பயனர்:Anaivaari Anandan
Appearance
முனைவர் ஆனைவாரி ஆனந்தன் தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பு விருது(2017) பெற்றவர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ஆனைவாரி என்னும் ஊரில் 1950 பிப்ரவரி 10 இல் பிறந்தவர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். கவிக்குயில் இதழாசிரியர். சிறந்த கவிஞர். சுமார் 80 நூல்களைப் படைத்துள்ளவர். சாகித்திய அகாதெமி மொழிபெயர்ப்பாளர்.
தமிழக அரசின் இந்திய வச்சமருத்துவத் துறையில் சித்த மருத்துவ நூல்கள் வெளியீடு- மொழிபெயர்ப்பு சிறப்பு அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சித்த மருத்துவ வரலாற்று ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர். சேத்தியாத்தோப்புத் தமிழ்ச்சங்க நிறுவனர்- தலைவர்.