பயனர்:Amkaviyarasan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

== # முடிந்தால் தினமும் சைக்கிள் ஓட்டுங்கள்!

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னால் ஹார்ட் அட்டாக், சக்கரை வியாதி போன்றவற்றை பலர் கேள்வி கூட பட்டதில்லை. ஹார்ட் அட்டாக் என்பது வருடத்திற்கு ஒருமுறை, இருமுறை தான் நாம் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் தற்போதைய நிலைமை வேறு, தினமும் நாம் ஹார்ட் அட்டாக், இரத்த அழுத்தம், சக்கரை வியாதி போன்றவற்றை நாம் அடிக்கடி கேள்விபட்டிருக்கிறோம். இன்னொரு கொடுமை என்னவென்றால் இவை அனைத்துமே முப்பது வயது இளைஞனை கூட தாக்குகிறது என்பதுதான். இதற்கெல்லாம் என்ன அடிப்படை காரணம் என்பதை நாம் யோசித்து பார்த்தால் ஒரு விஷயம் விளங்குகிறது.


அக்காலத்தில் எல்லா வேலைக்களுக்கும் நடை மற்றும் சைக்கிளைத்தான் நாம் பயன்படுத்தினோம். ஆனால் தற்போதைய நிலைமை வேறு. பக்கத்துக்கு கடைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட நாம் மோட்டார் சைக்கிளை பயன்படுத்த தொடங்கி விட்டோம்.


இளைஞர்களே, கவுரவம் பார்க்காதீர்கள். சற்று தொலைவு செல்லக்கூடிய பகுதிகளுக்கு சைக்கிளில் செல்லும் வழக்கத்தை வைத்து கொள்ளுங்கள். இதனால் உடலும் புத்துணர்ச்சி பெரும். உங்கள் ஆரோக்கியமும் பெருகும்.

(இதை ஒரு புத்தகத்தில் படித்தேன்).

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Amkaviyarasan&oldid=1327835" இலிருந்து மீள்விக்கப்பட்டது