பயனர்:Azeeznizardeen

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு சஊதி அரச குடும்பம் நிதியுதவி அளித்திருப்பதாக அந்தத் தாக்குதலில் பாதிக்க்கப்பட்ட குடும்பத்தினர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகள் குற்றம்சாட்டியள்ளனர்.

சஊதி அரச குடும்பத்தின் முழு அளவிலான அதரவிலேயே அல்கைதா, தாலிபான் போன்ற இயக்கங்கள் வலுப்பெற்றதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆப்கானிலும், பொஸ்னியாவிலும் போராடுவதற்காக முஜாஹிதீன் குழுக்களை உருவாக்கிய சஊதி அரச குடும்பத்தினர் அமெரிக்க சீஐஏ அனுசரணையுடன் பல கோடிக்கணக்கான பணத்தையும் வழங்கியுள்ளனர்.

அமெரிக்க எதிர் நாடான அப்போதைய சோவியத் ரஷ்யாவை எதிர்த்து போராடுவதற்கு இந்த நிதியுதவி ஜிஹாதிற்கு உதவியளித்தல் என்ற போர்வையில் வழங்கப்பட்டது.

1998ம் அண்டு சஊதி இளவரசர் துர்க்கி அல் பைஸல் சுமார் ஒரு பில்லியன் சஊதி ரியால்களை (267 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) தாலிபான் தலைவர் ஒருவருக்கு வழங்கியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். இத்தகவல்கள் ஆதாரங்களுடன் முன்வைக்கப்படடுள்ளதாகவும் அறிய வருகிறது.

தாலிபான்களுக்கும், அல்கைதாவிற்கும் தாராளமாக உதவியளித்த இந்த அரச குடும்பம் அன்றைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் மிக மிக நெருங்கிய நண்பர்களாக இருந்திருப்பது பலத்த சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

சோவியத்திற்கு எதிரான இந்த யுத்தத்தை இஸ்லாமிய மயப்படுத்துவதற்காக சஊதி அரேபியா தனது நிதி உதவியின கீழ் இயங்கும் , தனது கட்டுப்பாடடில் உள்ள அனைத்து இஸ்லாமிய (தஃவா) இயக்கங்களையும் நன்கு பயன்படுத்தியது. ரஷ்யாவோடு ஜிஹாத் புரிவது கட்டாயக் கடமையாக இந்த இயக்கங்களால் பிரசாரம் செய்யப்பட்டன.

80 களில் பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமி தலைமையகம் சீ.ஐஏ அலுவலகத்தின் நேரடி இணைப்பகம் போன்று மாறியது. உலக முஸ்லிம்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஜிஹாதின் வெற்றிகளும் அற்புதங்களும் ஊடகங்களில் பிரசாரமாகின. தலைப்புச் செய்திகளாயின.

ஆயுதப்போராட்டத்திற்கு முகம்கொடுக்க முடியாமல் ரஷ்யா சார்பு ஆப்கான் வீழ்சசியடைந்து முஜாஹிதீன் குழுக்களுக்கிடையே மோதல் உருவாக்கப்பட்டு , அமெரிக்க சஊதி தயாரிப்பான தாலிபான்களின் கைக்கு ஆப்கான் சென்றது. பிறகு தாலிபான்களை தவிடுபொடியாக்கி அமெரிக்காவின் அதிக்கம் ஆப்கானில் நிலைநிறுத்தப்பட்டது. பிறகு தாலிபான்களையும் அல்கைதாவையும் குறிவைத்து அரம்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கான போர் இன்று உலகளாவிய அமெரிக்க ஏகாதிபத்தியத்திறகான அடைவின் ஆரம்பமாக உருவாகியிருக்கிறது.

இது உலகை பூரணமாக தன் ஆளுகைக்குள் கொண்டு வர அமெரிக்கா வகுத்த வியூத்தில் இணைந்துக்கொண்டு தன்னையே அழித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் கைக்கூலிகள் தொடர்பான மிக சுருக்கமான பின்நோக்கிய பார்வை.

அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அல்கைதாவின் 9 11 தாக்குதல்கள் அமெரிக்காவிற்கு அப்கானிஸ்தான் மீதும் ஈராக் மீதும் ஆக்கிரமிப்பு செய்வதற்கு ஏதுவான காரணமாக அமைந்தது மட்டுமல்லாமல் அமெரிக்கா எதிரிகளற்ற ஒரே சக்தியாக உலகில் எழுந்த நிறபதற்கும் வழி சமைத்தது.

இப்போது அமெரிக்கவை யாரும் தட்டிக் கேட்க முடியாது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஒன்றை ஆரம்பித்த அமெரிக்கா தாலிபான்களையும் அல்கைதாவையும் அழிப்பதாக கூறி ஆப்கானிலும், ஈராக்கிலும் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று இரத்தத்தைக் குடித்தது.

உலகமே அங்கீகரித்திருந்த பலஸ்தீன் போராட்டத்தை பயங்கரவாதம் என்று புதிய நாமத்தைச சூட்டியது. பலஸ்தீன பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸ் இயக்கத்தை நிராகரித்து ஜனநாயகத்தை புதைத்தது. இன்று அதற்கெதிராக செயற்படும் நாடுகளுக்கு பல அச்சுறுத்தல்கள் விட்டுக்கொண்டிருக்கின்றது.

இன்றைய அமெரிக்காவின் அத்தனை அராஜகங்களுக்கும் யார் பொறுப்பு?

ஆப்கானில் ரஷ்யா செய்த கொடுமைகளுக்கு எதிராக ஜிஹாதைக் கற்றுக்கொடுத்த இந்த தஃவா இயக்கங்கள். இன்று அமெரிக்கா செய்யும் கொடுமைகளுக்கு எதிராக கதைக்காமல் ஜிஹாதை மறந்து, ஜிஹாதை மறைத்து வாழ்வதே அவர்களின் சீ.ஐ.ஏ. பின்னணிக்கு சிறந்த சான்றாகும்.

ஆப்கான் போராட்டத்திற்கு உதவியளித்து, அதற்கு ஜிஹாத் என்று நாமம் சூட்டி பிறகு அதனை பயங்கரவாதமாக்கி பிறகு பயங்கரவாம் ஒழிப்பு என்ற போர்வையில் முஸ்லிம் நாடுகளை சூறையாடி இன்று அசைக்க முடியாத அராஜக சக்தியாய் அமெரிக்கா தலைநிமிர்ந்து நிற்கிறது.


ஆனால் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கும் சஊதியின் நிதி நிரலுக்கும் செயற்பட்ட அததனை பேரும் ஒன்றும் அறியாதவர்கள் போல் அமைதியாக தலை குனிந்து நிற்கின்றனர்.

முஸ்லிம்களையும் முஸ்லிம் நாடுகளையும் அழித்ததற்காக என்றாவது

குற்றவாளிக் கூண்டில் அமெரிக்கா முதலாவது ஏறினால் , நிச்சயமாக இரண்டாவது இவர்கள்தான் ஏற்றப்படுவார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Azeeznizardeen&oldid=400010" இலிருந்து மீள்விக்கப்பட்டது