பயனர்:Aadhisivansangili/sandbox

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சமேத சிவனணைந்த போற்றி,ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிநாராயணன்,[தொகு]

சங்கிலி வீரப்பசுவாமி திருக்கோவில்[தொகு]

கோவில் முன்புறத் தோற்றம்
கோவில் முன்புறத் தோற்றம்

மூலவர்                  :      சிவனணைந்த போற்றி,ஆதி நாராயணன், சங்கிலிவீரப்ப சுவாமி

உற்சவர்                                 -

அம்மன்/தாயார்        :         மீனாட்சியம்மன்,ஸ்ரீதேவி பூதேவி

தல விருட்சம்          :                         -

தீர்த்தம்                  :                             -

ஆகமம்/பூஜை         :                      -

பழமை                  :      1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்          :                            -

ஊர்                  :      மம்சாபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர்     

மாவட்டம்          :       விருதுநகர்

மாநிலம்                  :       தமிழ்நாடு  [தொகு]

=== '''திருவிழா:''' === 

ஆடி, தை அமாவாசை, கடைசி வெள்ளி, மஹா சிவராத்திரி

=== '''தல சிறப்பு:''' ===     

சிவன் சன்னதியும்,விஷ்ணு சன்னதியும் ஒரே கோவிலில் இருப்பது இத்தல சிறப்பாகும்,

விஷ்ணு சன்னதியில் திருநீறு  பிரசாதமாக வழங்கப்படுகிறது.இத்தல விஷ்ணு சூரிய நாராயணனின்  அம்சமாக விளங்குவதால் இவருக்கு ஆதிநாராயணன் என பெயர் வந்தது.சிவபெருமான் இங்கு லிங்க வடிவமாக அருள் பாலிக்கிறார்.

இங்கு சிவபெருமானுக்கும் ஆதி நாராயணனுக்கும் காவலாக சங்கிலி வீரப்பசுவாமி, பொன் மாடன் சுவாமி, ஊன முத்து சுவாமி

ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதி நாராயணன்
ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதி நாராயணன்

ஆகியோர் உள்ளனர்.ஆதிநாராயணுக்கு எதிரே எமதர்ம ராஜா எழுந்தருளியுள்ளது இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.வருடத்திற்கு ஒரு முறை மஹா சிவராத்திரி அன்று சுவாமிகளுக்கு குற்றால தீர்த்தத்தால் அபிஷேகம்

நடை பெறுகிறது.நான்கு கால பூஜைகளும் காவல் தெய்வங்களுக்கு படைப்பு பூஜையும் நடைபெறுகின்றது.

=== '''திறக்கும் நேரம்:''' === 

காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும்

மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும்

'''முகவரி:'''[தொகு]

 அருள்மிகு சிவனணைந்த போற்றி,அருள்மிகு ஆதிநாராயணன் அருள்மிகு சங்கிலி வீரப்பசுவாமி திருக்கோவில்,

சிவந்திப்பட்டி கிராமம்,மம்சாபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்

'''பொது தகவல்:'''[தொகு]

விநாயகர்,முருகன்,ஸ்ரீ மீனாட்சி சமேத சிவனணைந்த போற்றி,

ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிநாராயணன்,

சங்கிலி வீரப்பசுவாமி,பொன் மாடன்,ஊன முத்து,எமதர்ம ராஜா ஆகிய தெய்வங்கள் உள்ளன.

'''பிரார்த்தனை:'''[தொகு]

ஸ்ரீ மீனாட்சி சமேத சிவனணைந்த போற்றி
ஸ்ரீ மீனாட்சி சமேத சிவனணைந்த போற்றி

இங்கு அமைந்துள்ள சிவனையும்,ஆதிநாராயணனையும் வேண்டினால் நினைத்தது நிறைவேறும்,திருமண தடைகள் விலகும்.இங்குள்ள காவல் தெய்வமான சங்கிலி வீரப்ப சுவாமி,பொன் மாடன்.ஊன முத்து ஆகிய தெய்வங்களை வணங்கினால் தொழில் விருத்தி பெறும்.குழந்தை பேறு கிடைக்கும்.பில்லி,சூனியம்,ஏவல்,கண் திருஷ்டி ஆகியவற்றில் இருந்து விடுபடலாம்.எம தர்மனுக்கு புதன் கிழமை தோறும் விளக்கேற்றி வழிபட்டால் எமபயம்,மரண பயம் நீங்கும்

'''நேர்த்திக்கடன்:'''[தொகு]

அபிஷேக அலங்காரம் செய்தும்,அன்னதானம் செய்தும் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர்.

'''தல வரலாறு:'''[தொகு]

சிவ பெருமான் தனது மைத்துனரான விஷ்ணுவுடன் எழுந்தருளி  சங்கிலி வீரப்பசுவாமியையும், பொன் மாடனையும் காவலுக்கு வைத்த தலம்.சூரியனின் மகனான எமன் எமலோக பணியை மறந்து மற்ற தேவையற்றவைகளை செய்தமையால் சூரியனால் சாபம் பெற்று பூலோகம் சென்று ஆதிநாராயணனையும் சிவனையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.இதன் விளைவாக எம தர்மன் தனது தந்தையான ஆதிநாராயணன்(சூரிய நாராயணன்)எதிரே எழுந்தருளியுள்ளார். மதுரை மற்றும் ராஜபாளையம் வாழ் விஸ்வகர்ம வம்சத்தினரால் இத்தலம் நிறுவப்பட்டது. இத்திருக்கோவிலில் கடந்த 2013ம் ஆண்டு ஆனி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது

'''அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தார்(சங்கிலிவீரப்ப சுவாமி) திருவரலாறு...'''[தொகு]

ஆதிகாலத்தில் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தத்திற்காக திருப்பாற்கடலை கடையும்போது ஆலகால விஷத்தோடு பாரிஜாத மரம், காமதேனுப் பசு மற்றும் மேலும் பல அதிசயங்களும், அற்புதங்களும் வெளியே வந்தன. அப்படி அமிர்தத்தோடு பலதரப்பட்ட விஷயங்கள் வெளிவரும் நேரத்தில் சங்கொலி முழங்க விசித்திரமான, வீரியமான பலவிதமான பூதகணங்களும், அந்த பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவான சுவாமி சங்கிலி பூதத்தார் கையில் தண்டத்தை ஆயுதமாகவும், உடல் மேல் கனத்த இரும்புச்சங்கிலிகளை ஆபரணமாகவும் அணிந்தவாறு பார்த்தாலே பதற வைக்கும் பிரமாண்ட ஆங்கார,ஓங்கார உருவத்தோடும், ஆரவார சப்தத்தோடும் ஆக்ரோஷமாக, வீரமாக பாற்கடலில் இருந்து வெளியே வருவதைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் மற்ற முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் அஞ்சி நடுநடுங்கி ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர். அமிர்தத்தோடு பிறந்ததால் சங்கிலி பூதத்தாருக்கு ‘அமிர்த பாலன்’ என்றொரு பெயரும் உண்டு. வீரமாக தோன்றியமையால் சங்கிலி வீரப்ப சுவாமி என்ற பெயரும் உண்டு. கையில் குண்டாந்தடியான தண்டத்தை ஆயுதமாக ஏந்தியுள்ளதால் 'தண்டநாதன்' என்றும் கூறுவர். திருப்பாற்கடலில் பிரமாண்ட உருவத்தோடும், அனைவர் கண்ணையும் பறிக்கும் முத்து போன்ற பிரகாசத்தோடும் தோன்றியதால் 'ராக்‌சஷ முத்து' என்றும் அன்பர்களால் அழைக்கப்படுகிறார். எங்கள் தாத்தா மற்றும் பல குடும்ப உறுப்பினர்களுக்கு 'ராக்‌ஷ முத்து' என்பதே பெயராகும். சென்ற தலைமுறையில் ராக்‌ஷச முத்து என்பதை 'ராமு' என்று சுருக்கியும் பெயராக இட்டு உள்ளார்கள்.

அண்டமெல்லாம் நடுங்கச் செய்த அதிபயங்கர ஆலகாலவிஷத்தை விழுங்கி அனைத்துலக ஜீவராசிகளையும் அழிவில் இருந்து காப்பாற்றிய கைலாய நாயகரும், சித்தருக்கெல்லாம் சித்தரும்,வித்தகருக்கெல்லாம் வித்தகரும்,முக்கண் மூத்தவருமான  எம்பெருமான் சிவபெருமான்பூதகணங்களையும், பூதகணங்களுக்கெல்லாம் ராஜாவான சங்கிலி பூதத்தாரையும் அமைதிப்படுத்தி, ஆசுவாசப்படுத்தி தன்னோட பிள்ளைகளாக பொறுப்பு ஏற்றுக்கொண்டு கைலாயத்தில் வைத்துக் கொண்டார். அதனால்தான்  தந்தையான முக்கண் மூர்த்தியின் நெல்லையப்பர் கோயில் மற்றும் பல சிவன் கோயில்களிலும், தாயான பார்வதியின் அம்மன் கோயில்களிலும், சகோதரர்களான முருகனது திருச்செந்தூர், வள்ளியூர் , ஐயப்ப சாஸ்தாவின் சொரிமுத்தையனார் கோயில் , மற்றும் மாமாவான பெருமாளின் நம்பி கோயில் போன்ற பல கோயில்களிலும் காவல் தெய்வமாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து பாதுகாத்து வருகிறார்.

