பயனர்:Anbumelandal

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல் நூலகர் அன்பழகன் - மேலந்தல்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வடகரையில் உள்ள மேலந்தல் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் கொ.முனுசாமி, ராதா தம்பதிகளுக்கு 15.06.1996 இல் மகனாகப் பிறந்தார்

உடன் பிறந்தோர் சுப்பராயல் (காலமாகி விட்டார்) என்கிற மூத்த சகோதரரும் உமா என்கிற மூத்த சகோதரியும் , சிவக்குமார் என்கிற இளைய சகோதரரும் தனலட்சுமி என்கிற இளைய சகோதரியும் ஆவார்.

15.01.1996 ல் பாரதிி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு கெளதம் என்கிற மகனும் கார்குழலி என்கிற மகளும் உள்ளனர்.

ஒன்றாம் வகுப்பில் இருந்து நான்காம் வகுப்பு வரை சங்கராபுரம் வட்டத்திலுள்ள பழைய சிறுவங்கூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியிலும் ஐந்தாம் வகுப்பை மேலந்தல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியிலும் ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பை அருகிலுள்ள காங்கியனூர் அரசு பள்ளியிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பை மணலூர்பேட்டை அரசு பள்ளியிலும் 11 மற்றும் 12ம் வகுப்பை திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வாணாபுரம் அரசு பள்ளியிலும் தனது பள்ளிப் படிப்பை பயின்றார் .

பின்னர் வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டு மணலூர்பேட்டையில் உள்ள அரசு நூலகத்தில் உறுப்பினராக இணைந்து நூல்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். பின்னர் படிப்படியாக நிறைய நூல்களை வாசித்த இவர் தனது கிராமமான மேலந்தல் கிராமத்தில் நூலகம் ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொண்டார். அதன்படி மேலந்தல் கிராமத்தில் 22.06.1995 இல் தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் மூலம் பகுதி நேர நூலகம் திறந்து செயல்படுத்தப்பட்டது.

நூலகத்தின் முதல் நூலகராக அன்பழகன் பணியாற்றினார்.

பின்னர் மணலூர்பேட்டை நூலகத்தின் நூலகராக பொறுப்பேற்ற இவர் சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் நூலகங்களை திறந்து வாசகர்களை அதிகப்படுத்தினார் ..

திருக்கோவிலூர் நூலகத்தில் பொறுப்பேற்ற அங்கும் பல்வேறு சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டதின் பேரில் தமிழ்நாடு அரசு 2011 ஆம் ஆண்டு இவருக்கு நல்நூலகர் விருது வழங்கி கௌரவித்தது .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Anbumelandal&oldid=2814629" இலிருந்து மீள்விக்கப்பட்டது