பயனர்:Babauever/இந்திய அண்டார்டிக் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அண்டார்டிக் திட்டமானது பல்-துறை, பல்-நிறுவன திட்டமாகும். அது இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் (Ministry of Earth Sciences)தேசிய அண்டார்டிக் மற்றும் பெருங்கடல் ஆய்வு மைய கட்டுப்பாட்டின் (National Centre for Antarctic and Ocean Research) கீழ் செயல்படும் திட்டமாகும். அது 1981 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவிற்கான இந்திய ஆய்வுப் பயணத்தோடு துவக்கி வைக்கப்பட்டதாகும்.[0] திட்டமானது இந்தியா அண்டார்டிகா உடன்படிக்கையில் கையொப்பமிட்டதோடு உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. பின்னர் 1983 ஆம் ஆண்டில் தக்ஷிண் கங்கோத்ரி [1]அண்டார்டிக் ஆய்வுத் தளத்தைக் கட்டுவித்தனர், அதனைக் கடந்து 1990 ஆம் ஆண்டில் மைத்ரி தளத்தைக் கட்டுவித்தனர். திட்டத்தின் கீழ், வளி மண்டல, உயிரியல், புவி, இரசாயன மற்றும் மருத்துவ அறிவியல் ஆகியன இந்தியாவால் ஆய்விற்குட்படுத்தப்படுகிறது. இந்தியா 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் வரை 27 ஆய்வுப் பயணங்களை அண்டார்டிகாவிற்கு மேற்கொண்டிருக்கிறது. மேலும் தற்போது அப்பகுதியில் கூடுதலான ஓர் ஆய்வு நிலையத்தை 'பாரதி' என்ற பெயரில் கட்டுவிக்க திட்டமிட்டு வருகிறது.[2]

வரலாறு[தொகு]

அண்டார்டிகாவிற்கான இந்திய பயணங்கள் இந்திய வான்வெளி ஆய்வு நிறுவனம்-ஹைட்ரோமீட்டிரியோலாஜிகல் செண்டர் ஆஃப் ரஷ்யா ஆகியவற்றிற்கு இடையிலான இணைவு உடன்பாடுகளில் தடம் பதித்துள்ளன. அவ்வாறான உடன்படிக்கைகள் டாக்டர். பரம்ஜித் சிங் சேஹ்ரா போன்ற இந்தியர்களை 1971-1973 ஆம் ஆண்டின் 17ஆவது சோவியத் அண்டார்டிகா ஆய்வுப் பயணத்தில் இணைந்துக் கொள்ள வழியேற்படுத்தியது.[3]

முதல் இந்திய ஆய்வுப் பயணமானது 21 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது - அண்டார்டிகாவினை குறுகிய 10 நாட்கள் காலத்திற்கு ஆய்வு செய்ய பயணித்தது அது 1982 ஆம் ஆண்டில் எஸ். இசட். காசிம்மால் வழி நடத்தப்பட்டது.[4] அண்டார்டிகா கண்டத்திற்கான 19 ஆவது இந்திய ஆய்வுப் பயணத்தின் போது 15 மாதங்களை அண்டார்டிகாவில் செலவிட்ட கன்வல் வில்குவே இந்தியாவிலிருந்து சென்ற முதல் பெண்மணியாவார்.[5]

முதல் இந்திய ஆய்வுத் தளமான, தஷிண் கங்கோத்ரி எனும் பெயரிடப்பட்ட ஒன்று - குயின் மாட் லாண்ட் எனுமிடத்தின் மையப்ப் பகுதியில் அமைந்த பிரின்சஸ் ஆஸ்டிரிட் கோஸ்ட் (70°45′தெ 12°30′கி) எனும் பனி அடுக்கில் 1983 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.[6] இத் தளமானது 1989 ஆம் ஆண்டில் மிதமிஞ்சிய பனி குவிப்பால் அகற்றப்பட்டது. அப்போது இரண்டாம் ஆய்வுத் தளம்- மைத்ரி நிறுவப்பட்டது.[7] மைத்ரி, பழைய தக்ஷிண் கங்கோத்ரியிலிருந்து ஏறக்குறைய 90 கிலோமீட்டர்கள் புறத்தேயுள்ளது. அதில் ஆண்டு முழுதும் மனிதர்கள் வசிக்கின்றனர்.[8]