ஸ்ரீ சங்கிலி வீரப்ப சுவாமி
ஸ்ரீ சங்கிலி வீரப்ப சுவாமி

 இப்படியாக சிவபெருமான் ஆணையின் பேரில் பூதராஜாவான நமது சங்கிலி பூதத்தார் சுவாமி மற்ற பூதகணங்கள் உதவியோடு மிகவும் சிறப்பாக கைலாய நிர்வாகம் செய்து கொண்டு இருந்தார்.ஒருமுறை சிவபெருமான் சங்கிலி பூதத்தாரிடம் மொத்த கைலாய நிர்வாகப் பொறுப்பையும் கொடுத்து விட்டு ‘பூலோகப் பயணம் போய் வருகிறேன்’ என்று கூறிச் சென்றார்.அப்படி போன சிவன் திரும்பி வரவேயில்லை. நெடுங்காலமாக பொறுத்திருந்து பார்த்த பார்வதி அன்னை ஆனவர் பூதத்தாரை அழைத்து,‘அமிர்த பாலனே, பூமிக்கு போன உங்கள் தந்தையை வெகுநாட்களாக காணவில்லையே.விபரம் ஏதும் அறிவாயா…' என்று விசாரிக்க, 'இன்னும் சிறிது நாளில் வந்து விடுவார் அன்னையே’ என்று பூதத்தார் பதில் கூறினார். இப்படியாக பல நாள்கள் கழிந்தன.

 கேட்கும் போதெல்லாம் பூதத்தார் இதே பதிலை சொல்ல பார்வதி அன்னை ஒருநாள் கோபப்பட்டு, 'என்ன செய்வாய், ஏது செய்வாய், என்று நான் அறியேன். நீயே நேராக பூலோகம் சென்று உங்கள் தந்தையை கையோடு அழைத்து வா' என்று உத்திரவிட, மீறமுடியாத  பூதத்தாரும் தந்தையைத் தேடி பூலோகம் கிளம்பினார். அப்படி அவர் தேடி வரும்போது தூரத்தில் சிவனும் கைலாயத்துக்கு திரும்பி வருவதை பூதத்தார் பார்த்து விட்டார். ஆனால் பூதத்தார் வருவதை சிவபெருமான் கவனிக்கவில்லை. 'ஆஹா.., நாம் கைலாயம் விட்டு கீழிறங்கி வருவதை அப்பா பார்த்தால் கொடுத்த கைலாயப் பொறுப்பை கவனிக்காமல், ஊர் சுற்றுவதாக தவறாக நினைத்து, கோபப்பட்டு, சத்தம் போடுவாரே.., ஏன் இப்படி வந்தாய் என்று கேட்டால்  பார்வதி அன்னை ஆணை இட்ட விபரம் சொல்ல வேண்டி வருமே…, நாம் சாபம் வாங்கினாலும் பரவாயில்லை, நம்மால் அன்னை பார்வதி ஏச்சும், பேச்சும் வாங்கக்கூடாது, குடும்பத்தில் குழப்பம் வந்து விடக்கூடாது’ என்றெல்லாம் பலவாறு எண்ணிய பூதத்தார், பாதை ஓரத்தில் கிடந்த பாம்புச்சட்டையில் புகுந்து சிவபெருமான் கண்ணில் படாமல் மறைந்து கொண்டார். இதனால்தான் சங்கிலி பூதத்தாருக்கு 'சட்டநாதன்'  (சட்டைநாதன்)  என்றொரு பெயரும் உண்டு. மேலும் சங்கிலி பூதத்தார் சுவாமி இருக்கிற இடத்தில் எல்லாம் பாம்பு இருக்கும். சுவாமி பாம்பாகத்தான் பக்தர்கள் கண்ணில் படுவார். ஆனால் யாரையும், எந்த தொந்திரவும் செய்ய மாட்டார். தன்னை வேண்டி வழிபடுகிற பக்தர்களது கனவிலும் பாம்பாகத் தான் வருவார். ஆபத்து நேரங்களில் ‘ சட்டநாதா, சங்கிலிபூதம்’ என்று அபயக்குரல் கொடுத்தால் சரசரவென்று வந்து உதவிடுவார்.

‘தாய் அறியாத சூல் உண்டோ’, ‘தந்தை அறியாத பிள்ளை உண்டோ’ சங்கிலி பூதத்தார் தன் கண்ணில் படக்கூடாது என்பதற்காக பாம்புச்சட்டையில் புகுந்ததை ஞானதிருஷ்டியில் கண்ட சிவபெருமான் சங்கிலி பூதத்தாரை அழைத்து, ‘மகனே, சட்டநாதா, சங்கிலிபூதம், அமிர்த பாலா, கைலாயத்தில் சிறப்பாக காவல் நிர்வாகம் செய்து வரும் உனது பாதுகாப்பும், திருவருளும் பூலோக மக்களுக்கும் வேண்டும் என்பதற்காகவே யாம் இந்த திருவிளையாடல் புரிந்தோம். நீதி, நேர்மை, நியாயம், நிர்வாகங்களில் சிறந்த காக்கும் கடவுளான அன்பு மைந்தன் உனக்கு இப்போது எமது அன்பு பரிசுகளாக ஆக்கும் வரம், காக்கும் வரம், அழிக்கும் வரமும் தந்தோம். உன்னை வணங்குவோர் எந்தக் குறையுமின்றி அன்பிலும், அறத்திலும், செல்வத்திலும் சிறந்து விளங்குவார்கள். நீ பூலோகம் சென்று சிறப்பான திருவிளையாடல்கள் புரிந்து, மக்களுக்கு நன்மைகள் பல செய்து யாம் இருக்கும் தென்கைலாயமாம் பொதிகை மலை வந்து எம்மை  அடைவாய்.’ என்று ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.

ஸ்ரீ சங்கிலி பூதத்தார்
ஸ்ரீ சங்கிலி பூதத்தார்

இப்படியாக பூலோகம் வந்து சேர்ந்த பூதத்தார் ஒரு இடமென்று தங்காமல் பல புண்ணிய ஷேத்திரங்களுக்கும் பயணம் சென்றார். எனவேதான் அவருக்கு ‘ஷேத்திரபாலன்’ என்றொரு பெயரும் உண்டு.அப்படி சென்ற இடங்களில் எல்லாம் பல திருவிளையாடல்கள் செய்து மக்களினால் கோயில்கள் கட்டி கும்பிடப்படுகிறார். பக்தர்கள் மேல் பேரன்பு கொண்ட பூதத்தார் பெருங்கோபமும் கொண்டவர். பக்தர்கள் செய்யும் தவறுகளை பொறுமையோடு ஏற்று முதலில் குறிப்பால் உணர்த்துவார். அப்படி அய்யன் காட்டும் குறிப்புகளை உணராமல் மேலும் மேலும் தவறுகள் செய்யும் பட்சத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கிவிடுவார். ஆம். 'விதி மீறினால் விதி முடித்திடுவார்'.

பல இடங்கள் சுற்றி பர்வத மலைக்கு வந்த பூதத்தாருக்கு ஆள்நடமாட்டமில்லாத அந்த இடத்தின் அழகும், அமைதியும் பிடித்து போய் விட அந்த மலையிலே மிகவும் பிரமாண்டமாக, ஓங்கி, உயர்ந்து, வளர்ந்த சந்தன தேக்கு மரத்தில் குடி அமைத்து தியான நிஷ்டையில் இருந்து வந்தார். பர்வதமலையடிவார ஊரில் முத்து செட்டி, சீனி செட்டி, முத்துராக்கன் செட்டி என்ற மூன்று சகோதரர்கள் வியாபாரம் செய்து வந்தார்கள். திரைகடலோடி திரவியம் தேட எண்ணம் கொண்ட மூவரும் கடல் கடந்து பொருள்களை ஏற்றிக் கொண்டு செல்ல வல்லம் (கப்பல்) செய்ய முடிவெடுத்து மரம் தேடி பர்வத மலைக்கு வந்தனர்.

ஆள், அம்பு, ஆசாரிகள், கருவிகளோடு பல இடங்களில் சுற்றி அலைந்தும் பொருத்தமான மரம் கிடைக்காத செட்டி சகோதரர்களின் கண்ணில் சங்கிலி பூதத்தார் குடியிருக்கும் வானளாவ ஓங்கி, உயர்ந்த பிரமாண்டமான சந்தன தேக்கு மரம் பட்டது. அழைத்து வந்த ஆசாரிகளும் வல்லம் செய்ய அனைத்து அம்சங்களும் கொண்ட மரம், இந்த மரம்தான் என உறுதி செய்ய மரத்தை வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட ஆரவாரக்கூச்சல்களினால் நிஷ்டை கலைந்த பூதத்தார் காட்டிய குறிப்புகளை உணராத செட்டி சகோதரர்கள் மரத்தை வெட்ட ஆரம்பிக்க, கடுங்கோபம் கொண்ட பூதத்தாரின் திருவிளையாடலால் மரத்தின் மீது முதல் வெட்டு விழும் முன்பே கோடாரிக் காம்பு உடைந்து, தெறித்து கோடாரியானது மரவெட்டியின் தலையை துண்டாக்கி தலை வேறு, முண்டம் வேறாக்கியது.

