பயனர்:Abrahammeshak/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாப்புச் சான்று

தமிழ் இலக்கணத்தின் நான்காவது வகையான யாப்பிலக்கணத்தில் உள்ள பல வகையான பாவகைகளுக்கும், பாவினங்களுக்கும் விளக்கமும், சான்றுகளும் காட்டப்பட்டு எழுதப்பட்டுள்ள நூல் யாப்புச் சான்று நூலாகும். தொடர் செய்யுளாக ஒரே பாடு பொருளையோ, நிகழ்வையோ அனைத்து வகையான பா மற்றும் இனங்களில் பாடுவதும், பல்வேறு தலைப்புகளில் பாடுவதும் யாப்புக்குச் சான்றாய் அமையும். பல்வேறு தலைப்புகளில் அண்மையில் எழுதப்பட்ட நூல் “ சூரல் பம்பிய சிறுகான் யாறு “ ஆகும். புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ உட்பட அனைத்து வகைகளுக்கும் இந்நூலில் புதிய செய்யுள்கள் விளக்கத்துடன் இயற்றிக் காட்டப்பட்டுள்ளது. யாப்பு – யாத்தல் –தளை –கட்டுதல்- எனப் பொருள்படும் எழுத்துக்களை யாத்து, கோத்து, அசையாக்கி அசைகளிலிருந்து சீர் உருவாக்கி சீர்களை ஒன்றுடன் ஒன்று இலக்கணவிதிப்படி கட்டுதல் யாப்பிலக்கணத்தில் அடங்கும். அவ்வகையான அனைத்து யாப்புக்களுக்கும் சான்றுகள் காட்டப்படும் பொழுது யாப்புச் சான்று எனவும், அதிலேயே தொடர்நிகழ்வுகளாகப் பாடும் போது யாப்புச் சான்றிலக்கிய நூல் எனவும் கொள்ளப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Abrahammeshak/மணல்தொட்டி&oldid=1948355" இலிருந்து மீள்விக்கப்பட்டது