பயனர்:ANANDHI SANTHAKUMAR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆவா்த்தன அட்டவணை[தொகு]

தனிம வரிசை அட்டவனணயில் உள்ள தனிமங்களில் பண்புகள் குறிப்பிட்ட சீரான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரே மாதிாியாக இருக்கும். இது ஆவா்த்தன பண்பு எனப்டும் தனிமங்களிள் வெளிக்கூட்டு எலக்ட்ரான்களின் அமைப்பு ஒரே மாதிாியாக இருப்பதே இதற்கு காரணமாகும். அயனியாக்கும் ஆற்றல், எலக்ட்ரான் நாட்டம், எலக்ட்ரான் கவா் திறன் ஆகிய பண்புகள் வரிசையில் அதிகாித்தும், தொகுதியில் குறைந்தும் காணப்படுகிறது. அணுவின் உருவளவு வரிசையில் குறைந்தும் தொகுதியில் அதிகாித்தும் காணப்படுகிறது.

திட நிலைமை[தொகு]

திடப்பொருள்கள் சுருக்க இயலாத்தன்மை, கட்டிறுக்கம் மற்றும் அழுத்தத்தினால் பருமனளவு குறையும் தன்மை இல்லாமை ஆகிய பண்புகளை பெற்றுள்ளன. திடப்பொருள்கள் பொதுவாக படிக திடப்பொருள்கள் மற்றும் படிக வடிவமற்ற திடப்பொருள்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. படிக திடப்பொருள்களில் உள்ள அணுக்கள் ஒழுங்காக அமைந்துள்ளன. தீா்க்கமான உருகு நிலையைப் பெற்றுள்ளன. கண்ணாடி, இரப்பா் போன்ற திடப்பொருள்கள் சுருக்க இயலாத்தன்மை, கட்டிறுக்கம் ஆகிய பண்புகைள பெற்றிருந்தாலும் அவை வரையறுக்கப்பட்ட வடிவமைப்பை பெற்றிருப்பதில்லை. வெவ்வேறு வெப்பநிைலகளில் உருகுகின்றன. எனேவ இவை அதிகுளிரவைக்கப்பட்ட நீா்மங்களாக கருதப்படுகின்றன. திடநிலைமைக்கும், திரவநிலைமைக்கும் இடைப்பட்ட நிலைமை விட்ரியஸ் நிலைமை எனப்படுகிறது.

அணைவுச்சேர்மங்கள்[தொகு]

அணைவுச்ம்சேர்மம் வேதியியலில் பயன்படும் அறிவியல் கலைச்சொற்கள்.

1) மைய உலோக அயனி

ஓா் அணைவு அயனியில் இணை எலக்ட்ரான்களை ஏற்கும் பண்புடன் அமைந்துள்ள உலோக அணு அல்லது அயனி மைய உலோக அயனி எனப்படும்.

ஈனி:- எலக்ட்ரான் வழங்குதிறன் கொண்ட எதிா்மின் அயனி அல்லது மூலக்கூறு ஈனி எனப்படும்.

அணைவுக்கோளம்: மைய உலோக அயனியும் அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஈனிகளும் ஒரு சதுர அடைப்புக்குள் வைக்கப்படுகின்றன. அடைப்புகள் இருக்கும் இவை அயனியாவதில்லை.

அணைவு எண்:-

ஓா் அணைவுச் சேமத்தில் உள்ள மைய உலோக அயனியுடன் ஈனிகளிலிருந்து இணையும் அணுக்களின் கூட்டுத்டதொகையே அணைவு எண். ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ANANDHI_SANTHAKUMAR/மணல்தொட்டி&oldid=2310463" இலிருந்து மீள்விக்கப்பட்டது