ஆனால் எடுத்த காரியத்தில் பிடிவாதம் கொண்ட அந்த அகங்கார, ஆணவ செட்டி சகோதரர்கள் மந்திரவாதியை அழைத்து மேற்கொண்டு இடையூறுகள் ஏற்படாமல் இருக்க மாந்திரீகம் செய்து, கருங்கிடா வெட்டி பலியிட்டு தந்திர பூஜைகள் செய்ய சுத்த வீர சைவரான சங்கிலி பூதத்தார் இரத்தத்தீட்டு பட்டதால் மரத்தை விட்டு இறங்கி வெளியேறினார். பின் மரமானது வெட்டப் பட்டு, வல்லம் கட்டப்பட்டு கடலில் இறக்கி வெள்ளோட்டமும் விடப்பட்டது.பின் முறையான ஹோமங்கள் வளர்த்து, பூஜைகள் செய்து தீட்டெல்லாம் கழிக்கப்பட்டு பொருள்களை ஏற்றி புறப்பட்ட கப்பலில் பெருங்கோபத்தோடும், ஆவேசத்தோடும் ஏறிய பூதத்தார் நடுக்கடலில் கடும்புயலாய், பெருமழையாய், கொடும் சூறாவளியாய் உருமாறி, சங்கிலியால் ஓங்கி அடித்து, கப்பலை தாக்கி, சிதைத்து, பல துண்டு, துண்டுகளாக்கி   ஆணவ செட்டி சகோதரர்களையும் கடலில் மூழ்கடித்து அழித்து விட்டு திருச்செந்தூரில் கரை ஏறினார்.

அடக்க முடியாத ஆவேசத்தோடும், ஆக்ரோஷத்தோடும் திருச்செந்தூர் வந்த பூதத்தாரை அமைதிப்படுத்திய சகோதரரான சுப்பிரமணிய சுவாமி திருச்செந்தூர் கோயில் மூலஸ்தானத்திலும், கோபுர வாசலிலும், பக்தர்கள் தங்கும் மடங்களிலும் , கடற்கரையில் நாழிக்கிணற்றிலும், மற்றும் ஊருக்கு உள்ளேயும், வெளியேயுமாக இருபத்தி ஒன்று நிலையங்களை உருவாக்கி கோவிலுக்கும், வரும் பக்தர்களுக்கும், காவல் தெய்வமாக பூதத்தாரை இருக்கச் செய்தார்.திருச்செந்தூர் சென்றால் தவறாமல் பாருங்கள். மூடி வைக்கப்பட்டிருக்கும் ராஜகோபுரக் கதவின் இடது பக்கத்தில்  சங்கிலி பூதத்தாருக்கு துடியான  நிலையம் (பெரிய சிலை கொண்ட சிறிய கோயில்) இருக்கும்.

கைலாயத்திலும்,பர்வத மலையிலும் குளுமையாக இருந்த பூதத்தாருக்கு கடற்கரை சூடு பிடிக்காமலும், நியாய தர்மத்தில் சிறந்த வீரபாகுத் தேவருக்குப் பின் புதிதாக வந்த ஊழல் தர்மகர்த்தாவான பழனியாப்பிள்ளை போட்ட கல், மண் கலந்த நைவேத்தியங்களாலும் வயிற்றுவலி வந்துவிட முருகரிடம் தகவல் கூறிவிட்டு, தவறு செய்த தர்மகர்த்தாவையும் தண்டித்து விட்டு குளுமையான இடமான களக்காடு மலைக்கு வந்து, சலசலத்து ஓடும் நம்பியாற்றில் மூழ்கி குளித்து, உடல் சூட்டை தணிக்க வசதியாக, ஆற்றங்கரை மேலிருந்த பாறையில் சங்கிலியால் ஓங்கி அடித்து ஒரு கசத்தை (ஆற்றுக்குள் இருக்கும் ஆழம் அறியமுடியா இடம் ) உருவாக்கி நம்பியாற்றின் கரையில் மூன்று நிலையங்கள் அமைத்து  அமர்கிறார்.

சங்கிலியால்  ஓங்கி அடிக்கும் சத்தமும், கடும்பாறையானது பொடிபட்டு கசத்தில் நீர் பொங்கிப் பிராவாகமாய் பெருக்கெடுக்கும் சப்தமும் கேட்டு, கோயிலுக்கு வெளியே வந்து பார்த்த மலை நம்பி பெருமாள் ' யார், என்ன'வென்று விசாரிக்க, பூதத்தாரும், ‘நான் சிவனின் பிள்ளை. நீங்கள் என் மாமா, நான் உங்களது மருமகன்’ என்று எல்லா விபரமும் சொல்ல பெருமாளும், தாயாரும் பூதத்தாரின் வயிற்றுவலி நோயை குணமாக்கி, ஆசிர்வாதம் செய்து, திருக்குறுங்குடியில் உள்ள கீழ்நம்பி கோயிலுக்கும், ஊருக்கும் காவலாக  இருக்கச்சொல்லி அனுப்பினார்கள். அன்போடு அழைத்து, ஆரத்தழுவி ஏற்றுக்கொண்ட கீழ்நம்பி பெருமாளும் பூதத்தாருக்கு திருக்குறுங்குடி கோயிலையும், ஊரையும் சுற்றி ஏழு நிலையங்கள் அமைத்து கொடுத்து நித்யபூஜைகளுக்கும் ஏற்பாடு பண்ணி கொடுத்தார்.

இப்படியாக திருக்குறுங்குடியில் பூதத்தார் காவல் நிர்வாகம் செய்து வரும் நேரத்தில்  கிட்டுநாபுரத்தில் வசித்து வந்த தொழுநம்பி என்னும் பூசாரி கீழ்நம்பி கோயில் பெருமாளுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் பூஜை, புனஸ்காரங்களை பொறுப்பாக செய்து  வந்தார். அவரது மனைவி ருக்மிணியம்மாளும் சிறந்த பக்தை.பதிவிரதை. ஆச்சி, ஐயர் இருவருக்கும் எல்லா வளங்களையும் கொடுத்த இறைவன் குழந்தை வரம் மட்டும் கொடுக்கவில்லை. மந்திர, தந்திரங்களில் தேர்ந்த தொழுநம்பி தவமாய், தவமிருந்து, குழந்தை வரம் வாங்கினார். பிறந்த குழந்தைக்கு காதில் சிறுவெட்டு போன்ற குறை இருந்ததால் 'குண்டல வாசகம்' என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தனர். பள்ளி செல்லும் வயது வந்ததும் திண்ணைப்பள்ளியிலும் சேர்த்துவிட்டனர். அந்த காலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்த கோயிலுக்கு காலையில் செல்லும் தொழுநம்பியானவர் நடையை திறந்து மூன்று கால பூஜைகளையும் முறையாக நைவேத்தியங்களோடு செய்து விட்டு அந்தி பூஜை முடித்தபின் கோயில் நடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்.அதன்பின் கோவில் காவல் தெய்வமான சங்கிலி பூதமானவர் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு மறுநாள் காலையில் பெருமாள், தாயாரின் திருப்பள்ளி எழுச்சிக்குப் பின் கதவின் உள்பூட்டு,தாழ்பாள்களை விலக்கி விடுவார்.

ஒருநாள் குழந்தை குண்டலவாசகத்திற்கு பள்ளி விடுமுறை. தெருவில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையானவன் தூரத்தில் தொழுநம்பி கோயிலுக்கு புறப்பட்டு செல்வதை கண்டு அவனும் தொடர்ந்து ஓடினான். ‘அப்பா,அப்பா’ என்று அழைத்தவாறு அன்பு மகன் ஓடி வருவதை பாதி வழி தூரம் தாண்டியபின் தான் தொழுநம்பி கவனித்தார். ’ஆஹா,இவனை மறுபடியும் கொண்டு போய் வீட்டுக்கு வந்தால் பூஜை நேரம் தப்பி விடுமே. அப்படிச் செய்தால் அது பெரும் குற்றமாயிற்றே… ஆண்டவனுக்கு அறிந்தே செய்யும் இழுக்காயிற்றே...‘ என்றெல்லாம் குழம்பி பின் தெளிந்தவனாக குழந்தையையும் அழைத்துக்கொண்டு கோயில் நோக்கி சென்றான்.

