பயனர்:Alagusenthil

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எனது புகைப்படம்
படிமம்:விரல் நுனியில் உலக நூலகங்கள்.jpg
விரல் நுனியில் உலக நூலகங்கள்

செந்தில் குமார் இயற்பெயர் அழகப்பன், 1984 இல் நவம்பர் 4இல் செட்டிநாட்டு வலையப்பட்டி என்ற கிராமத்தில் மு.சுப. கருப்பையா மற்றும் கரு.மீனாள் இவர்களுக்கு முதல் குழந்தையாக பிறந்தார். தந்தையார் மு.சுப. கருப்பையா முத்தமிழ் முரசு என்ற பத்திரிக்கையை 30 வருடங்களாக நடத்தி வருகிறார்.

நான் இளம் வயதில் எதிர்பார்த்தது எதுவுமே கிடைகாத ஒன்று. உதராணத்திற்கு பக்கத்து வீட்டில் மற்ற குழந்தைகள் வீடியோ கேம் அப்பொழுது எல்லாம் மிக பிரபலம். அது எனக்கு கிடைகாத ஒன்றாக இருக்கும் அந்த சமயத்தில் வெறும் காகிதத்தில் மடித்து அது விரியும் பொழுது சந்தோஷபடுவேன்.

மற்ற சிறுவயது மாணவர்கள் விளையாடும் பொழுது அவர்கள் விளையாட்டில் கூட துரோகங்கள் செய்ததால் விளையாடுவதை தவிர்த்தேன். ஏதேனும் சாதித்தே ஆக வேண்டும் என்ற நெருப்பு எனது நெஞ்சத்தில் துளிர் விட்டு எரிந்து கொண்டே இருந்தது. அதனால் படிக்கும் பொழுதே பேப்பர் போடும் சிறுவனாக சேர்ந்தேன். என்னுடைய முதல் சம்பளம் 150 ரூபாய். அது அவன் சைக்கிள் ரிப்பேர் செய்யவே சரியாக இருக்கும். இப்படியே படிப்படியாக முன்னேறி இறுதியில் கல்லூரி படிக்கும் பொழுது என்னுடைய மாத வருமானம் ரூபாய் 2500. கல்லூரிக்கு சென்று பிறகு மாலையில் டீக்கடை மற்றும் உணவகத்தில் இரவு 11.00 மணி வரை வேலை பார்ப்பேன். ஊரில் எல்லாரும் நல்ல பையன் எந்த வம்புக்கும் போக மாட்டான் என்ற நல்ல பெயரோடு வளர்ந்து வந்தேன். இளங்கலை வணிகவியல் படிப்பான B.com தஞ்சாவூர் பூண்டி கல்லூரியில் சேர்ந்து படித்தேன். அதன் பின் 3 வருடத்திற்கு என்ன செய்வது என்பது தெரியவில்லை அப்பாவின் நண்பர் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியர் முனைவர் அ. கணேசன் அவர்களை சந்தித்த பொழுது அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்து இருந்தது. கணேசன் அவர்கள் அப்பாவிடம் பையனை என்னை நம்பி விடுங்கள் நாங்கள் ஒரு வகுப்பு புதிதாக ஆரம்பித்துள்ளோம் அதில் உங்களது பையன் சேர்ந்து படிக்கட்டும். முதுகலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் 2 வருடம் படித்தேன். முழுநேரமும் என்னுடைய பணிகள் அனைத்தும் நூலகம் மற்றும் ஆசிரியர் அவர்களை சார்ந்தே இருந்தது.