சுமன் டி. காட் மைத்ரி (1988-89) ஆய்வு நிலையத்தின் சிறப்பம்சங்களைச் சுருக்கி விவரிக்கிறார்:

வார்ப்புரு:Quotation2

2008 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை, இந்தியா அண்டார்டிகாவிற்கு மொத்தமாக 27 ஆய்வுப் பயணங்களை அனுப்பியுள்ளது.[10][11] அண்டார்டிகா மற்றும் பெருங்கடல் ஆய்விற்கான தேசிய மையத்தின் {National Centre for Antarctic and Ocean Research (NCAOR)} கீழ் துவக்கப்பட்ட 27 ஆவது ஆய்வுப் பயணம் 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ம் திகதி துவங்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ம் திகதி நிறைவடைந்தது.[12] இந்த ஆய்வுப் பயணத்தில் 20 ற்கும் மேற்பட்ட அறிவியல் நிறுவனங்களின் அறிவியலாளர்கள் பங்கேற்றனர். அப்பயணம் அண்டார்டிகாவில் இந்தியாவின் மூன்றாவது நிரந்தர ஆய்வு நிலையத்தினை அமைக்கின்ற சாத்தியக்கூற்றினையும் நுணுக்கமாய் ஆராய்ந்தது.[13]

நிறுவனம்[தொகு]

அண்டார்டிக கண்டத்தில் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் வரை தளங்களைக் கொண்டுள்ள உலக நாடுகள்.

இந்திய அண்டார்டிக் திட்டத்தை இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஓர் ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான அண்டார்டிகா மற்றும் பெருங்கடல் ஆய்வு தேசிய மையம் கட்டுப்படுத்துகிறது.[14] இம்மையமும் (NCAOR) பெருங்கடல் மேம்பாட்டுத்துறையும் இந்திய அண்டார்டிக ஆய்வுக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்கின்றனர்.[15] இமயத்தில் மருத்துவ பரிசோதனைகளை, அதைத் தொடர்ந்த புதிய சூழ்நிலைக்களுக்கேற்ப பழகும் பயிற்சிகளைப் பெற்றப் பின்னர், இந்தத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்கி வாழ்தல், சூழல் நெறிகள், தீயணைப்பு மற்றும் குழுவாகச் செயல்படுதல் ஆகியவற்றிலும் கூட பயிற்சியளிக்கப்படுகின்றனர்.[16]

ஒருமுறை பயணம் மேற்கொள்ள [17] வரை செலவாகிறது.[18] இந்திய அண்டார்டிக் திட்டத்திற்கான பல்வேறு நடவடிக்கைகளுக்குரிய முன்னேற்பாடுகளுக்கான ஆதரவினை இந்திய இராணுவத்தின் தொடர்புள்ளத் துறைகளால் கொடுக்கப்பட்டது.[19] இந்திய பயணங்களின் துவக்க முனைகள் இந்தியாவின் கோவாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் வரை விரிந்திருந்தன. அது 19 ஆவது ஆய்வுப் பயணத்தின் போது நடந்தது. அது அண்டார்டிகா மற்றும் பெருங்கடல் ஆய்வு தேசிய மையத்தின் நிறுவன இயக்குநர் டாக்டர். பி.சி. பாண்டே 1999 ஆம் ஆண்டு டிசம்பரில் பதவியில் இருந்த போது நிகழ்ந்தது.[20] அண்டார்டிகா திட்டத்திற்கு 2007 ஆம் ஆண்டு வரையில் 70 ற்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் பங்களித்துள்ளன.[21]