கோயில்நடை திறந்து குழந்தையை ஒரு ஓரமாக உட்கார்ந்து விளையாடச் சொல்லிவிட்டு ஆயத்த வேலைகளில் இறங்கினான் தொழுநம்பி. வெகுதூரம் நடந்து வந்ததால் தாகத்தால் பீடிக்கப்பட்ட குழந்தையானவன் ‘அப்பா,குடிக்க ஏதாவது கொடு’ என்று கேட்க நம்பியும் சுவாமிகளின் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாலை மகனுக்கு கொடுக்க முனைந்தான். கோவிலின் காவல் பொறுப்பான பூதத்தார் எவ்வளவோ குறிப்புகள் காட்டியும் உணராமல்  மகனுக்கு பாலை புகட்டியும் விட்டான். சிறிது நேரம் கழித்து குழந்தை 'பசிக்கிறது' எனக் கேட்க மீண்டும் பூதத்தாரின் குறிப்புகளையும், கோயிலின் ஆகமவிதிகளையும் மீறி பூஜைக்கு வைத்திருந்த பழத்தினை குழந்தை குடித்து மீதி வைத்திருந்த பாலுடன் பிசைந்து பஞ்சாமிர்தமாக்கி ஊட்டி விட்டான். அதன்பின் சிறிதுநேரம் அங்குமிங்கும் ஓடியாடி விளையாடிய குழந்தை குண்டலவாசகமானவன் நடந்து வந்த களைப்பாலும், பால், பஞ்சாமிர்தம் உண்ட அலுப்பினாலும் ஓரமாய் படுத்து தூங்கி விட்டான். வழக்கம்போல செய்யும் முறையான பூஜை போல் அல்லாமல் பால், பழமின்றி பெருமாளுக்கும், தாயாருக்கும், பூதத்தார் உள்ளிட்ட ஏனைய பரிவார தெய்வங்களுக்கும்,தேவதைகளுக்கும்  ஏனோ,தானோ என்று ஒப்பிற்கு பூஜை செய்த தொழுநம்பியானவன் குழந்தை கூட வந்ததையும், கோயிலினுள் தூங்கி கொண்டிருப்பதையும் மறந்து கதவை பூட்டிவிட்டு வழக்கமான பாதையில் நடந்து வீட்டை அடைந்தான்.

வீட்டிற்கு வந்து கை, கால், முகம் கழுவி ஆசனப்பலகையில் அமர்ந்து ருக்மிணியம்மாள் எடுத்து வைத்த உணவை பிசைந்து முதல் கவளத்தை வாயில் வைக்கப்போனவன், ‘குழந்தை குண்டலவாசகனையும் சாப்பிடக் கூப்பிடேன்.சேர்ந்து சாப்பிடுகிறேன்’ என்று கூற,  ‘காலையில் நீங்கள் கோயிலுக்குச் செல்லும்போது உங்கள் கூட வந்ததாகத்தானே அவனது நண்பர்களும், செல்லும் வழியில் கண்டவர்களும் கூறினார்கள். எங்கே மறுபடியும் வந்து தெருவில் விளையாடிக் கொன்டிருக்கிறானா’ என்று ருக்மிணி ஆச்சியானவள் எதிர் கேள்வி எழுப்பினாள்.

அதன்பின்னரே கோயிலிலேயே குழந்தையை விட்டு வந்தது நினைவிற்கு வர மனைவியிடம் மெதுவாக விபரம் கூறி ‘ பயப்படாதே, குழந்தையை பெருமாளும், தாயாரும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். விடிந்ததும் சென்று அழைத்து வந்து விடுகிறேன்.’ என்று கூற  கொதித்து எழுந்த  அந்த தாயோ ‘தவமாய்,தவமிருந்து பெற்ற குழந்தையை கொடிய மிருகங்கள் வாழும் காட்டில் விட்டு வந்து விட்டு காலையில் சென்று அழைத்து வருகிறேன் என்று கூறி பெற்றவள் என் வயிறு துடிக்கச் செய்கிறாயே. நீயெல்லாம் ஒரு தகப்பனா.. நீ இப்போதே சென்று என் குழந்தையை அழைத்து வரவில்லை என்றால் நானே செல்வேன். அல்லது உடனே என் உயிர் துறப்பேன்…’ என்று மேலும் பல கடுஞ்சொற்கள் பேசி நம்பியை கலங்க அடித்தாள்.

சரி இவளிடம் இதற்கு மேல் பேசி எந்த பிரயோஜனமும்  இல்லை என்று முடிவெடுத்த நம்பியும் மேலும் தாமதியாமல் வீட்டை விட்டு உடனே கிளம்பி கொடும் மிருகங்களான புலி,சிறுத்தை,கரடி,நரி தாக்காதவாறு அந்தக் கடும்காட்டில் வாழும் மொத்த மிருகங்களின் வாயையையும் கட்டும் மந்திர உச்சாடனம் ஜபித்து வசிய மைகளோடும், மருந்துகளோடும் களக்காடு வனம் புகுந்.து கோயிலை அடைந்தான்.

 கோயிலுக்கு மீண்டும் நம்பி வந்த காரணம் அறிந்த காவல் தெய்வமான சங்கிலி பூதத்தாரும் ‘ நம்பி , நீ வந்த காரணம் யாம் அறிவோம்..காலையில் உன் மகனை உன்னிடமே ஒப்படைப்பேன். கவலையின்றி திரும்பிச் செல்’ என்று கூறினார்.

நம்பியும் ‘சங்கிலி பூதத்தாரே இப்போது என் மகனை நான் அழைத்துச் செல்லவில்லை என்றால் என் மனைவி உடன் உயிர் துறப்பாள். அதன் பின் நானும், என் மகனும் மிகவும் கஷ்டப்படுவோம். உன்னத தாயும், உண்மையான பத்தினியுமான அவளது சாபமும் என்னையும், எனது பரம்பரையையும் பீடிக்கும். எனவே கருணை கொண்டு, தயவு செய்து கதவு திறந்து விடுங்கள்.’ என்று வேண்டினான்.

‘நம்பியே, உன் நிலை அறிவோம். ஆனால் ஆகம விதிப்படி கோயில் கதவைப் பூட்டி, பெருமாளும், தாயாரும் பள்ளியறைக்கு சென்ற பின் மறுநாள் காலை திருப்பள்ளி எழுச்சிக்கு பின் தானே கோயில் கதவை திறக்க முடியும். விதிமுறை அறிந்த நாம் இருவருமே அதனை மீறுவது தர்மம் அல்ல. உன் மகனை இப்போது இருப்பதை விட இரண்டு பிடி சேர்த்து வளர்த்து நிறைந்த கல்வியோடும், குறையாத செல்வத்தோடும் அவன் பெருவாழ்வு வாழும் வகையில் ஆசி வழங்கி நாளை காலையில் திருப்பி தருகிறேன்.வீடு சென்று இல்லாளை ஆறுதல் கூறி சமாதானப்படுத்து.’  என்று தேறுதல் வார்த்தைகள் கூறினார்.

ஆனால் பூதத்தாரின் வார்த்தைகளில் சமாதானமடையாத நம்பியானவன் தன்னிடமிருந்த சாவி கொண்டு கோயில் நடை திறக்க முனைந்தான்.

‘நம்பியே… இன்று காலையில் இருந்தே பல விதிமீறல்கள் செய்து வந்தாய். உன் மகன் பொருட்டு அனைத்தையும் மன்னித்தோம்.ஆனால் இப்போது நீ செய்ய முயல்வது மன்னிக்கமுடியாத தவறு. மேல்கொண்டு என் கோபம் கிளப்பாமல் உடனே இவ்விடம் விட்டு புறப்படு.இல்லையென்றால் நடப்பவை நல்லவைகளாக இருக்காது’ என்று பூதத்தார் எச்சரித்தார்.

மனம்பிறழ்ந்த நம்பியோ,’ஏ பூதமே, என்னையே எச்சரிக்கிறாயா… என்னை விட ஆகம விதிகளும், வேதங்களும் அறிந்தவனோ நீ… உன்னை என்ன செய்கிறேன் பார். நான் படித்த மந்திரங்களினால் உன்னைக் கட்டி, கோயில் கதவைத் திறந்து, என் மகனை இப்போதே அழைத்துச் செல்வேன். உன்னால் முடிந்ததை செய்.’ என்று பூதத்தாரிடம் சவால்  விட்டு மந்திரத்தினால் கோயில் கதவின் உள்ளிருந்த மேல்தாழ்ப்பாளை விலக்க, பூதத்தாரோ கீழ்தாழ்ப்பாள் போட்டார். அவன் கீழ்தாழ்ப்பாள் விலக்கும்போது பூதத்தார் தந்திரமாக மேல்தாழ்ப்பாள் போட்டார். 

இப்படி மாறி, மாறி தடுத்தும் தொழுநம்பியானவன் மந்திர வேலைகளின் மூலம் மீண்டும், மீண்டும் கோயில் கதவைத் திறக்க முயற்சிக்க கடும்கோபமும், ஆக்ரோஷமும் கொண்ட சங்கிலி பூதத்தார், ‘சரி நம்பி. கதவருகே வந்து உனது மேல் துண்டை விரித்து நில். உன் மகனைத் தருகிறேன். உன் விருப்பப்படியே வாங்கிச் செல்’. என்று கூறி எப்படி நம்பியானவன் பாலிலே, பழத்தை பிசைந்து பஞ்சாமிர்தம் ஆக்கினானோ அதுபோல பூதத்தாரும் தூங்கிக் கொண்டு இருந்த அந்த பச்சிளம் பாலகனை, பால் மணம் மாறா குழந்தையை, கை வேறு, கால் வேறாக பிய்த்து,ரத்தமும், சதையுமாக  பிசைந்து கதவு சாவித்துவாரம் வழியாக கோவிலுக்கு வெளியே வீசினார்.

‘ஆஹா பூதமே…என்ன காரியம் செய்தாய்..என்னை பழிவாங்க என் மகனையா கொன்றாய்.. பொழுது விடிவதற்குள் உன்னை மந்திர மை, மருந்துப் புகை போட்டு பிடித்து பாதாளக் குகையில் அடைத்து என் அடிமை ஆக்குகிறேன் பார்’ என்று சூளுரைத்து சபதம் செய்தான் தலைக்கனத்தால் தன் மகனை இழந்த தொழுநம்பி.

