சுவரிலிருந்து அமைந்திருக்கும் தொலைவைப் பொறுத்து இதன் அளவும் மாறுபடுகிறது. (திரவத்தின் பெரும்பாலான பகுதியில் நிலவும் அழுத்தத்தினின்றும் வேறுபட்ட அழுத்தமே பிணைப்பகற்றும் அழுத்தம்; இது திரவம் தனது மேல் மட்டத்துடன் வினையாற்றுவதால் ஏற்படுவது. இந்த வினையாற்றல் ஒரு அழுத்தத்தை உருவாக்கும், அது திரவத்தின் பிற பகுதிகளில் காணும் அழுத்தத்தை விட அதிகரித்தோ குறைந்தோ காணப்படும்.) மரத்தின் இலைகள் நீராவிப்போக்கில் ஈடுபடும்போது சைலம் குழாய்களில் நீர் உறிஞ்சப்படுகிறது; இதனாலேயே குழாயினுள் மரச்சாற்றுப் படலத்தின் தடிமன் அதன் உயரத்துடன் மாறுபடுகிறது. பிணைப்பகற்றும் அழுத்தம் படலத்தின் தடிமன் சார்ந்து வேறுபடுவதனால் நீராவிப் போக்கின்போது பிணைப்பகற்றும் அழுத்தத்தில் காணும் சரிவு வாட்டம் உயருகிறது. குழாயின் அடிப்பகுதியில் (இங்கு படலம் அதிகபட்சத் தடிமனுடன் இருக்கும்) அழுத்தம் அதிகமாகவும் அதன் மேற்பகுதியில் அழுத்தம் குறைவாகவும் இருக்கும் (இங்கு படலம் அதிகபட்சமாக மெல்லியதாக இருக்கும்). படலத்துக்குள்ளேயே காணப்படும் இந்த இடம்சார் வேறுபாடு மரச்சாற்றை மேல்நோக்கித் தள்ளும் நிகர விசையை உண்டாக்குகிறது.

==மேற்கோள்கள்==[7]

  1. Henry H. Dixon and J. Joly (1895) "On the Ascent of Sap", Philosophical Transactions of the Royal Society of London. B, 186 : 563–576.
  2. Xylem Structure and the Ascent of Sap, 2nd ed. 2002. by Melvin T. Tyree and Martin H. Zimmermann (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-43354-6) Springer-Verlag
  3. "The Cohesion-Tension Theory" by Angeles G, Bond B, Boyer JS, Brodribb T, Brooks JR, Burns MJ, Cavender-Bares J, Clearwater M, Cochard H, Comstock J, Davis SD, Domec J-C, Donovan L, Ewers F, Gartner B, Hacke U, Hinckley T, Holbrook NM, Jones HG, Kavanagh K, Law B, López-Portillo J, Lovisolo C, Martin T, Martínez-Vilalta J, Mayr S, Meinzer FC, Melcher P, Mencuccini M, Mulkey S, Nardini A, Neufeld HS, Passioura J, Pockman WT, Pratt RB, Rambal S, Richter H, Sack L, Salleo S, Schubert A, Schulte P, Sparks JP, Sperry J, Teskey R, Tyree M. New Phytologist, Vol. 163:3, pp. 451–452. (2004)
  4. Stiller, Volker and John S. Sperry (1999) "Canny's compensating pressure theory fails a test," American Journal of Botany, 86 : 1082–1086.
  5. See:
    • Henri Gouin (October 2008) "A new approach for the limit to tree height using a liquid nanolayer model," Continuum Mechanics and Thermodynamics, 20 (5) : 317-329. Available on-line at: Arxiv.org
    • Henri Gouin (2011) "Liquid-solid interaction at nanoscale and its application in vegetal biology," Colloids and Surfaces A, 383 : 17–22. Available on-line at: Arxiv.org
    • Henri Gouin (2012) "The nanofluidics can explain ascent of water in tallest trees". Available on-line at: Arxiv.org
    • Henri Gouin (2014) "The watering of trees. Embolization and recovery in xylem microtubes." Available on-line at: Arxiv.org
  6. See:
    • Tyree M.T. (1997) "The cohesion-tension theory of sap ascent: current controversies," Journal of Experimental Botany, 48 : 1753-1765.
    • Koch, W.; Sillett, S.C.; Jennings, G.M.; Davis, S.D. (2004) "The limit to tree height," Nature, 428 : 851-854.
  7. "Ascent of sap". பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DEE_asadha_VPM/மணல்தொட்டி&oldid=2311061" இலிருந்து மீள்விக்கப்பட்டது