பயனர்:Advcravikumar
வரம் தரும் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்.
களக்காடு கோவில்பத்தில் எழுந்தருளிய அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் , கீழகுருநாதர் திருக்கோவில் என்றும் மாதாங் கோவில் என்றும் அழைக்கபடுகிறது.
கோவில் கன்னி மூலையில் அமர்ந்திருக்கும் கணபதியை வணங்கிட துன்பங்கள் அகலும்
அனைத்து மாதாங் கோவிலிலும் அம்மனுடன் வீரபுத்திரர், குருநாதர் இருபார்கள். இக்கோவிலில் மூலஸ்தானத்திற்கு அடுத்த அறையில் மூல கணபதி, நாகராஜர் மற்றும் குருநாதர் உள்ளனர்.
மாதாங் கோவில் சக்தி அம்சமாக இருந்தாலும் சிவானுக்கு மோக்சம் கொடுத்துவள் சிவ கல்யாணம் எற்றவள் அதனால் அனைத்து மாதாங் கோவிலில் அம்மன் வாகனமாக நந்தி பகவான் இருப்பார்.
நந்திக்கு வலது புரம் வீரப்புத்திரரும், இடது புரத்தில் இருளப்பரும் அம்மனுக்கு காவல் தெய்வங்களாக இருக்கிறார்கள்.
நந்தியின் பின்புரம் கொடிமரம்,பலிபீடம் அமைந்துள்ளது.
இக்கோவிலில் மேலும் பேச்சிஅம்மன், கல்யாணி, பிரம்மசக்கி, ஓண்டிவீரர், நாகராணி, சூடலைமடான், இசக்கியம்மன், சாஸ்தா, காமாட்சி, காத்தவராயன், மீனாட்சி, கருப்பசாமி, மாடத்தியம்மன், நடைகாப்பான் கவி, சந்திர கவி, கோபாலநாதர், சப்தகன்னிகல் உள்ளனர்.
மகா சிவராத்திரி
[தொகு]மாசி மாதம் வரும் சிவராத்திரி மகாசிவராத்திரி. மாசி சிவராத்திரி முந்தய பௌர்ணமி அன்று கோவிலில் கால்நாட்டப்படும். சிவராத்திரி முந்தைய 9 நாட்கள் சிறப்பு அலங்காரங்கல் செய்து திருவிழா கொண்டாடபடும். சிவராத்திரி மறுநாள் இரவு பேச்சி பூஜை மற்றும் பரிவார தேவதைகளுக்கு ஆடு, கோளி, முட்டை படையல் வைத்து சாம கொடை விழா நடைபெறும்.
பயம் வேண்டாம் நல்லது நடக்கும்
சுபம்.