‘அடோய் நம்பி. யாரிடம் சபதம் செய்கிறாய்.இப்போது கூறுகிறேன் கேள். உன் கண் முன்னே இந்த ஊர் நீங்கிச் செல்வேன். அதற்கு ஆதாரமாக ஆலயத்தின் அணையாவிளக்கு அணைந்திருக்கும். மேலும் கோயில் விருட்சமான மருதமரத்தின் வலது பக்கத்தையும், கோயில் கோட்டை மதில் சுவரில் உள்ள ஏழு வரிசைக்கற்களையும், சிதைத்து, சரித்து செல்வேன். அடையாளத்தை வந்து சரி பார்த்து கொள்.’என்று கூறி திருக்குறுங்குடியிலிருந்து கிளம்பி பூதத்தான் குடியிருப்பு வழியாக களக்காடுமலை தாண்டி தென்பொதிகை மலை ஏறி காரையாற்றங்கரையில் உள்ள அருள்மிகு சொரிமுத்தையனார் கோயில் மூலவரும், தானே சுயம்பாக அவதரித்த சர்வேஸ்வரருமான மகாலிங்க சுவாமிகளின் அனுமதியோடு மணி முழுங்கி மரத்தடியில் வந்து குடியேறினார்.

 இவ்வாறாக அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தாரானவர், கைலாயத்தில் இருந்து கிளம்பும் போது சிவபெருமான் இட்ட ஆணைப்படி பல ஷேத்திரங்கள் பயணம் செய்து தென்கைலாயமான பொதிகை மலை சொரிமுத்தையனார் கோயில் வந்து மணிமுழுங்கி மரத்தடி, மேற்கு வாசல், மூலஸ்தானம், மடப்பள்ளி மற்றும் வனத்தினுள்ளாக ஐந்து நிலையங்கள் அமைத்து சுயம்புலிங்கமாக அமைந்துள்ள தந்தை சிவனான மகாலிங்க சுவாமி, மூத்த சகோதரரும், முழுமுதற் கடவுளுமான விநாயகர், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம் மற்றும் சபரிமலை சாஸ்தாவுக்கெல்லாம் மூலசாஸ்தாவான பொன் சொரிமுத்து ஐயனார் மற்றும் கும்பாமுனி  ( அகத்தியர்), பாதாளமுனி, சுடலை மாடசுவாமி, தளவாய் மாடசுவாமி, தூசி மாடசுவாமி, தூண்டில் மாடசுவாமி, கரையடி மாடசுவாமி, பொம்மக்கா, திம்மக்கா சமேத பட்டவராயன், பிரம்மரட்சதை அம்மன், பேச்சி அம்மன்  போன்ற பரிவார தெய்வங்கள் மற்றும் தேவதைகளோடு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

'''அருள்மிகு சங்கிலி பூதத்தார் சுவாமி சம்பந்தப்பட்ட அதிசயங்களும் ஆதாரங்களும்...'''

1.திருக்குறுங்குடி கோயிலில் பூதத்தாரால் சிதைக்கப்பட்ட கோவில் கோட்டை மதில் சுவரின் ஏழு வரிசைக் கற்களை  கோவில் நிர்வாகத்தினர் பல்வேறு கால கட்டங்களில் சீரமைக்க முயற்சித்தும் இன்று வரை முடியாமலே இருக்கிறது.

2. களக்காடு திருக்குறுங்குடி மலைநம்பி கோயில் சங்கிலி பூதத்தார் ஆலய திருவிழாவின் போது சாமி கொண்டாடிகள் நம்பியாற்றில் சுவாமி சங்கிலிபூதத்தாரால் உருவாக்கப்பட்ட ஆழம் அறிய முடியாத கசத்தில் குதித்து சங்கிலி எடுத்து வருவர். சொரிமுத்தையனார் கோயிலிலிலும் இதே போன்று ஆழமான கசம் உள்ளது.

3.சுத்த சைவரான பூதத்தாருக்கு பிரியமானவற்றில் முக்கியமானவை வடை மாலை,  எலுமிச்சை மாலை, வாழைப்பழக்குலை, பானகரம், வார்ப்புப் பாயாசம், முற்றிலும் காய்கறிகளான ஆசாரப்படைப்பு  மற்றும் பச்சரிசியை ஊறவைத்து கையால் இடித்து மாவாக்கி வெல்லம் கலந்து உருண்டையாக செய்து பின் நடுவில்  குழி ஏற்படுத்தி எண்ணெய் விட்டு திரிபோட்டு சுவாமி முன் தீபம் ஏற்றப்படும் வேண்டுதல் மாவிளக்கு.  

4. பூதத்தார் சுத்த சைவமாக இருந்தாலும் அவர் குடி கொண்டுள்ள கோயில்களில் மற்ற தெய்வங்களுக்காக நடக்கும் உயிர்ப்பலிகள் மற்றும் அசைவப்படைப்புகளை கண்டு  கொள்வதில்லை. அவரது பக்தர்கள் புலால் உண்ணுவதையும் தடுப்பதில்லை. விழாக்காலங்களில் அவரது பக்தர்களே அசைவம் தவிர்த்து தீவிர விரதம் மேற்கொள்கின்றனர்.

5.வள்ளியூர் முருகன் கோவில்,  திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவிலும் பல கோயில்களில் பூதத்தார் இருக்கிறார். எல்லா இடத்திற்கும் அவர் எப்படி  சென்றார் என்பது போன்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கும்  ஆதாரங்கள் திருத்தமாகவும், தெளிவாகவும் உள்ளன. அவரது பெயரிலே 'பூதப்பாண்டி', பூதத்தான் குடியிருப்பு போன்ற ஊர்களும் உள்ளன. சொரிமுத்தையனார் கோயிலில் பூதத்தாரை ஆதாரமாக வைத்து கட்டப்பட்ட அனைத்து கோயில்களுக்கும் திருவிழாவின் போது சொரிமுத்தையனார் கோயிலில் இருந்தே சங்கிலி அல்லது தீர்த்தக்குடம் எடுத்து செல்லப்படுகிறது.  

6. அவரது எல்லாக் கோயில்களிலும் பீடத்தின் கீழ் இரும்புச் சங்கிலி வைக்கப்பட்டிருக்கும். அருள் வந்து ஆடும் பக்தர்கள் அந்த சங்கிலிகளால் நெஞ்சில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டாலும் வலிப்பதுமில்லை. கண்ணிப்போவதோ, இரத்தக்காயங்களோ ஏற்படுவதுமில்லை.

7.அடர்ந்த வனப்பகுதியும், களக்காடு - முண்டன்துறை புலிகள் சரணாலயமும் ஆகிய சொரிமுத்தையனார் கோயிலுக்கு ஆண்டு முழுதும் மக்கள் சென்று வருகின்றனர். வருடாவருடம் விமரிசையாக நடக்கும் ஆடிஅமாவாசை திருவிழாவின் போது லட்சக்கணக்கான மக்கள், குடும்பத்தோடு சென்று தற்காலிக குடில்கள் அமைத்து பத்து நாள்களுக்கும் மேல் தங்கி வருகின்றனர்.ஆனால் இதுவரை எவரையுமே மிருகங்கள் தாக்கியது இல்லை. காவல் தெய்வமான சங்கிலி பூதத்தாரே பக்தர்கள் கண்ணில் படாமல் கொடிய மிருகங்களை தடுத்தாண்டு வருகிறார்.

8. கோயிலுக்குச் செல்லும் தற்போதைய பாபநாசம் வழியான மலைப்பாதையானது போடப்படுவதற்கு முன் அனைத்து ஊர் மக்களும், சிங்கம்பட்டி ஜமீனால் காட்டுபகுதியில் அமைக்கப்பட்ட காட்டுப்பாதை வழியாகவே சென்று வந்தனர். இப்போதும் சிங்கம்பட்டி மற்றும் அக்கம்பக்க கிராம மக்கள் வனத்துறையினர் அனுமதியோடு இந்த வழியை பயன்படுத்தி கோயிலுக்கு சென்று வருகின்றனர்.  பூதத்தார் பொதிகை மலை வந்த காட்டுப்பாதை வழியாகவே வருடாவருடம் ஆடிஅமாவாசைதோறும் நடைபயணமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆரல்வாய்மொழி அருகே உள்ள கிராமத்தில் இருந்து சொரிமுத்தையனார் கோவிலுக்கு சாமிகொண்டாடிகளால் வல்லயம் ( வெண்கல மணிகள் பிணைக்கப்பட்டு பூண் இடப்பட்ட குத்தீட்டி / வேல்கம்பு ) கொண்டு வரப்படுகிறது. இன்று வரை எவர் கண்ணிலும் எந்த மிருகமும் பட்டதில்லை.