ஒரு சமயம் தேர்வு நேரத்தில் அவனால் பணம் கட்ட முடியவில்லை இதனால் பல நேரங்களாக தேர்வு அறையின் வெளியே காத்து இருந்தான். என்ன வென்று செய்வதறியாது திகைத்திருந்தான். கல்லூரி தாளாளர் துளசி அய்யாவிடம் அப்பா கல்லூரி தேர்வு கட்டணத்திற்காக நின்று விலக்கு வாங்கி கொடுத்தார். தேர்வில் முதல் வகுப்பாக தேறி வெற்றி பெற்றான். அதன் பின்னர் இளநிலை ஆய்வு படிப்புக்காக அம்மாவின் வலையலை விற்று படித்து முடித்தான்.இப்படியே நாட்கள் நகர்ந்தன alagusenthil@gmail.com. அதன் பின் எனது ஆசானுக்கு கோவையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் உதவி நூலகராக மே மாதம் 2006 இல் சேர்ந்தேன். அங்கு தொழில் நூட்பம் சார்ந்த அனைத்து படிப்பினையும் கற்று 2007-2009 கற்பகம் பொறியியல் கல்லூரியில் மீண்டும் உதவி நூலகராக சேர்ந்தேன். அதன் பின்பு கடந்த 2009 முதல் கோவையில் உள்ள எஸ்.வி.எஸ் பொறியியல் கல்லூரியில் நூலகராக பணி புரிகிறேன். இது வரையில் மாணவர்களுக்கு பல ஆசிரியர்களுக்கும் ஆய்விதழ்களில் அவர்களின் பெயரில் கட்டுரை வெளியிட உறுதுணையாக உள்ளேன். இரண்டு விதமான வலை பக்கத்தை சமுதாயத்திற்காக உருவாக்கினேன். ஒன்று https://sites.google.com/site/alagusenthil இது என்னை பற்றியும் எனது பணிகளையும் பற்றியும் விவரமாக கூறியுள்ளேன். இது வரை 40,000 க்கும் மேற்பட்டோர் எனது இணையதளத்தை பார்த்து உள்ளனர். தமிழ் இந்துவில் 15.03.2016 அன்று ஒரு மாபெரும் மகிழ்ச்சியாக எனக்கு கிடைத்த மிகப்பெரும் வரமாக என்னை பற்றியை கட்டுரையை நினைக்கிறேன். நான் எந்த நாளிலும் இல்லாத அளவிற்கு தொலைபேசி அழைப்புகள் வந்து குவிந்தன. இந்த கட்டுரை வெளிவந்தது சில பேருக்கு பிடிக்க வில்லை. அதையேல்லாம் பொருட்படுத்தாமல் எனது பாதையில் சென்று கொண்டு இருந்தேன்.

படிமம்:நூலக விருது.jpg
நூலக விருது பற்றிய எனது செய்தி நாளேட்டில்

http://svslibrary.pbworks.com/ இது எனது கல்லூரியை பற்றிய இணையதளம். அதன் பின்பு கடந்த ஆண்டு அம்மா நூலகம் என தஞ்சாவூர் மாநகராட்சிக்கு முற்றிலும் இணைய நூலகம் வேண்டும் என எனது ஆசான் தெரிவித்ததால் www.ammalibtcmc.com என்ற இணையதளத்தை முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தலைமையில் இவ்விணையதளம் தொடங்கப்பட்டது எனது வாழ்க்கைக்கு பெறும் பாக்கியமாக பெற்றேன். இந்த இணையதளத்தில் உலகத்தில் உள்ள அனைத்து செய்தித்தாள்களும் படிக்கும் வண்ணம் இதை உருவாக்கினேன். கடந்த 12.08.2017 அன்று நூலக தந்தை முனைவர் எஸ்.ஆர். ரங்கநாதனின் 125 பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு சென்னை ஜஜடியில் நடைபெற்ற நூலக விழாவில் எனக்கு சாதனை விருது வழங்கப்பட்டது எனது மிகப்பெரும் பாக்கியம். இதில் முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் விஸ்வநாதன் மற்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் நூலகர் நித்தியானந்தம் மற்றும் சென்னை நூலகர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Alagusenthil&oldid=2449326" இலிருந்து மீள்விக்கப்பட்டது