பயனர்:Bergin76

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
its my photo

நான் பெர்ஜின்.ஞா. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையல் என்ற ஊரில் பிறந்தேன். திருவட்டாரில் உள்ள அருணாச்சலம் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியை முடித்தேன். பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை, மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவக் கல்லூரியில் இயற்பியலில் முதுகலை, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரியில் இயற்பியலில் ஆய்வியல் நிறைஞர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்திலிருந்து உளவியலில் அறிவியல் நிறைஞர்,திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரியில்கல்வியியல் இளைஞர் ஆகிய பட்டங்களைப் பெற்றிருக்கிறேன்.

பணிபுரிந்த இடங்கள்[தொகு]

   2003 முதல் 2013 வரை அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் ஆசிரியப் பயிற்றுநர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்தேன். 2013 முதல் தற்போது வரை இராமனாதபுரம் மாவட்டத்திலுள்ள சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். 

விக்கிப்பீடியாவில் நான்[தொகு]

தமிழில் எழுதுவது எனக்கு பிடிக்கும். 2005 ஆம் ஆண்டிலிருந்தே விக்கிபீடியாவை பயன்படுத்தி வந்தாலும் தற்போது தான் விக்கிப்பீடியாவில் எழுத ஆரம்பித்து இருக்கிறேன். பிற மொழியில் இருக்கும் அழகான அறிவுப்பூர்வமான கட்டுரைகளை தமிழில் கொண்டுவருவதையே முதல் பணியாக தீர்மானித்திருக்கிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Bergin76&oldid=1969726" இலிருந்து மீள்விக்கப்பட்டது