9.சிங்கம்பட்டி அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தார் கோயிலில் பல நூற்றாண்டுகளாய் மூன்றுநாள் திருவிழாவாக சிறப்பாக நடந்து வரும் மாசி மாத சிவராத்திரி திருவிழாவிற்காக இந்த காட்டு வழியாகவே சங்கிலி எடுத்து வரப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு அவ்வாறு சங்கிலி எடுக்கச்சென்ற 90 வயதான முதிய சாமிகொண்டாடி இரவு நேரமாகியும் திரும்பாததால் காட்டினுள் சென்று தேடிப் பார்க்கலாம் என்று கோயில் நிவாகத்தினர் முடிவெடுத்து புறப்பட முயன்ற போது காட்டில் வழி தெரியாமல் சென்றுவிட்ட அந்த பெரியவரை ஆடு ஒன்று  வழிகாட்டி கோயிலுக்கு அழைத்து வந்தது. பின் திருவிழா முடியும் வரை கோயிலில் சங்கிலி பூதத்தாரின் பிரமாண்ட பீடத்தின் அருகிலே இருந்த அந்த ஆடு பின் யார் கண்ணிலும் படாமல் மறைந்து போனது. சங்கிலி பூதத்தாரே ஆடு வடிவில் வந்து சென்றதாக அனைத்து நெல்லை மாவட்ட பத்திரிக்கை பதிப்புகளிலும் பரபரப்புச் செய்தியாக வந்தது. வேட்டையாடும் கொடும் மிருகங்கள் வாழும் கடும்காட்டில்  ஆடு அலைவது என்பது ஆச்சரியமான அதிசயமாகும்.

10. திருவரலாற்றின் படி திருக்கைலாயத்தில் இருந்து கிளம்பி திருச்செந்தூர் வழியாக திருக்குறுங்குடி வரும்வரை சிவனின் சைவசின்னமான திருநீறு அணிந்திருந்தார். வைணவத்தலமான பெருமாளின் திருக்குறுங்குடி நம்பி கோயிலில் வைணவ அடையாளமான திருநாமம் ஏந்தினார். திருக்குறுங்குடியில் இருந்து சொரிமுத்தையனார் கோயில் வந்ததால் அங்கும், சொரிமுத்தையனார் கோயிலை ஆதாரமாக கொண்ட மற்ற கோயில்களிலும் திருநாமத்தோடே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

11. விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூரில் சங்கிலி பூதத்தாரின் மற்றொரு அம்சமான சங்கிலி வீரப்ப சுவாமிக்கு திருக்கோவில் ஒன்று உண்டு. இங்குள்ள சங்கிலி வீரப்ப சுவாமி வலது கையில் அரிவாளும் இடது கையில் குண்டாந்தடியும் ஏந்தியுள்ளார்.இங்கு மீனாட்சி சமேத சிவனணைந்த போற்றி ,ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிநாராயண சுவாமி ஆகியோருக்கு காவலாக வீற்றிருக்கிறார்.சங்கிலி வீரப்ப சுவாமியுடன் பொன்மாடசுவாமி,ஊனமுத்து சுவாமி எழுந்தருளியுள்ளனர்.இங்கு ஆதிநாராயணனுக்கு எதிரே கருடாழ்வாருக்கு பதிலாக எமதர்மராஜா வீற்றிருப்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும்.

'''மாடசாமி(பொன் மாடன்)  திருவரலாறு'''[தொகு]

ஸ்ரீ பொன்மாடன்
ஸ்ரீ பொன்மாடன்

உலகுக்கு அம்மையும் அப்பனுமாக விளங்கும் சிவனாரும் பார்வதியும் கயிலையிலே வீற்றிருந்தார்கள். அச்சமயத்தில் ஈசனார் "பார்வதி... நான் சென்று உலகின் ஜீவராசிகளுக்கு அவர்களின் வினைப்பயன்படி படியளந்து வருகின்றேன்." என்று சொல்லிப் புறப்பட்டார். ஈசனார் பூலோகத்தில் உள்ள எறும்பு முதலிய சிறிய ஜீவராசிகள் முதற்கொண்டு கருப்பையில் தங்கியிருக்கும் ஜீவன் வரையிலான அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர்தம் வினைப்பயன்படி படியளப்பது ஈசனாரின் வழக்கம். ஈசனார் தன் பணியைத் தவறாமல் செய்கின்றாரா என்று பார்வதியாளுக்கு சந்தேகம். எனவே ஈசனாரை சோதித்துப் பார்ப்போம் என்று முடிவு செய்தாள். எனவே குமிழ் ஒன்றை எடுத்து அதில் ஒரு சிற்றெரும்பைப் பிடித்துப் போட்டாள். அதனுள் காற்றும் புக இயலாது... எனவே இந்த எறும்புக்கு ஈசனார் எப்படிப் படியளப்பார் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் படியளந்த பரமன் கைலாயம் திரும்பினார்.

உமையவள் ஈசனாரிடம் "ஈசனே... தாங்கள் இன்றைக்கு அத்தனை ஜீவராசிகளுக்கும் படியளந்துவிட்டீர்களா?" என்று கேட்டாள்..

"ஆம் தேவி.. அவரவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்பவும், இப்பிறவியில் அவர்கள் செய்து வருகின்ற பாவ புண்ணியங்களுக்கேற்பவும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளித்து விட்டு வந்தேன்" என்றார் பரமன்.

"தங்களின் பணியில் ஒரு உயிரினம் கூட விடுபட்டிருக்காதா?" என்று வினவினாள் அம்மை..

"அதெப்படியாகும்? இந்த பணியில் தவறு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நானே நேரில் சென்று படியளந்து விட்டு வருகின்றேன்" என்றார் இறைவன்.

"இன்றைக்கு நீங்கள் படியளந்ததில் ஓர் உயிரினம் விடுபட்டுவிட்டது"

"ஒருக்காலும் இல்லை.. அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்துவிட்டேன்"

"இல்லை. ஒரு சிற்றெறும்பு விடுபட்டு விட்டது" என்று சொல்லி பார்வதியாள் அந்தக் குமிழைத் திறந்தாள்..

அங்கே அந்த சிற்றெறும்புவின் வாயில் ஓர் அரிசியைக் கவ்விக் கொண்டிருந்தது..

இதைக் கண்டதும் பார்வதியாளுக்குத் தன் தவறு புரிந்தது..

"இறைவா.. என்னை மன்னித்து விடுங்கள்.. நான் தவறு செய்து விட்டேன்... எல்லோருக்கும் படியளக்கும் பரம்பொருளை சோதனை செய்து விட்டேன்" என்று ஈசனாரின் பாதங்களில் வீழ்ந்தாள்..

ஈசனோ கடுங்கோபம் கொண்டார்..

"நீ என் மனைவியாக இருந்தாலும், என்னை சோதனை செய்த படியால், பூலோகம் போ... வனப்பேச்சியாக சுற்றித் திரி..." என்று சாபமிட்டார். (இந்த இடத்தில் வில்லுப்பாட்டு அருமையாக இருக்கும்... கணவனை சோதித்ததால் காட்டுப்பேச்சியாகப் போ.... மன்னனை சோதித்ததால் மயானப் பேச்சியாகப் போ...என்று அழகாகப் பாடுவார்கள்)

மனமுடைந்த அம்மை அழுது புலம்பினாள்..

"இந்த சாபத்திற்கு விமோசனம் எப்போது தருவீர்கள்?" என்று ஈசனைக் கேட்டாள்..

"நீ என்னை நினைத்து மயானத்தில் நின்று தவம் செய்.. உரியகாலத்தில் யாமே வந்து உன்னை மீட்போம்" என்று சொல்லி பார்வதியாளை பூலோகம் அனுப்பினார்..

மயான பூமியில் அம்மை பேச்சியம்மனாக அமர்ந்தாள்.. மனம் ஒன்றி ஈசனை எண்ணி மாதவம் புரிந்தாள்..

அம்மையின் தவத்தைக் கண்ட ஈசன் இரங்கினார்.. அம்மை முன் தோன்றினார்.  அவள் சாபத்தை நீக்கினார்...

"தேவி.. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று சொல்ல

தேவியும் "ஐயனே... தாங்கள் எனக்கு இரு புதல்வர்களை அளித்தீர்கள்.. அவர்களும் தங்கள் வயது வந்த பின்னே என்னை விட்டுப் போய்விட்டார்கள்.. தாங்களும் படியளக்கிறேன் என்று சொல்லி என்னைத் தனியே விட்டுப் போய்விடுகின்றீர்கள்.. எனவே எனக்கு ஓர் ஆண் குழந்தை வேண்டும். இப்பொழுதே வேண்டும்" என்று வேண்டினாள்..

ஈசனாரும், "தேவி..பார் அங்கே... மயானத்தில் பிணம் எரிகின்றதல்லவா.. அப்பிணம் கொடுஞ்சுடராக எரிகையில் நீ அங்கே நின்று என்னை நினைத்து உன் முந்தானையை ஏந்து...உனக்கு ஓர் ஆண்குழந்தை பிறக்கும். நீ குழந்தையை எடுத்துக் கொண்டு கைலாயம் வந்து சேர்வாயாக" என்று சொல்லி மறைந்து விட்டாள்.

