பயனர்:Alagappan Ramanathan 01/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியத் தேசிய ராணுவ நினைவுச்சின்னம்

முன்னாள் இந்தியத் தேசிய ராணுவ நினைவுச்சின்னம் சிங்கப்பூரில் இருக்கும் எஸ்ப்ளனேட் பூங்காவில் உள்ளது. அந்நினைவுச்சின்னத்தில் மூன்று வார்த்தைகள் இருக்கின்றன. முதல் வார்த்தை "ஒற்றுமை", இரண்டாவது வார்த்தை "நம்பிக்கை" மற்றும் மூன்றாவது வார்த்தை "தியாகம்" ஆகும். 1945-ஆம் ஆண்டு, சிங்கப்பூர் ஜப்பானியர்களின் பிடியில் இருந்தபோது இந்நினைவுச்சின்னம் கட்டப்பட்டது. அப்போது இந்தியத் தேசிய ராணுவத்தினருக்கும் ஜப்பானியர்களுக்கும் ஒரே எதிரிதான் இருந்தனர்; அது பிரிட்டிஷாரே ஆகும். பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற இந்தியத் தேசிய ராணுவம் போராடிக்கொண்டிருந்தது. இதனால் அது ஜப்பானியர்களுடன் கூட்டு வைத்துக்கொண்டது.

ஜுலை மாதம் 8-ஆம் தேதி 1945-ஆம் ஆண்டு திரு. சுபாஷ் சந்திரா போஸ் நினைவுச்சின்னத்திற்கு அடிக்கல்லை இட்டார். இவர்தான் இந்நினைவுச்சின்னத்தை முறையாகக் கட்டவேண்டும் என்ற எண்ணத்தை முன்வைத்தார். சின்னத்தைப் பார்த்தவுடன் எல்லா நாடுகளில் இருக்கும் மக்களுக்கும் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடவேண்டும் என்ற எண்ணம் உருவாகும் என்று அவர் நம்பினார். நினைவுச்சின்னம் ஒரு மாதத்திற்குள் ஜப்பானியர்களால் கட்டி முடிக்கப்பட்டது. இவ்வாறு ஜப்பானியர்கள் உதவியுடன் இந்தியா தேசிய ராணுவத்திற்கு அந்நினைவுச்சின்னம் கட்டப்பட்டது.

1945- ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில் பிரிட்டிஷ் ராணுவ தளபதி திரு. லார்ட் லூயிஸ் மௌண்ட்பாட்டர்ன் அந்நினைவுச்சின்னத்தை அடியோடு அழிக்குமாறு கட்டளையிட்டார். மௌண்ட்பாட்டர்னின் குறிக்கோள் பிரிட்டிஷாரைப் பாதிக்கும் சின்னங்களை அழிப்பதே ஆகும். இவ்வாறு செய்வதால் இந்தியத் தேசிய ராணுவத்தை யாரும் நினைவுகூர மாட்டார்கள்; பிரிட்டிஷாரை எதிர்த்துக் கூட்டணி அமைத்துப் போராடமாட்டார்கள் என்று அவர் நம்பினார்.

இன்று இருக்கும் இந்நினைவுச்சின்னம் சிங்கப்பூர் அரசாங்கத்தால் மீண்டும் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது உள்ள அந்நினைவுச்சின்னம் 1995-ஆம் ஆண்டு தேசிய மரபுடைமை வாரியத்தால் மறுசீரமைக்கப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள இந்தியச் சமூகத்தினர் கொடுத்த நன்கொடையால்தான் அந்நினைவுச் சின்னத்தை மறுசீரமைக்க முடிந்தது.

-      அழகப்பன் ராமனாதன் , விக்டோரியா பள்ளி.