பயனர்:ARUNKUMAR S.K/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                                    பழந்தமிழரின் நீர் மேலாண்மை
  
      அறிவியல் வளர்ச்சியின்  யுகமாகவும் தொழில்நுட்ப மேம்பாட்டின் நுாற்றாண்டாகவும் கருதப்படும் இந்த 21ம் நுாற்றாண்டில்தான் ஒருநாள் மழைக்கே நம் தமிழ்நாட்டுத் தலைநகரே தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது.நம்முடைய பழங்கால நீர்மேலாண்மை முறைகளை நாம் புறக்கணித்ததே இதற்கு முக்கியக்காரணம் என்று கூறலாம்.தமிழ்நாடு 70 விழுக்காடு பாறைப்பகுதிகளைக் கொண்டுள்ள நிலப்பரப்பு என்று புவியியலாளர்கள் கூறுகின்றனர்.இங்கு நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்தல் முடியாது.இந்த உண்மையை உணர்ந்திருந்த நம் முன்னோர்கள் ஆண்டிற்குச் சில மாதங்களே பெய்யும் மழைநீரைத் தேக்கி வைக்கவும்,பயன்படுத்தவும் சிறந்த கட்டுமானங்களைப் பயன்படுத்தினர்.மழை வெள்ளம் வீணாகாமலிருக்க ஏரிகளை வெட்டினர்.அந்த ஏரிகளும் மேட்டுநிலத்திலிருந்து பள்ளத்திற்கு நீர் வரும் வகையில் வடிகால் வசதிகளுடன் கட்டப்பட்டன.மேலிருக்கும் ஏரி நிறைந்ததும் உபரி நீர் அடுத்த ஏரிக்கு வருவது போல அமைத்திருந்தனர்.மழைக்காலத்திற்கு முன்னரும்,மழையின்போதும் நீர் நிலைகளையும் வாய்க்கால்களையும் பராமரிக்க "குடிமராமத்து"[1] முறை வழக்கில் இருந்தது.குடும்பத்துக்கு ஒருவர்வீதம் நீர்நிலை பராமரிப்புக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் குடிமராமத்து முறை.இதுபோல் ஆற்றில் வெள்ளம் வரும்போது ஊருக்குள் நீர்புகாமலிருக்க ஏற்ற முறையில் வெள்ள நீர் வாய்க்கால்களும் அமைத்திருந்தனர்.ஏரி,குளங்களின் மதகுகள்,கலிங்குகள் அமைத்து நீரின் வரத்தைக கட்டுப்படுத்தி நீர்வழிப்பாதைகளைப பராமரித்து இயற்கையின் பேராற்றலைத் தம் வாழ்வுக்கு ஏற்றவகையில் பயன்படுத்தி வாழ்ந்த நம் முன்னோர்களின் நீர் மேலாண்மை முறைகளை உணர்ந்து அதற்கேற்ப நம் செயல்களை மாற்றிக் கொண்டால் இனியாவது மழைத்துயரங்களில் இருந்து நாம் மீளலாம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ARUNKUMAR_S.K/மணல்தொட்டி&oldid=1971217" இலிருந்து மீள்விக்கப்பட்டது