பேச்சியம்மனும் அதைப்போல் பிணமொன்று கொடுஞ்சுடராக எரியும் வேளையில் அருகில் சென்று தன் முந்தானையை ஏந்த அவள் மடியில் சுடலை முத்துக்கள் தெரித்து விழுந்தன. அவை உறுப்புகள் ஏதுமற்ற ஓர் சதைப் பிண்டமாக பேச்சியம்மாளின் மடியில் இணைந்தன.. பிண்டத்திற்கு உயிர் உள்ளது.. ஆனால் எந்த உறுப்புகளும் இல்லையே என்று கலங்கிய பேச்சி மீண்டும் ஈசனை நினைத்து அழுதாள். "பிள்ளை வரங்கேட்ட எனக்கு இந்த முண்டத்தைத் தந்து விட்டீர்களே" என்று புலம்ப ஈசனார் தோன்றி அப்பிண்டத்திற்கு உறுப்புகளை அளித்து அழகியதோர் ஆண்குழந்தையாக மாற்றி அம்மையிடம் தந்தருளினார்...

அம்மையும் முண்டமாகப் பிறந்த அந்தக் குழந்தைக்கு முண்டனென்றும், சுடலைமுத்துக்களால் பிறந்ததால் சுடலைமாடன் என்றும் பெயர் கொடுத்தாள்...

பின்னர் அம்மயானத்திலேயே பிள்ளைக்கு அமுது ஊட்டினாள். பிறகு தன் குழந்தையை எடுத்துக் கொண்டு கயிலாயம் வந்து சேர்ந்தாள்.

அன்னையுடன் கயிலாயம் வந்த சுடலை நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தான்.

அன்னையின் அமுதுண்டு வளர்ந்துவந்த சுடலைக்கு வயிற்றுப்பசி தீரவில்லை..

ஓர் நாள்.. நடுசாமம்..

பார்வதியாள் சுடலைக்கு அமுதூட்டிவிட்டு படுக்கைக்கு சென்று விட்டாள்.

நடுசாமத்திலே சுடுகாட்டில் பிணமொன்று எரிந்து கொண்டிருந்தது... அந்த வாசனை கயிலாயத்தின் தொட்டிலில் படுத்திருந்த குழந்தைக்கு எட்டியது..

சுடலை நினைத்தான் "நம் அம்மா ஊட்டும் அமுது நமக்குப் போதாது.. நாம் சென்று எரியும் இப்பிணத்தைத் தின்று வருவோம்" என்று..

தொட்டிலில் இருந்து இறங்கிய சுடலை சுடுகாடு சென்று எரியும் பிணங்களைத் தின்றான். அங்கே சுற்றித் திரியும் பேய்களுக்கும் உணவளித்தான். பேய்களோடு பேயாக சுடலை அங்கே நடனமாடினான்...

தன் தாய் தன்னைத் தேடும் வேளை வந்த போது கயிலாயம் சென்று தொட்டிலில் குழந்தையாகப் படுத்து விட்டான்.

அதோடு மட்டுமல்ல... பசியில் அழும் குழந்தைபோல் சுடலை அழ ஆரம்பித்தான்..

தன் குழந்தையின் அழுகையைக் கேட்ட பார்வதியாளும் ஓடிவந்தாள்..

வந்தவள் குழந்தையை எடுத்து அணைத்தாள்... அப்போது குழந்தையின் மேல் பிணவாடை வீசியது... இதைக் கண்ட பார்வதியாள் திகைப்படைந்து அழுதாள்.. "உம்மிடம் குழந்தை வரம் கேட்டால், இப்படிப் பிணந்திண்ணும் பேயை எனக்குத் தந்து விட்டீரே" என்று ஈசனாரிடம் கதறினாள்..

ஈசனாரும் "பிணத்தைத் தின்று வந்து விட்டதால் சைவமான என் கயிலாயத்திற்கு இவன் ஆகமாட்டான். எனவே இவனை பூலோகம் அனுப்பி வைக்க வேண்டும்" என்று சொல்லி சுடலையை அழைத்தார்.

"மகனே... நீ பூலோகம் செல்லும் காலம் வந்து விட்டது.. உனக்கு அங்கு பணிகள் பல உள்ளன.. எனவே நீ பூலோகம் செல்" என்று பணித்தார்.

சுடலையும் "ஐயனே.. என்னைப் பெற்றெடுத்த நீங்களே என்னை அனுப்பும்போது என்னால் என்ன செய்ய இயலும்.? நான் செல்கிறேன்.. ஆனால் என் பசிக்கு நான் என்ன செய்வேன்... நித்தம் நித்தம் பிணங்களை எதிர்பார்த்து வாழ இயலுமா?" என்றான்.

ஈசனாரும் "மாய உருக்கொண்டு பிறந்த மாயாண்டி சுடலையே...நீ பூலோகம் சென்றதும் நானே உன்னை வழி நடத்துவேன்.. பூலோகத்தார் உனக்குக் கொடை விழா கொடுக்க நான் ஏற்பாடு செய்கின்றேன்.. நீ போகலாம்" என்றார்.

தந்தை பரமனார் தன்னைக் கைலாயத்தை விட்டுப் போ என்று சொன்னவுடன் மகன்

சுடலை திகைத்தான்.. "ஐயனே.. என்னைப் பெற்றெடுத்து பேர்கொடுத்த நீங்களே

போகச்சொன்ன பிறகு நான் என்ன செய்வேன்...? நான் போகிறேன்.. எனக்குக் கொடை

கொடுத்து வரமளிக்க வேண்டும்" என்றான்.. சுடலைக்கு அப்போது வயது ஐந்து..

"உனக்கு எப்படிப் பட்ட கொடை வேண்டும்?" என்று ஈசனார் கேட்டார்.

"எட்டாத பரண் போட்டு அதில் எட்டு அடுக்குகளில் எனக்குப் படையல் இட

வேண்டும். ஒரு பரணில் ஒரு கோட்டை புழுங்கல் அரிசி சோறும், ஒரு பரணில்

சூலி ஆடுகளும், ஒரு பரணில் சூலி எருமைகளும், ஒரு பரணில் சூலி

பன்றிகளுமாக, உயிர்ப்பலிகள் படையல் இடவேண்டும்."என்று கேட்டான்.

இதைக் கேட்டதும் கைலாயம் அதிர்ச்சியானது.

சுத்த சைவக் கோட்டையான கைலாயத்தில் அசைவப் படையலா? அதுவும் ஈசனாரிடமே

இவன் கேட்டு விட்டானே என்று அத்தனை தேவாதிதேவர்களும் மலைத்தனர்.

உமையவளுக்கோ தன் பிள்ளை இப்படிப் பிணந்திண்ணிப் பிள்ளையாகி விட்டானே என்ற

வருத்தம்.

ஈசனும் இசைந்தார்.

சைவக்கோட்டையான கைலாயத்தில் அன்று மாடனுக்கு அசைவப் படையல். அதுவும் ஈசனே

ஏற்பாடு செய்தது... தேவாதி தேவர்கள் முன்னிலையில் அத்தனைப் படையல்களையும்

ஏற்றான். நடனமாடினான்... தேவமங்கைகளும் நடனமாடினர்... இறுதியில்

ஈசனாரிடம் "இந்தப் பலிகள் எனக்குப் போதாது. எனக்கு நரபலி வேண்டும்" என்று

கேட்டான்... ஈசனோ மௌனமாக தன் காலால் தரையைத் தேய்த்தார்.. அங்கே

தேவகணியன் தோன்றினான்.. தன் மகுடத்தை இசைத்து மாடனை மகிழ்வித்தான்..

ஆடினான்.. அவன் ஆட்டத்தில் மயங்கினான் மாடன்...

தன் கையைக் கிழித்தும், நாக்கைக் கிழித்தும் இரத்தத்தை மாடனுக்குப்

பலியாகக் கொடுத்தான். அதையே நரபலியாக ஏற்ற மாடனும் ஈசனாரிடம் வந்து

மீண்டும் வரம் கேட்டான்..

"ஓயாத பேய்களை அடக்கும் வரம் வேண்டும். தர்க்கம் செய்யும் பேய்களை நான்

தடிகொண்டு ஓட்ட வேண்டும். நான் கொடுக்கும் மயான சாம்பலால் தீராத

நோய்களெல்லாம் தீர்ந்து போக வேண்டும். நல்லவர்கள் என்னைப்

பணியாவிட்டாலும் அவர்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும். கெட்டவர்கள்

என் பாதம் பணிந்தாலும் அவர்களை நான் கருவறுக்க வரம் வேண்டும்" என்று

சுடலை கேட்டான்.

மகன் சொல்லுக்கு தந்தையும் செவிமடுத்தார்.. "தந்தேன் மகனே... நீ

செல்லலாம்" என்று அவனை வழியனுப்பி வைத்தார்.

ஈசனிடம் வரம் வாங்கிய நம் சுடலைமாடசுவாமி கயிலாயத்தின் தென்வாசல் வழியாக

வெளியேறினார்..(வரம் வாங்கியவரை மரியாதையோடு அழைப்போம்).

வீராவேசமாக, கையில் வல்லயம், வீச்சரிவாள், பொந்தந்தடியை ஏந்தி வல்லவனாம்

மாயன் சுடலையாண்டி பூலோகம் வந்து சேர்ந்தார்.

திருக்கேதாரம் தொடங்கி சிவாலயங்களில் சென்று வழிபாடு செய்தார். காசியின்

புனித தீர்த்தங்களில் நீராடி வடநாட்டுப் புண்ணியதலங்களையெல்லாம்

தரிசித்து விட்டு நம் தென்னாடு நோக்கி வந்தார் சுடலை ஈசன்.