உலகளவிலான ஒத்துழைப்பு[தொகு]

அண்டார்டிக உடன்படிக்கை முறைமை: [22][23][24][25][26]

இந்தியாவின் அண்டார்டிக் திட்டமானது இந்தியா 1983 ஆம் ஆண்டில் கையொப்பமிட்ட அண்டார்டிகா உடன்படிக்கை முறைமையினால் பிணைக்கப்பட்டுள்ளது.[27] பாண்டே (2007) இந்தியா அதன் அண்டார்டிகா திட்டத்தின் ஓர் பகுதியாக எடுத்தாண்ட பல்வேறு பன்னாட்டு நடவடிக்கைகளைச் சுருக்கமாகத் தருகிறார்:

வார்ப்புரு:Quotation2

இந்தியா பன்னாட்டு சமூகத்தோடு .[29][30][31]இண்டெர் கவர்மெண்டல் ஓஷ்னோகிராஃபிக் கமிஷன் (Inter Governmental Oceanographic Commission), ரிஜனல் கமிட்டி ஆஃப் இண்டெர்கவர்மெண்டல் ஓஷனோகிராஃபிக் கமிஷன் இன் கோஸ்டல் இந்தியன் ஓஷன் (Regional Committee of Intergovernmental Oceanographic Commission in Coastal Indian Ocean)(IOCINDIO), இண்டெர்நேஷனல் சீ-பெட் அத்தாரிட்டி (ISBA) மற்றும் ஸ்டேட் பார்ட்டீஸ் ஆஃப் தி யுனைடெட் நேஷன்ஸ் கன்வென்ஷன் ஆன் தி லா ஆஃப் தி சீஸ் (State Parties of the United Nations Convention on the Law of the Seas) (UNCLOS) ஆகியவற்றில் உறுப்பினராகவும் கூட விளங்கி ஒத்துழைப்பு நல்கி வருகிறது.[29][30][31]

ஆராய்ச்சி[தொகு]

நாசாவின் சீவிஃப்ஸ் (SeaWIFS) படத்தினை அடிப்படையாகக் கொண்ட கிரில் வரைபடச் சிதறல் - அண்டார்டிக தீபகற்பத்தின் ஸ்காடியா கடலிலேயே பெரும்பாலான முக்கிய கவனக் குவிப்புகள் உள்ளன.India carries out krill exploration in the Southern Ocean region of the Antarctic.[1][2]

ஏராளமான காரணங்களுக்காக அண்டார்டிகா உலக ஆய்வு திட்டங்களுக்கான அறிவியல் ஆர்வங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. கண்டங்களின் தோற்றம், பருவகால மாற்றம், வானியல் மற்றும் மாசு ஆகியன அக்காரணங்களில் உட்பட்டிருப்பதாக எஸ்.டி. காட்டினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது (2008).[32] மிருணாளினி ஜி. வாலாவாக்கர் (2005) கூறுகிறார்: ' பனி-பெருங்கடல் ஒன்றையொன்று பாதித்தல் மற்றும் உலக செயல்முறைகள்; சூழலியல் மற்றும் பருவகால வரலாற்று ஆய்வுகள்; புவியின் நில அமைப்பியல் பரிணாமம் மற்றும் கோண்ட்வானாலாண்ட் மறுக்கட்டமைப்பு; அண்டார்டிக் பருவச் சூழல் அமைப்பியல்கள், பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் சூழல் உடற்கூறுயியல்; சூரியக் குடும்பத்தின் நிலவுலகஞ்சார்ந்த செயல்முறைகள் மற்றும் அவற்றின் இணைப்பு; மருத்துவ உடற்கூறுயியல், தகவமைத்துக்கொள்ளும் நுட்பங்கள் மற்றும் மனித உடற்கூறுயியல்; சூழல் பாதிப்பு மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு; குறை வெப்பச் சூழல் தொழில்நுட்ப உருவாக்கத்தைச் சாத்தியமாக்கல் மற்றும் புவியதிர்ச்சி மீதான ஆய்வுகள் ஆகியன இந்திய அண்டார்டிகா திட்டத்தின் கீழான ஆய்வுப் பகுதிகளில் உள்ளடங்கும் துறைகளாகும்.[33]

