பயனர்:BEULAGANAPATHI/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

TNPSC படிப்பவர்களுக்கு இக்கட்டுரை உதவும்.

தலைப்பு : நாட்டுப்புறவியல் தொகுப்பு : கணபதி பூங்காவனம்

தொல்காப்பியர் தன் நூலில் "பண்ணத்தி" என்று நாட்டுபுற பாடல்களை குறிப்பிடுகிறார். ஏட்டில் எழுதப்படாத பாடல்கள் நாட்டுப்புறப்பாடல்கள் என தமிழ் கூறுகிறது.மேலும் இவ்விலக்கியம் கீழ்கண்ட பெயர்களாலும் குறிக்கப்படுகிறது. 1. நாட்டார் வழக்காற்றியல் 2. வாய்மொழி பாடல் 3. கிராமிய பாடல் 4. பாமரன் பாடல் 5. பரம்பரை பாடல் 6. எழுதப்பாடாத இலக்கியம்

பிசி(விடுகதை), பழமொழி, தாலாட்டு, அறுவடை பாடல்கள், ஒப்பாரி, கும்மி, தொழில் பாடல்கள் இவ்வகையில் அடங்கும்.

முதன் முதலில் நாட்டுபுறபாடல்களுக்கு இலக்கிய வடிவில் முக்கியத்துவம் கொடுத்து பாடியவர் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் ஆவார். அவருக்கு பின் முக்கியத்துவ்ம் கொடுத்து பாடியவர் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் ஆவார்.

இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் லெய்டனர் என்பவர் 19ம் நூற்றாண்டில் முதன் முதலில் நாட்டுபுறவியல் பற்றி ஆய்வு செய்தார்.

தமிழ் நாட்டுபுறவியல் ஆராய்ச்சியின் முன்னோடி என திரு. நடேச சாஸ்திரிகள் கருதப்படுகிறார்.

தமிழ்நாட்டில் 1943-ல் மு.அருணாச்சலம் " காற்றில் மிதந்த கவிதை" என்னும் பெயரில் நாட்டுபுற பாடல்களை வெளியிட்டார்.

உலகிலேயே ஹெல்சிங்கி பல்கலை கழகம் தான் முதன் முதலில் நாட்டுபுற பாடலை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தியது. இப்பல்கலை கழகம் நாட்டுப்புற ஆய்வாளர்களின் "மெக்கா" என்று அழைக்கப்படுகிறது.

உலகிலேயே நாட்டுப்புற இலக்கியத்திற்கு என இயக்கம் அமைக்கப்பட்டது இலண்டனில் ஆகும்.

இந்தியாவில் நாட்டுபுற இலக்கியத்தை வளர்க்க "இந்திய நாட்டுபுற கழகம்" அமைத்த இடம் கல்கத்தா மற்றும் மைசூர்

தமிழ்நாட்டில் Tamil Folklore Association of India என்ற பெயரில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் தொடங்கியது.அதேபோல் நாட்டுப்புறவியல் துறைக்கும் மானுடவியல் துறைக்கும் சொர்கபூமியாக விளங்குவது பீகார் மாநிலமாகும்.நாட்டுபுறவியல் துறையை அறிவியல் துறையாக அறிவித்தது மேற்கு வங்காளம்.மேலும் இம்மாநிலம் தான் முதன் முதலில் நாட்டுப்புற இலக்கியத்திற்கென தனி இதழ் வெளியிட்டது. "ஒரியா" மொழியில் தான் நாடுப்புற இலக்கியமும், பழங்குடிகள் இலக்கியமும் அதிகமாக உள்ளன.

உலக நாட்டுப்புற இலக்கியங்களின் தந்தை ஜாக்கப் கிரீம் ஆவார் தமிழ் நாட்டுபுற இலக்கியங்களின் தந்தை நா. வனமாமலை ஆவார்.

நாட்டுப்புற பாட்டை குறித்து ஆங்கிலத்தில் FOLKLORE என்ற வார்த்தையை வில்லியம் ஜான் தாமஸ் அவர்கள் உருவாக்கினார்.

நாட்டுப்புற பாட்டை குறித்து பல்வேறு கோட்பாடுகள் தோன்றின அதில் முக்கியமானதும் திருப்புமுனையாகவும் அமைந்தது "அமைப்பியல் கோட்பாடு" ஆகும்.

நாட்டுபுறவியலின் மும்மூர்த்திகளாக நா. வனமாமலை, கி.வா. ஜெகன்நாதன், சே. அன்னகாமு ஆகியோர் விளங்குகின்றனர்.

பிறந்த குழந்தைக்கு தாலாட்டு பாடல் நீலாம்பரி ராகத்தில் பாடப்படும். வளர்ந்த குழந்தைக்கு விளையாட்டு பாடலும், வேலை செய்வோர் களைப்பு தெரியாமல் இருக்க தொழிற்பாடலும், சாமி கும்பிடும் போது வழிபாட்டு பாடலும், திருமண விழாவில் சடங்கு பாடலும், இறப்பு நிகழ்வில் ஒப்பாரி பாடலும் பாடப்ப்டும்.

பெண்கள் "உலக்கை குத்தும்" போது களைப்பு தெரியாமல் இருக்க பாடுவது "வள்ளை பாடல்" எனப்படும். இதை மாணிக்கவாசகர் தம் நூலில் "திருபொற்சுண்ணம்" என்று குறிப்பிடுகிறார்.

பெண்கள் பூப்பரிக்கும் போது பாடுவது " திருப்பூவள்ளி" பாடலாகும். நல்ல கணவன் வேண்டி நிலவை பார்த்து பாடுவது " இராவண்டை" பாடலாகும். ஏழு பெண்கள் வட்டமாக கை கோர்து கூடி பாடுவது குறவை கூத்து பாடலாகும்.ஒருவரை ஒருவர் தழுவி ஆடுவது "துலங்கை கூத்து" பாடலாகும்.

ஆண்கள் மட்டுமே பாடி ஆடக்கூடியது "ஒயில் கும்மி" பாடலாகும்

சில நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும் பின்வருமாறு The folk songs of south India - சார்லஸ் கோவன் கள ஆய்வில் சிலஅனுபவங்கள் - வே.சரஸ்வதி வேணுகோபால்,மு.ராமசாமி நாட்டார் வழக்காற்றிய்ல் ஒர் அறிமுகம் - தே. லூர்து நாட்டுப்புறவியல் ஒர் அறிமுகம், நாட்டுப்புறவியல் ஆய்வு - சு. சக்திவேல் நாட்டுப்புறப்பாடல்கள் திறனாய்வு - ஆறு. அழகப்பன் காற்றிலே மிதந்த கவிதை - சே. அன்னகாமு மலையருவி - கி.வா. ஜெகன்நாதன் முத்துப்பட்டன் கதை - நா. வனமாமலை காட்டுமல்லிகை - டி.என். சுப்பிரமணியன் பாமர மக்களின் பரம்பரை பாடல்கள் - அழ. வள்ளியப்பா

நன்றி மேலும் தொடர்புக்கு ganapathinss@gmail.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:BEULAGANAPATHI/மணல்தொட்டி&oldid=2004728" இலிருந்து மீள்விக்கப்பட்டது