தென்னாட்டில் காஞ்சியில் அய்யனையும் அம்மை காமாட்சியையும் கண்டு

வணங்கினார். திருவண்ணாமலை சென்று அண்ணாமலையானையும், உண்ணாமுலையாளையும்

வணங்கி அருள் பெற்றார். வேங்கடமலை சென்று திருவேங்கடநாதனையும்

அன்னையையும் வழிபட்டார். இவ்வாறாக புண்ணிய தலங்கள் எல்லாம் சென்றுவழிபட்ட

சுவாமி நம் பாண்டி மாதேசம் வந்து சேர்ந்தார்.

மதுரைமாநகரில் ஈசனால் ஏற்படுத்தப்பட்ட புண்ணியநதியாம் வைகையில் நீராடி

சோமசுந்தரக் கடவுளையும், அன்னை மீனாட்சியையும் வணங்கினார். இவ்வாறாக

சிவாலயங்கள் 1008ம் திருப்பதிகள் 108ம் தரிசனம் செய்த சுவாமி மலையாள

தேசம் நோக்கி வந்தார்.

அங்கே குருவாயூர், திருவனந்தபுரம் என்ற புண்ணியதலங்களைத் தரிசனம் செய்து

விட்டு வரும் வழியில் பேச்சிப்பாறை அருகே கொட்டாரக் கரை என்ற ஊரை

வந்தடைந்தார்...

சுடலைமாட சுவாமி கொட்டாரக்கரை வந்து சேர்ந்த சமயத்தில் அங்கே கோயில்

கொண்டிருந்த அன்னை பகவதிக்குத் திருவிழா...

தேரோட்டம் சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.. தேரிலே சிம்மக்

கொடியைக் கண்டதும் தன் தாய்க்குத்தான் திருவிழா நடக்கிறது என்று அறிந்த

சுடலையாண்டவர் இவளிடம் அடைக்கலம் கேட்போம் என்று அவளை வணங்கி நின்றார்...

தேரில் பவனி வந்த அன்னையோ சுடலைமாடனைக் கவனிக்கவில்லை. அமைதியாக

இருந்தால் நம் அன்னை நம்மைக் கவனிக்க மாட்டாளென்று எண்ணி அட்டகாசம் செய்ய

முடிவுசெய்தார்.

ஒரே பாய்ச்சலாக தேரில் பாய்ந்தார். தேரின் அச்சு முறிந்தது...

தேரோட்டத்தைக் காணாமல் தேவதாசியின் ஆட்டத்தைக் கண்டு களித்துக்

கொண்டிருந்த ஒருவனது தலையைப் பிடுங்கி எறிந்தார். அது தேவதாசியின் மேல்

பட்டதால் அவளும் இறந்தாள்... அன்னைக்கு அன்றாடம் பூசைகள் செய்து வரும்

அந்தணரை ஒரே அடி... அவரும் மிரண்டு அன்னையிடம் ஓடினார்...

"தாயே பகவதி... அன்றாடம் உனக்குப் பூசனைகள் செய்து வருகின்றேன்.. என்னை

ஒருவன் அடித்துவிட்டான்.. கண் கொண்டு பாரம்மா" என்று அழ, அன்னை

வெகுண்டெழுந்தாள்..

இதற்குள் பகவதியில் கோட்டைக்குள் புகுந்துவிட்ட சுடலைமாடன் கோட்டையிலே

பொல்லாத அட்டகாசம் செய்தார். கொடிமரத்தை ஆட்டுவதும், கோபுரத்தில் நின்று

ஆடுவதுமாக செய்த அட்டகாசத்தைக் கண்ட அன்னை பகவதிக்குப் பொறுக்கவில்லை..

"யாரடா அது என் கோட்டைக்குள் அத்து மீறியது?" என்று கோபத்தோடு கிளம்பி

வந்தாள்..

தன்னை இந்தக் கோலத்தில் கண்டால், அன்னையின் கோபம் ஆறாது என்று எண்ணிய

சுடலைமாட சுவாமி ஏழு வயது பாலகனாக உருக்கொண்டு நடந்து வந்தார்...

பாலகனைக் கண்டதும் அன்னைக்குப் பாசம் வந்து விட்டது.. இந்தச்சிறுவனா என்

கோட்டையில் அட்டகாசம் செய்தது என்று எண்ணிய அன்னை அவரிடம் விசாரித்தாள்..

"பாலகா... உன் பெயர் என்ன? உன் பெற்றோர் யார்?" அன்னையின் அமுதமொழி கேட்ட

தனயனும் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறினார்.

"அம்மையே.. என்னைப் பெற்றெடுத்தாள் பார்வதியாள்.. பேர் கொடுத்தார்

பரமசிவன்.. பிறந்தது சுடலையில், வளர்ந்தது கைலாயத்தில்.. என்னைப்

பெற்றவர்கள் என்னை ஆகாதென்று விரட்டி விட்டனர். என்னை ஆதரிப்பார்கள்

யாரும் இல்லை... பூலோகத்தில் தஞ்சம் கேட்டு உன்னை நாடி வந்தேன்" என்று

சுடலை மாட சுவாமி தெரிவித்தார்.

"பார்வதியாள் பெற்றெடுத்தாள் என்ன? இந்த பகவதியாள் பெற்றெடுத்தாள் என்ன?

மகனே.. நீயும் என் மகன்தானப்பா..உனக்கு அடைக்கலம் தந்தோம்.. உனக்கு

வேண்டியதைத் தந்து பசியாற்றுவோம்." என்றாள் அம்மை பகவதி.

"அம்மா... உன் ஆலயத்தை நான் தினந்தோறும் பார்க்கின்றேன்.. உனக்கு

பச்சரிசி சாதத்தைத் தவிர வேறொன்றும் படைக்கக் காணோம்.. இதைத் தின்றால்

எனக்குப் பசியடங்காது.." என்றார் சுடலைமாடன்.

"உனக்கு வேறென்ன வேண்டும் கேள்" என்று பகவதியாள் கேட்க, "ஒரு கோட்டைப்

புழுங்கலரிசியில் சோறு பொங்கி ஒரே படையலாக இடவேண்டும்" என்றார் சுடலை

ஈசன்.

"அப்படியே தந்தோம்" என்று சொல்லி அன்னையும் சுடலைக்குப் படையல் இட

ஏற்பாடு செய்தாள். மேலும் அவளது ஆலயத்தின் ஈசான மூலையில் உள்ள ஏழு கடாரம்

தங்கத்தைக் காவல் காக்கும் பொறுப்பையும் சுடலையிடம் ஒப்படைத்தாள்.

படையலைத் தின்ற சுவாமிக்குப் பசி அடங்கவில்லை.. எனவே அன்னையின்

ஆலயத்துக்கு வரும் கொடியவர்களைக் கொன்று தின்ன ஆரம்பித்தார்.

இதைக் கண்ட பகவதிக்குப் பொறுக்கவில்லை "மகனே இங்கே பார்... என்னை நாடி

வருவோர் கெட்டோர்களென்றாலும், நல்லோர்களென்றாலும் அவர்களைக் காப்பது என்

கடமை.. நீ அவர்களை வதம் செய்யக் கூடாது" என்று எச்சரித்தாள். இதைக் கேட்ட

மாடனோ "அம்மையே நீ தரும் சைவப் படையல் எனக்குப் போதவில்லை..

என்ன செய்வது

என்னைப் படைத்த ஈசன் இப்படிப் படைத்து விட்டார்.. நாளையிலிருந்து நான்

மயானத்திற்கு வேட்டைக்குச் செல்கின்றேன். செவ்வாய் மற்றும் வெள்ளி

இரவுகளில் நான் வேட்டைக்குச் செல்ல அனுமதி கொடுக்க வேண்டும்" என்று

கேட்டார்.

அம்மையும் அனுமதி அளித்தாள்.

இவ்வாறாக மாடன் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மயான வேட்டைக்குச்

செல்வதும், அன்னையின் புதையலுக்குக் காவல் இருப்பதுமாகத் தனது நாட்களைக்

கழித்து வந்தார். பிறகு மற்ற ஊர்களுக்கும் சென்று பல திருவிளையாடல்களை நடத்தினார்.மாடனுக்கு கோவில் கண்டுள்ள இடங்களில் மருளாடியினுள் புகுந்து மயான வேட்டைக்கு சென்று வருகிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரத்திலுள்ள ஆதிநாராயணன் சிவன் சங்கிலி வீரப்ப சுவாமி திருக்கோவிலில் உள்ள மாடனுக்கு படைப்பு பூஜையின் போது அசைவம் படைக்கப்படுவதில்லை

ஸ்ரீ ஊனமுத்து
ஸ்ரீ ஊனமுத்து

ஸ்ரீ ஊனமுத்து வரலாறு:-[தொகு]

கருப்பசாமியின் அவதாரமான  ஊனமுத்து இக்கோவிலில் ஊனமான நிலையில் காட்சி தருகிறார் சங்கிலி வீரப்ப சுவாமிக்கும் பொன்மாடனுக்கும் உறுதுணையாக இருந்து காவல் காக்கிறார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Aadhisivansangili/sandbox&oldid=2266951" இலிருந்து மீள்விக்கப்பட்டது