நாட்டின் அண்டார்டிக் திட்டத்தின் ஒரு பங்காக 2001 ஆம் ஆண்டு வரை 1,300 ஐ நெருங்கிய எண்ணிக்கையிலான இந்தியர்கள் இக்கண்டத்திற்குச் சென்றுள்ளனர்.[34] அண்டார்டிகாவிற்கான இந்திய ஆய்வுப் பயணங்கள் அப்பிரதேசத்தின் விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் பல்லுயிர் பெருக்கத்தினையும் கூட ஆராய்கின்றன.[35][36] அண்டார்டிகாவில் பன்னாட்டு அறிவியல் முயற்சிகளின் விளைவாக 2005 ஆம் ஆண்டு வாக்கில் மொத்தமாக 120 புதிய நுண்ணுயிரிகள் கண்டுணரப்பட்டன.[37] அவற்றில் 20 நுண்ணுயிரிகள் இந்திய அறிவியலாளர்களால் கண்டுணரப்பட்டன.[38] இந்தியாவும் 2007 ஆம் ஆண்டு வரை அண்டார்டிக ஆய்வுகளின் அடிப்படையில் 300 ற்கும் மேற்பட்ட ஆய்வு வெளியீடுகளைப் பதிப்பித்துள்ளது.[39]

அண்டார்டிகாவின் பரந்த பனிப்படுகைகளில் துளையிட்டு பெறப்பட்ட 'பனி உள்ளீடுகள்' புவியின் பருவகால வரலாறு மற்றும் சூழல்-வரலாறு ஆகியன மீதான தகவல்களை அளிக்கின்றன. காலப்போக்கில் பனியில் காற்றில் பறந்துவந்து படியும் தூசுக்கள், எரிமலைச் சாம்பல்கள் அல்லது கதிரியக்கம் ஆகியன பாதுகாக்கப்பட்டு பதிவுகளாக இருப்பதால் தகவல்களை அளிக்கின்றன.[40] அண்டார்டிகா மற்றும் பெருங்கடல் ஆய்வு தேசிய மையம் (NCAOR) ஓர் துருவப்பகுதி ஆய்வு மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தை 'குறைந்த வெப்பச்சூழல் ஆய்வக வளாகத்தை –20°C அளவில் கொண்டு பனி உள்ளீடு மற்றும் பனி மாதிரிகளை பாதுகாக்கவும் பகுப்பாய்வு செய்யவும் உருவாக்கியது என்று கூறுகிறார் எஸ்.டி. காட் (2008).[41] பனி உள்ளீட்டின் மாதிரிகள் அத்தகைய தொழில்நுட்பத்தினால் வடிவமைக்கப்பட்ட உள்ளடக்க அலகுகளில் வைக்கப்பட்டு, பதனப்படுத்தப்பட்டு மற்றும் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.[42] பாலி ப்ரொப்பலீனால் தயாரிக்கப்பட்ட சேமிப்பு பெட்டிகளும் கூட மாதிரிகள் தங்களது குணாதியசங்களை மாற்றிக்கொள்ளாமலிருப்பதை உறுதிப்படுத்துகின்றன. மேலும் அவை மீட்கப்பட்ட நிலையிலேயே பகுப்பாய்வு செய்ய பாதுகாக்கப்படுகின்றன.[43]

ஆய்வு நிலையங்கள்[தொகு]

படிமம்:India in Antartica.jpg
அண்டார்டிகாவில் இந்திய ஆய்வு நிலையங்கள்
தக்ஷிண் கங்கோத்ரி

1981 ஆம் ஆண்டில் முதன் முதலாக அண்டார்டிகாவில் இந்தியக் கொடி பறக்கவிடப்பட்டது. அப்பயணம் அண்டார்டிகா உடன்படிக்கையின் (1959) சூழல் நிபந்தனைக் குறிப்பேட்டின் கீழான தென் பெருங்கடல் பயணங்களின் துவக்கத்தைக் குறித்தது. முதல் நிரந்தர குடியிருப்பு 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்டது, மேலும் தக்ஷிண் கங்கோத்ரி எனப் பெயரிடப்பட்டது. பனியால் மூடப்பட்டப் பிறகு 1989 ஆம் ஆண்டு அது கைவிடப்பட்டது.

மைத்ரி

இரண்டாவது நிரந்தர குடியிருப்பான மைத்ரி 1988-89 ஆம் ஆண்டில் ஷிர்மேஷர் ஒயாசிஸ்சில் நிறுவப்பட்டது. அது நில அமைப்பியல், புவியியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் ஆய்வுகளை நடத்தி வருகிறது. இந்தியா நன்னீர் ஏரியொன்றை மைத்ரியைச் சுற்றி அமைத்தது. அதற்கு பிரியதர்ஷிணி ஏரி எனப் பெயரிடப்பட்டது. மைத்ரி ஷிர்மேஷர் ஒயாசிஸ்சின் நில அமைப்பியல் கட்டமைப்பின் வரைபட உருவாக்க ஆய்வுப் பயணத்தை நிறைவு செய்துள்ளது.

பாரதி (2012)

இந்தியா லார்ஸ்மான் ஹில்லின் அருகில் 69°S, 76°E எனும் திசையில் இருக்கும் ஒரு பகுதியை எல்லையாக வரையறுத்துள்ளது. அது இந்தியாவின் மூன்றாவது குடியிருப்புப் பகுதியாகவும், இரண்டாவது சுறுசுறுப்பான ஆய்வு நிலையமாகவும் இருக்கும். இதற்கான நில அளவை ஆய்வுகள் முடிந்துள்ளன. நிலையமானது 2012 ஆம் ஆண்டு வாக்கில் செயல்பட அட்டவணையில் குறிக்கப்பெற்றுள்ளது. அது நிறைவடையும் சமயத்தில் இந்தியா அண்டார்டிகா வளையத்தில் பல ஆய்வு நிலையங்களைக் கொண்ட ஒன்பது நாடுகள் கொண்ட உயர் குழாமில் நுழையும். பாரதி பெருங்கடலியல் ஆய்வில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய துணைக்கண்டத்தின் 120 மில்லியன் வருட பழமையான வரலாற்றை வெளிக்காட்ட கண்டங்களின் உடைப்பின் சாட்சியங்களைச் சேகரிக்கும். செய்தி அறிக்கைகளில் இந் நிலையம் ஆங்கிலத்தில் பலவாறாக, "பார(த்)தி[44], "பார்தி"[45] மற்றும் "பாரதி"[46] என உச்சரிக்கப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; IAS_book_352 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Gad08 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

குறிப்புதவிகள்[தொகு]

  • Gad, S. D. (2008), "India in the Antarctic", Current Science , 95 (2): 151, Bangalore: Indian Academy of Sciences.
  • Pandey, P.C. (2007) in "India: Antarctic Program", Encyclopedia of the Antarctic edited by Beau Riffenburgh, pp. 529–530, Abingdon and New York: Taylor & Francis, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-97024-5.
  • Pursuit and Promotion of Science - The Indian Experience (2001), New Delhi: Indian National Science Academy.
  • Walawalkar, M. G. (2005), "Antarctica and Arctic: India’s contribution", Current Science , 88 (5): 684–685, Bangalore: Indian Academy of Sciences.

புற இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Science in India